Top posting users this month
No user |
Similar topics
அன்புக்கு முன்னால் சட்டம் தோற்றது: மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நடந்த பாசப்போராட்டம்
Page 1 of 1

தன்னை பணம் கொடுத்து வாங்கிய வளர்ப்பு பெற்றோரை விட்டுவிட்டு, பெற்ற தாயாரிடம் செல்வதற்கு சிறுவன் மறுத்துவிட்ட சம்பவம் மதுரை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பொன்னுவார்பட்டியை சேர்ந்த குமார்- மாரியம்மாள் தம்பதியின் 3 வயது மகன் வேல்முருகன்.
குமார் தனது மகனை, குழந்தையில்லாத தம்பதிக்கு ரூ.50 ஆயிரத்துக்கு விற்றுவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
இந்நிலையில் கணவரையும், குழந்தையையும் கண்டுபிடித்து ஆஜர்படுத்தக்கோரி மாரியம்மாள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.எஸ்.ரவி ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மாரியம்மாளும், வளர்ப்பு பெற்றோரும் சிறுவனை உரிமை கொண்டாடியபடி இருந்தனர். ஆனால் சிறுவனோ வளர்ப்பு தாயின் மடியில் இருந்து கீழே இறங்காமல் இருந்துள்ளான்.
மகனை அழைக்குமாறு மாரியம்மாளிடம் நீதிபதிகள் கூறினர். அதையேற்று மகனை தூக்குவதற்கு மாரியம்மாள் முயன்றுள்ளார். எனினும் அதற்கு மறுத்து அழுத சிறுவன், வளர்ப்பு தாயைவிட்டு நகரவில்லை.
இதை பார்த்த நீதிபதிகள், சட்டப்படி பெற்ற தாயிடம் குழந்தை இருக்க வேண்டும். இருப்பினும் இந்த சிறுவன், வளர்ப்பு பெற்றோரிடம் வைத்திருக்கும் பாசத்தை பார்க்கும் போது அன்பு, அரவணைப்புக்கு முன் சட்டம் தோற்றுவிட்டதோ என நினைக்க தோன்றுகிறது என தெரிவித்தனர்.
பின்னர் இது தொடர்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சிறுவன் வளர்ப்பு பெற்றோரிடம் 15 நாள் இருக்க வேண்டும். சிறுவனின் தாயார் மாரியம்மாள் தினமும், வளர்ப்பு பெற்றோரின் வீட்டிற்கு சென்று அவரது மகனை பார்த்து, அவனின் அன்பை பெற முயற்சிக்க வேண்டும். அடுத்த விசாரணையின் போது மனுதாரர், வளர்ப்பு பெற்றோர், சிறுவன் ஆகியோர் ஆஜராக வேண்டும். சிறுவன் யாருடன் இருக்க ஆசைப்படுகிறான் என்பதை அப்போது பார்க்கலாம்" எனக் கூறியதோடு, மாரியம்மாளின் கணவர் குமாரை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு திண்டுக்கல் டிஎஸ்பி வனிதாவுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சாவதற்கு முன்னால் சசிதரூர் முகமூடியை கிழிப்பேன்: சுனந்தா போட்ட சபதம்
» டில்லியில் நடந்த கொடூரமும் புங்குடுதீவில் நடந்த நெட்டூரமும்
» அரசியல் கைதிகளை விடுதலை செய்! வெலிக்கடை சிறைச்சாலை முன்னால் ஆர்ப்பாட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum