Top posting users this month
No user |
Similar topics
இரத்தினக்கல் அதிகார சபைக்கு எதிராக இலங்கை மின்சார சபை முறைப்பாடு
Page 1 of 1

பொகவந்தலாவையில் காசல்ரீ நீர்த்தேகத்தத்திற்குச் செல்லும் கெசல்கமுவ ஓயாவில் இரத்தினக்கல் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் நீர் மாசடைவதாக தெரிவித்து, இலங்கை மின்சார சபை பொகவந்தலாவை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள் வியாழக்கிழமை இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.
பொகவந்தலாவை – கெசல்கமுவ ஓயாவின் செபல்டன் தோட்டப் பகுதியில் 10 ஏக்கர் நிலப்பகுதியில் இந்த இரத்தினக்கல் அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கான அனுமதியை தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகார சபை வழங்கியிருப்பதோடு, சுமார் ஒருவருடத்திற்கான ஒப்பந்தம் அடிப்படையில் அங்கு அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படாத வகையில் இதனை முன்னெடுக்குமாறு மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்திருக்கின்றது.
இந்த நிலையில் மேற்கொள்ளப்பட்டுவரும் அகழ்வு நடவடிக்கைகளினால் ஓயாவின் நீர் மாசடைவதாக கெசல்கமுவ ஓயாவிலிருந்து நீரைப் பெற்றுவரும் லக்ஷபான மின்சார சபை முறைப்பாடு செய்துள்ளது.
குறித்த பகுதிக்கு 24.09.2015 அன்று விஜயம் மேற்கொண்ட லக்ஷபான மின்சார சபை அதிகாரிகள் அங்கு இடம்பெற்றுவரும் அகழ்வு நடவடிக்கை மற்றும் அதனால் ஏற்படும் நீர்மாசு என்பவற்றை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்தே தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபைக்கு எதிராக பொகவந்தலாவை பொலிஸாரிடம் இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.
இந்த நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு எதிராக மீண்டும் போராட்டம் நடத்த வேண்டியேற்பட்டுள்ளது: விக்ரமபாகு
» பணக்காரர்களாக மாறிய அரசியல்வாதிகளுக்கு எதிராக முறைப்பாடு
» அநுரகுமாரவுக்கு எதிராக இரகசிய பொலிஸிலும் முறைப்பாடு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum