Top posting users this month
No user |
Similar topics
முட்டை முருங்கைக்கீரை பொறியல்
Page 1 of 1
முட்டை முருங்கைக்கீரை பொறியல்
தேவையான பொருள்கள்:
முருங்கைக்கீரை - இரண்டு கட்டு
வெங்காயம் - நான்கு
காய்ந்தமிளகாய் - ஆறு
பூண்டு - நான்கு பல்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - சிறிதளவு
கடலை பருப்பு - இரண்டு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - இரண்டு தேக்கரண்டி
முட்டை - 4
செய்யும் முறை:
முருங்கைக் கீரையை சுத்தம் செய்து நன்கு அலசி வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். பின்பு உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும்.
பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். பின்பு அலசி வைத்திருக்கும் முருங்கைக் கீரையைப் போடவும். பூண்டு தட்டி போட்டு உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.
முட்டைகளை உடைத்து அடித்து வைத்து கொள்ள வேண்டும். தண்ணீர் வற்றி வெந்து வந்ததும் அடித்து வைத்திருக்கும் முட்டைகளை ஊற்றி ஒரு நிமிடம் வைத்து பிறகு கிளறி விடவும்.
கீரையுடன் முட்டையும் கலந்து வரும் வரை கிளறி இறக்கவும். சூடாக சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum