Top posting users this month
No user |
Similar topics
எனது ஃபேஸ்புக் பக்கம் மீது முதல்வர் கவனம் செலுத்தி வருவது மகிழ்ச்சி: மு.க.ஸ்டாலின்
Page 1 of 1

தன் ஃபேஸ்புக் பக்கம் மீது முதல்வர் கவனம் செலுத்தி வருவது மகிழ்ச்சி அளிப்பதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், திமுக சட்டப்பேரவை குழு தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து சில கருத்துகளை முகநூலில் பதிவு செய்துள்ளார்.
அவை உண்மையிலேயே அவரது கருத்துகள்தானா என்பதை விளக்க வேண்டியது அவசியம்.
கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின்போது ஸ்டாலின் அவரது முகநூல் பதிவின் மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
ஆனால், திமுக தலைமை அதற்கு மறுப்பு தெரிவித்து, ஸ்டாலினின் இணையதளத்தை பராமரிக்கும் சிலர் இதை வெளியிட்டுள்ளனர் என்றும், இந்த வாழ்த்துச் செய்தி ஸ்டாலின் விருப்பப்படி ஆனதில்லை என்றும் விளக்கம் அளித்தது.
தற்போது சட்டம் - ஒழுங்கு பற்றி ஸ்டாலினின் முகநூலில் வெளிவந்த பதிவுகளும் மற்றவர்களின் கருத்துதானோ என்னவோ? என்று கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், ஸ்டாலின் இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில்,தமிழகத்தில் நடைபெற்ற குற்றங்கள் குறித்து என் முகநூலில் சொல்லப்பட்டுள்ள புள்ளிவிவரங்களை மறுத்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.
அந்த புள்ளிவிவரங்கள் தேசிய குற்ற ஆவண காப்பகத்தால் வெளியிடப்பட்டவை.
ஆகவே அந்த புள்ளிவிவரங்கள் பற்றி தேசிய குற்ற ஆவணக் காப்பகத்திடம் அவர் கேட்டுத் தெரிந்து கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும்.
எனினும் என்னுடைய முகநூல் பக்கத்தை முதல்வர் தொடர்ந்து பார்த்து வருவதற்கு என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிலுள்ள தகவல்களின் அடிப்படையில் அவரது கணினி மூலம் அவர் மாநிலம் முழுவதும் மெய் நிகர் சுற்றுபயணம் (virtual tour) சுற்றுப்பயணம் செய்து மக்களின் உணர்வுகளை, அவர்களது ஏமாற்றங்களை தெரிந்துகொள்ள வேண்டும்.
மாநிலம் முழுவதும் செல்லும் நமக்கு நாமே பயணத்தின் வீடியோக்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் என் முகநூலில் பதிவு செய்து வருகிறேன்.
ஆகவே என் முகநூல் செய்திகளை முதல்வர் தொடர்ந்து படித்தால் மக்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள், கனவுகள் அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும்.
முதல்வரால் மக்களை சந்தித்து அவர்களது பிரச்சினைகளை அறிந்து கொள்ள பொறுப்புணர்வோடு கூடிய அக்கறையில்லை என்றாலும், தமிழக மக்களின் பிரச்சினைகள் பற்றி தெரிந்து கொள்ள எனது முகநூல் பக்கம் அவருக்கு பேருதவியாக இருக்கும் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜெயலலிதா மக்களின் முதல்வர்....ஸ்டாலின் மனிதர்களின் முதல்வர்: போட்டி ஆரம்பம்
» புதிய அரசு தமிழ் மக்கள் மீது கவனம் செலுத்தவில்லை! கூட்டமைப்பினர் அமரிக்காவிடம் முறையீடு- முஸ்லிம் காங்ரஸை சந்தித்த நிஷா
» முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு குறித்து அவதூறான கருத்து: இளங்கோவன் மீது வழக்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum