Top posting users this month
No user |
Similar topics
மகிந்த - மைத்திரி சந்திப்பு மீண்டும் இடம்பெறும்: குமார வெல்கம உறுதி
Page 1 of 1

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இடையில் சந்திப்பு இடம்பெறாமைக்கு காரணம் குறித்த தினத்தில், மகிந்த ராஜபக்சவால் கலந்து கொள்ள முடியாமல் போனமையே என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் சற்றுநேரத்திற்கு முன் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இருவருக்கும் இடையிலான சந்திப்பை அடுத்த மாதம், வேறு தினத்தில் நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார் எனவும் அவர் கூறியுள்ளார்.
சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள், ஜனாதிபதிக்கு ஆதரவாகவும், முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு ஆதரவாகவும் இரண்டு குழுக்களாக பிளவுப்பட்டு இருப்பது குறித்து கடந்த சில நாட்களாக அதிகமாக பேசப்பட்டதனை தொடர்ந்தே இவ்விருவருக்கும் இடையில் சந்திப்பு நடத்துவதற்கு ஆயத்தப்படுத்தப்பட்டது.
எனினும் குறித்த சந்திப்பானது இடம் பெறவில்லை. எனவே மீண்டும் இவ்விருவருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
மேலும், நிதி மோசடி விசாரணைப் பிரிவிலுள்ள புதிய பொலிஸ் பிரிவு தொடர்பில் ஆராய்ந்து, அது தகுதியற்றதாயின் நீக்க நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன குறிப்பிட்டார்.
இதேவேளை நிதி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மத்திய வங்கி ஆளுனரை நீக்குமாறு சபாநாயகரிடம் நேற்று மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மைத்திரி - மகிந்த சந்திப்பு! மனமுடைந்த சந்திரிக்கா!
» மைத்திரி – மகிந்த சந்திப்பு வரலாற்று கேலி: அசாத் சாலி
» சிங்கம் போல் கையெழுத்திட்டவர்கள் இன்று நரியானார்கள்: குமார வெல்கம

Permissions in this forum:
You cannot reply to topics in this forum