Top posting users this month
No user |
Similar topics
குலோத்துங்கன் கவிதைகள்
Page 1 of 1
குலோத்துங்கன் கவிதைகள்
குலோத்துங்கன் கவிதைகள்
விலைரூ.150
ஆசிரியர் : தி.குலோத்துங்கன்
வெளியீடு: பைந்தமிழ்ப் பதிப்பகம்
பகுதி: கவிதைகள்
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
பைந்தமிழ்ப் பதிப்பகம், 5/220, 5வது முதன்மைச் சாலை, தெய்வசிகாமணி நகர், வண்டலூர், சென்னை-600 048. (பக்கம்: 330)
தூக்கத்தில் காலத்தைக் கழித்தால் உன்றன், தூய மொழி தமிழ்த்தாயும் அழிவாள் அந்தத் தாக்கத்தால் தமிழ்ப்பண்பும் மாயும் உன்றன், தலை முறைக்குத் தமிழினமும் மறந்துபோகும் (பக் 20) எனத் துயிலெழுப்பி. "நாளும் ஆகின்ற பணிகள் செய்வாய், அரியணை தமிழுக் கீவாய்! (பக் 104) இப்படித் தமிழுக்காக 35 பாடல்கள். "பெறுவது எதுவானாலும், பெருமையாய் ஏற்றுக் கொள்வீர் (122) என காதலுக்கு இருபது பாடல்கள், பன் மணித்திரள், இயற்கை, தலைவர்கள் இப்படி மொத்தம் 117 பாடல்கள் அவற்றுள் புதுக்கவிதையை இடித்துரைக்கும் பாடலும் இறுதியில் உண்டு. முற்றிலும் மரபில் அமைந்த இப்பாடல்கள் படிப்பதற்கு இனிமையாக இருந்தாலும் ஏற்கனவே எடுத்தாளப்பட்ட கருத்துக்களே அதிகம் இடம் பெற்றிருப்பதால் புதுமை ஏதும் புலப்படவில்லை. அச்சுப்பிழைகள் தவிர்க்கப்பட வேண்டும். குலோத்துங்கன் என்ற பெயரில் வேறு சிலரும் கவிதை புனைவதால் அடையாளம் காண்பதில் சில இடர்ப்பாடுகள். கவிதை கைவரப் பெற்ற இக்கவிஞரின் கருத்துக்கள் இன்னும் சற்று வலிவுற வேண்டும்.
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum