Top posting users this month
No user |
பழஞ்சீனக் கவிதைகள்
Page 1 of 1
பழஞ்சீனக் கவிதைகள்
பழஞ்சீனக் கவிதைகள்
விலைரூ.180
ஆசிரியர் : வான்முகில்
வெளியீடு: மீனா கோபால் பதிப்பகம்
பகுதி: கவிதைகள்
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
பக்கம்: 216
ஆங்கில மூலத்திலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட, 63 கவிஞர்களின் கவிதைகள் இதில் இடம் பெற்றுள்ளன. தருக்கடைந்தால் அது, தன் வீழ்ச்சிக்கு தானே வித்திடலாகும். உன் பணி முடிந்ததும் பின்னடைந்திடு. விண்ணக வழி அத்தகையதே (பக்.75) என, மிகை வெற்றியின் அபாயம் குறித்தும்."ஒளி மிகு சன்னலின் கீழ் என்னுடன் இருப்போர் யார்? இருவர் என் நிழலும் நானும், ஆனால் விளக்கு எரிந்து முடிகையில், தூங்க நேரமாகும் போது, நிழலும் என்னைத் துறக்கும், ஆ! அவலம் நான் தனியன். (பக்.167) என, தனிமை பற்றியும்.பயனற்ற பொருள்கள், உங்கள் மனத்தில் சுமையாய் இருக்காவிடில், எந்த பருவமும் உங்களுக்கு நல்லபருவமே (பக்.189) இப்படி சிந்தனையை தூண்டும் ஏராளமான கவிதைகள் உள்ளன.
சீன கவிதை இலக்கிய வரலாறும், கவிதைகளுக்குரிய கவிஞர்களின் வரலாறும், படங்களும் நூலுக்கு அணிகலன்களாய் அமைந்துள்ளன. படித்து இன்புறலாம்.
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum