Top posting users this month
No user |
Similar topics
உருளைக்கிழங்கு பாஸ்டா தயிர் கறி
Page 1 of 1
உருளைக்கிழங்கு பாஸ்டா தயிர் கறி
தேவையான பொருள்கள்:
உருளைக்கிழங்கு = அரை கிலோ
தயிர் = 1 கப்
மிளகாய் பொடி = 2 ஸ்பூன்
மஞ்சள் பொடி = அரை ஸ்பூன்
சீரகப்பொடி = அரை ஸ்பூன்
இஞ்சி = அரை அங்குலம்
கடுகு = அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
வெந்தயம் = அரை ஸ்பூன்
எண்ணெய் = 2 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கை வேக விட்டு சிறிது உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி சேர்த்து சிறிது கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து மசித்துப் பிசையவும். இஞ்சியை தோல் நீக்கித் துருவிக் கொள்லவும். தயிரை கடைந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் தாளிக்கவும். வெந்தயம் பொன் முறுகலாக இருக்க வேண்டும். கருகி விட்டால் கசப்பு தோன்றி விடும்.
தாளித்ததோடு உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும். துருவிய இஞ்சியையும் சேர்க்கவும். பொடி வாசனை அடங்கியதும் கடைந்த தயிரை கலந்து கிளறி சீரகப்பொடி சேர்த்துக் கிளறவும்.
சுவையான உருளைக்கிழங்கு பாஸ்டா தயிர் கறி தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பரோட்டா, பூரி, நூடுல்ஸ், இடியாப்பம், ஆப்பம், இட்லி போன்றவற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
உருளைக்கிழங்கில் வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் B6, தாமிரம், மாங்கனீசு, மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.
உருளைக்கிழங்கு ஆற்றல் உற்பத்திக்கு மிகவும் சிறந்த உணவு. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். செரிமானம், வயிற்று புண்கள் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
மிகவும் ஆரோக்கியமான உருளைக்கிழங்கு பாஸ்டா தயிர் கறி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum