Top posting users this month
No user |
Similar topics
விஷ்ணுபிரியாவின் தற்கொலை மர்மங்கள்: குற்றங்களின் சவால்கள்
Page 1 of 1

டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவின் தற்கொலையில் இருக்கும் மர்மங்கள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படாமல் இருந்தாலும் , நடந்த சூழ்நிலைகளை வைத்து பார்க்கும்போது, பொதுமக்கள் அச்சப்படும் அளவிலான மர்மங்கள் மறைக்கப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது.
சாதாரண குற்றங்களில் சட்டம் தன் கடமையை செய்வதுபோல பதவி மற்றும் செல்வாக்குகளை பின்னணியாக கொண்ட குற்றங்களில் அவ்வளவு எளிதாக நெருங்க முடிவதில்லை.
அதற்கு காரணம் உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு, குற்றத்தை செய்ய தூண்டிய பெரும்புள்ளிகள் மீதோ, அவர்களின் குற்றம் சார்ந்த கொள்கை மீதோ பிடிப்பு அல்லது தனிப்பட்ட லாபம் இருக்கலாம்.
ஒரு குற்றத்தை காவல்துறை கண்டுகொள்ளாமல் இருக்குமே தவிர, கண்டுபிடிக்க முடியாமல் இருக்காது என்பது சரியான உண்மை.
திருச்செங்கோடு உட்கோட்ட டிஎஸ்பியாக இருந்த விஷ்ணுபிரியா, சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவன் கோகுல்ராஜ் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கொலை வழக்கின் முடிவு வெளிவருவதற்கு முன் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். அவரால் தற்கொலைக்கு முன் கடிதம் 15 பக்கங்கள் எழுதப்பட்டதாகவும் ஆனால், போலீஸாரால் வெளியிடப்பட்ட கடிதத்தில் 9 பக்கங்கள் மட்டுமே இருந்ததாகவும் மீதமுள்ள 6 பக்கங்களில் உயர் அதிகாரிகள் விஷ்ணுபிரியாவிற்கு கொடுத்த ’டார்ச்சர்’ பற்றி குறிப்பிடப்பட்டிருந்திருக்கலாம் என சில தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஷ்ணுபிரியாவின் தந்தையும் கடிதத்தில் இருப்பது என் மகளுடைய கையெழுத்து இல்லை என்றும் தற்கொலை செய்துகொள்ள குடும்பத்தில் ஏதும் காரணமில்லை என்றும் முதல்வர் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதுக்கு மாறாக, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
அவரின் தாயார் கூறும்போது, விநாயகர் சதூர்த்திக்காக திருச்செங்கோட்டிலிருந்து கடலூருக்கு இருவரும் வந்தோம். 17 ம் தேதி வீட்டில் படையல் முடிந்ததும் அன்று இரவு தனியாக திருச்செங்கோட்டுக்கு விஷ்ணுபிரியா மட்டும் சென்றார். வீட்டில் இருக்கும்போது, கோகுல்ராஜ் கொலை வழக்கில் உயர் அதிகாரிகள் அழுத்தம் கொடுப்பதால் ‘டென்ஷனாக’ இருப்பதாகவும் கூறியுள்ளார். சிலரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வற்புறுத்துகின்றனர் ஆனால், மனசாட்சிக்கு விரோதமாக செயல்பட முடியவில்லை என்று புலம்பினார். நான் ஆறுதல் சொன்னேன் என்றும் கோகுல்ராஜ் வழக்கையும் விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கையும் சிபிஐ விசாரணைக்கு விடவேண்டும் என்றும் கூறுகிறார்.
விஷ்ணுபிரியாவை பற்றி நன்கு அறிந்த, உயிர் தோழியான கீழக்கரை டிஎஸ்பி மகேஸ்வரியும் தற்கொலையில் மர்மம் உள்ளதாக கூறுகிறார்.
கொலைகளில் மட்டுமல்ல தற்கொலைக்கு தூண்டுவதிலும் திட்டமிடல் உண்டு. இந்த சூழலில் சிபிசிஐடி விசாரணையைவிட சிபிஐ விசாரணையே உண்மைக்கு உறுதுணையாக இருக்கும்.
இதுபோன்ற சம்பவங்களில் சினிமாவும் சமுதாயமும் ஒரேமாதிரியாக இருப்பது ஜீரணிக்க முடியாதது.
செல்வாக்குள்ள குற்றவாளிகளை பாதுகாக்க நேர்மையான காவல் அதிகாரிகள் பலியாக்கப்படுவது தவறான முன்னுதாரணம்.
அதுவும் கவல்துறையை சேர்ந்தவர்களே அதற்கு துணைபோவது வெளியில் இருக்கும் குற்றவாளிகளைவிடவும் வீபரீதமானது.
நேர்மையான அதிகாரிகள் உயிருக்கு பயந்து வளைந்து கொடுத்தாலும் அவர்கள் குற்றம்செய்பவர்களின் கருவியாக சட்டத்துக்குள் இயங்குவார்கள்.
கோகுல்ராஜ் கொலை வழக்கே தனிப்பட்ட பிரச்சினையல்ல, ஜாதி பின்னணி கொண்டது. அதனால், இதுபோன்ற உபவிளைவுகள் எல்லோரும் எதிர்பார்க்ககூடியதுதான் குறிப்பாக ஜாதி பிரமுகர்கள் காய் நகர்த்துவதே அப்போது நடக்கும் ஆட்சியின் தங்களுக்கான சாதகபாதகங்கள் அமைவதை கணித்துதான்.
முற்போக்கு சிந்தனை என்பது இருக்கும் பிரச்சினைகளுக்காக கவலைப்படுவது. பிற்போக்கு சிந்தனை என்பது வரப்போகும் பிரச்சினைகளுக்காக கவலைப்படுவது.
கொள்கைகளுக்காக கண்மூடித்தனம் வந்துவிடக்கூடாது. அச்சுறுத்தலால் எதையுமே குறுகியகாலமே அடக்கிவைக்க முடியும். வருங்காலத்தில் வலிமையோடு எதிர்க்க அதுவே வழிவைத்துவிடும். இங்கு ஆட்சிதான் நீதி! அவரவர் மனசாட்சியே மீதி!
நீதிபரிபாலனை செய்ய மனிதர்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கப்படுகிறது. அதில் பாரபட்சம் நேர்ந்தால், அது கடவுளால் சரிசெய்யப்படும் என்பது மறக்கக் கூடியதல்ல.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 13 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை: வாட்ஸ் ஆப்பில் உருக்கமான தற்கொலை கடிதம்
» நமது உடலின் மர்மங்கள்
» தெரியாத தேவதை மைத்திரியினால் தமிழர்களுடன் இணக்கத்தை எட்ட பாரிய சவால்கள் காத்திருக்கின்றன: எரிக் சொல்ஹெய்ம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum