Top posting users this month
No user |
Similar topics
தவலை அடை
Page 1 of 1
தவலை அடை
தேவையானவை :
பச்சரிசி – 1 ஆழாக்கு
துவரம் பருப்பு – 5 டீஸ்பூன்
கடலை பருப்பு – 5 டீஸ்பூன்
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
இந்த சாமான்களை மாவு மிஷினில் கொடுத்து , ரவையாக அரைத்துக் கொள்ளவும் அல்லது மிக்ஸியில் ரவையாக உடைத்துக் கொள்ளவும் .
இப்போது இந்த ரவையுடன், உப்பு – தேவையான அளவு
தேங்காய் துருவல் – ஒரு மூடி (தேங்காய் ), தேவையான அளவு எண்ணை , இவையும் தேவை
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் தண்ணீர் வைத்து , அது பொங்கும் போது , உப்பையும் , தேங்காய் துருவலையும் போட்டு , பிறகு , அரைத்து வைத்த ரவையையும் போட்டு , அடி பிடிக்காமல் , நன்கு கிளறவும் . ஒரு 2 அல்லது 3 நிமிடங்கள் கிளற வேண்டும் . அதை எடுத்து வைத்து விடவும் .
பிறகு அதை , எலுமிச்சம் பழ அளவுக்கு உருண்டைகளாக உருட்டி , வடை போல இலையில் தட்டி , நடுவில் துளை செய்து , ஒரு வாணலியிலோ அல்லது தோசைக் கல்லிலோ 3 , 4 அடைகளைப் போட்டு , ஒவ்வொரு அடையைச் சுற்றிலும் ஒரு ஸ்பூன் எண்ணை விட்டு , இரு பக்கமும் திருப்பிப் போட்டு மீண்டும் எண்ணை விட்டு , ஒரு மூடியால் மூடி வைக்கவும்.
சிறிது நேரத்தில், வெந்த வுடன் எடுக்கவும் .
அடுப்பை சிம்மிலேயே வைத்துச் செய்யவும் . அப்போதுதான் வேகும் .
இப்போது நல்ல கிரிஸ்பி தவலை அடை தயார்.
இது வித்தியாசமான கட்லெட் போல இருக்கும் .

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum