Top posting users this month
No user |
Similar topics
ஈழத் தமிழர்கள் பட்டுள்ள ஆழமான காயங்களுக்கு ஐ.நா தீர்மானம் உரிய மருந்தாகாது: கருணாநிதி
Page 1 of 1

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம், ஈழத் தமிழர்கள் பட்டுள்ள ஆழமான காயங்களுக்கு உரிய மருந்தாகாது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா தொடக்கத்தில் கொண்டு வந்த தீர்மானத்தில் இருந்த “சர்வதேச” என்ற சொல் இந்தத் தீர்மானத்தில் நீக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார்.
உலகத்தின் பல்வேறு விசாரணை அமைப்புகளாலும் இதுவரை ஏற்றுக் கொள்ளப்பட்ட இனப்படுகொலை பற்றி இந்தத் தீர்மானத்தில் எதுவும் இடம் பெறவில்லை.
கொடுமையிலும் கொடுமையாக, அந்தப் போர்க்குற்றங்களைச் செய்த சிங்களப் பேரினவாத இலங்கைக்கு ஆதரவாக இந்தியாவும் மவுனம் சாதித்துள்ளது.
இதன் மூலம் நாடற்றவர்கள் நாதியற்றவர்களாகி விட்டநிலை தான் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில், உலகத் தமிழ் அமைப்புகளின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக நிறைவேற்றப்பட்டுள்ள நீர்த்துப் போன தீர்மானத்தை, இலங்கை அரசு முழு மனதோடு நேர்மையாக நிறைவேற்றுமா என்பது ஐயப்பாட்டுக்கு உரியது தான்.
தமிழர்களுக்கு முழுமையான அளவுக்கு நிறைவையோ, நம்பிக்கையையோ தரக்கூடிய ஒன்றல்ல என்றும், இந்தத் தீர்மானம், ஈழத் தமிழர்கள் பட்டுள்ள ஆழமான காயங்களுக்கு உரிய மருந்தாகாது என தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஆழமான கிணற்றுக்குள் குழந்தைகள்: தண்ணீர் எடுக்க இவ்ளோ ரிஸ்கா?
» இனப்படுகொலை செய்த ராஜபக்ஸவை ஈழத் தமிழர்கள் வீழ்த்த வேண்டும்: ராமதாஸ்
» தமிழக சட்டசபை தீர்மானம் காலம் கருதி ஈழத் தமிழினத்திற்கு செய்த பேருதவி! சிறீதரன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum