Top posting users this month
No user |
Similar topics
அப்பாவி மக்களின் நலனைச் சுரண்டுவதற்கு அரசியல்வாதிகளுக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்! மைத்திரி உறுதி
Page 1 of 1

நாட்டில் வறுமையை ஒழித்துக்கட்டும் வகையில் குறைந்த வருமானங்களைப் பெறும் குடும்பங்களின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக ஒரு புதிய நிகழ்ச்சித்திட்டத்தை அரசு ஆரம்பிக்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இந்த நாட்டில் அப்பாவி மக்களின் நலன்களைச் சுரண்டுவதற்கு அரசியல்வாதிகளுக்குத் தான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மக்களுக்காக அவர்களது நலநோம்புகை நடவடிக்கைகளுக்கு அரசு ஒதுக்கும் ஒவ்வொரு சதத்தையும் முதலீடு செய்யும் வகையில் ஒரு நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
சுகததாச உள்ளக அரங்கில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அரச சேவை முகாமைத்துவ உதவியாளர்கள் 2700 பேர்களுக்கு நியமனங்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நலநோம்புகை முறைமைகளில் குறைபாடுகள் உள்ளன. அக்குறைபாடுகளை நான் அமைச்சருடன் கலந்துரையாடி சரி செய்யவுள்ளேன்.
தங்களிடம் சேவைகளை நாடிவரும் மக்களுக்கு வினைத்திறன் மிக்க சேவைகளை வழங்குவது அரச அதிகாரிகளின் பொறுப்பாகும்.
இலங்கையில் அரச சேவையை ஊழல், மோசடி, வீண்விரயம் இல்லாத ஒரு சேவையாகக் கட்டியெழுப்புவதற்கு புதிய அரசு அர்ப்பணிப்போடு உள்ளது" என்றார்.
2014 - 2015ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு மூன்று வாரப் பயிற்சியின் பின்னர் அரச சேவை முகாமைத்துவ உதவியாளர்களுக்கான நியமனங்கள் நேற்று கையளிக்கப்பட்டன.
அரச சேவை முகாமைத்துவத்திற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்குத் தோற்றிய மேலும் 1061 அதிகாரிகள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். அந்தவகையில். பல்வேறு அமைச்சுகள் திணைக்களங்களில் நிலவும் முகாமைத்துவ உதவியாளர்களுக்கான 80 வீத வெற்றிடங்கள் இதன் மூலம் நிரப்பப்படவுள்ளது.
அரச நிர்வாகம், முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, அமைச்சின் செயலாளர் ஜே தடல்லகே ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு: யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி உறுதி
» செப்டெம்பரில் புதிய அரசு மைத்திரி கெரியிடம் உறுதி
» மைத்திரி ஆட்சி தொடர்ந்தால் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படும்: இரா.சம்பந்தன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum