Top posting users this month
No user |
Similar topics
முருங்கைக்கீரை முட்டை பொரியல்
Page 1 of 1
முருங்கைக்கீரை முட்டை பொரியல்
முருங்கைக்கீரை - 3 கப்
முட்டை - 2
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - ஒன்று
மிளகாய் வற்றல் - 3
கல் உப்பு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
பெரிய வெங்காயத்தை தோல் உரித்து விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். முருங்கைக்கீரையை சுத்தம் செய்து ஆய்ந்து ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசிக் கொள்ளவும். மிளகாயை இரண்டாக கிள்ளி வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக
எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து அதனுடன் இரண்டாக கிள்ளிய மிளகாய் வற்றலை போட்டு வதக்கவும்.
அதன் பிறகு அதில் உளுத்தம் பருப்பு போட்டு சிவந்ததும் நறுக்கின வெங்காயம் மற்றும் உப்பு போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் பிறகு அலசிய முருங்கைக்கீரையை போட்டு கால் கப் தண்ணீரை மேலே தெளித்து விட்டு ஒரு முறை நன்கு பிரட்டி விடவும்.
பின்னர் ஒரு தட்டை வைத்து மூடி 4 நிமிடம் வேக வைக்கவும். கீரை நன்கு வேகும் வரை மூடி வைத்திருக்கவும்.
பிறகு வெந்ததும் திறந்து நன்கு பிரட்டி விட்டு அதில் இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறி விடவும்.
முட்டை கீரையுடன் சேரும் படி நன்கு பிரட்டி விட்டு 5 நிமிடம் கழித்து இறக்கி விடவும். விருப்பப்பட்டால் மேலே அரைத் தேக்கரண்டி மிளகு சீரகத் தூள் சேர்க்கலாம்.
சுவையான முருங்கைக்கீரை முட்டை பொரியல் தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum