Top posting users this month
No user |
Similar topics
குண்டு இருப்பதாக கூறி குடியிருப்புக்கள் மீது சோதனையிட்ட பொலிஸார்! - அச்சத்தில் தோட்ட மக்கள்
Page 1 of 1

அரச தோட்டமான புப்புரஸ்ஸ லெவலன் தோட்டம் கலஹா பொலிஸ் நிலையத்திற்கு குறித்த தோட்ட குடியிருப்புக்களில் குண்டு இருப்பதாக கிடைத்த முறைபாடு ஒன்றின் பிரகாரம் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் அதிரடி நடவடிக்ககையில் குண்டை தேடியதில் தோட்ட மக்களின் குடியிருப்புக்கள் மற்றும் பொருட்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
குண்டு அங்கு இருக்கும் இங்கு இருக்கும் என்று தேடியதினாலயே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரவு 12 மணியளவில் இந்த தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டதால் மக்கள் பதட்டத்திற்குள்ளாகியுள்ளனர்.
நிலைமை தொடர்பாக மக்களிடம் வினவிய போது,
இரவு 12 மணியளயில் உங்கள் வீட்டில் குண்டு இருக்கின்றது என்று கூறி பரிசோதிக்க வேண்டும் என்று 04 பொலிஸார் பொருட்களையும் சமைத்த உணவுகளையும் தூக்கி வீசி தேடினர். இதனால் நாங்கள் பெரிதும் பயத்திற்கு உள்ளானதுடன் செய்வதறியாது பயந்து விட்டோம். சிறுவர்கள் அச்சத்திற்கு உள்ளானர்கள். உணவுகள் கூட பொலிஸாரினால் சேதமாக்கபட்டது. நாங்கள் இரவு சாப்பிடக் கூட இல்லை. இந்த செயற்பாட்டை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் என தெரிவித்தனர்.
இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த தோட்டத்தில் பிள்ளை பாராமரிக்கும் நிலையத்தில் தோட்டத்தில் தொழில் செய்வோரின் பிள்ளைகள் மாத்திரம் பராமரிக்கப்படுகின்றன. தொழில் செய்யாதோரின் பிள்ளைகள் பராமரிக்கப்படுவதில்லை. இந் நிலையில் தொழில் செய்யாதோரின் பிள்ளைகளுக்கு தோட்டத்தில் காணப்பட்ட சனசமூக நிலைத்தில் பிரத்தியோக பிள்ளை பராமரிப்பும் பாலர் பாடசாலையும் தோட்ட மக்களினால் ஆரம்பிக்கபட்டது. இதனை ஆரம்பிப்பதற்கு அரச தோட்டமான இந்த தோட்ட நிர்வாகம் அனுமதிக்கவில்லை.
இதனால் தோட்ட நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு பிரச்சனை மாற்று வடிவமாக மாறியுள்ளது. மேற்படி செயற்பாட்டுக்கு முன்னின்றவர்களின் வீடுகளுக்குள்ளேயே குண்டு இருப்பதாக பரிசோதிக்கப்ட்டுள்ளது.
இந் நிலைமை தொடர்பாக தோட்ட நிர்வாகத்துடன் வினாவிய போது,
குறித்த குண்டு விபரமாக எங்களுக்கு ஒன்றும் தெரியாது. பொலிஸாருக்கு யாரோ தப்பான தகவலை வழங்கியுள்ளனர். தற்போது பாலர் பாடசாலை நடாத்த தோட்ட மக்கள் எத்தணிக்கும் இடம் தோட்டத்திற்கு உரியது அதில் மக்கள் நலம் சார்ந்த விடயங்களே நடாத்த முடியும். இங்கு கர்ப்பிணி தாய்மார்களின் கிளினிக், கலாச்சார நிகழ்வுகள், கூட்டங்கள் மாத்திரமே நடாத்த முடியும் அப்படி வேறு எதுவும் நடாத்துவது என்றால் எங்களிடம் அனுதி பெற வேண்டும் என்றார்.
எது எப்படியாயினும் குறித்த மண்டபம் மக்களுக்குறியது அதில் மக்கள் நலன்சார் அனைத்து விடங்களையும் செய்ய முடியுமானால் ஏன் பாலர் பாடசாலை நடாத்த முடியாது? மணடபமமோ தோட்ட இளைஞர்களினால் தொலுவ பிரதேச காரியாலயத்தில் பதிவு செய்யபட்டடுள்ளது. அது அவர்களுக்கு என கட்டப்பட்டது. இதை அரச தோட்ட நிர்வாகம் தடை செய்வது வேதனைக்குறியதே.
இதற்கான தீர்வு குறித்து கலஹா பொலிஸாரிடம் வினாவிய போது..
இந்த விடயம் குறித்து தங்களுக்கு ஒன்றும் கூற முடியாது என்றும் இது தொடர்பான விடயங்கள் பொலிஸ் ஊடக பேச்சாளருக்கு வழங்கியுள்ளதாக தெரிவித்தனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இல்லாத தீர்ப்பை இருப்பதாக கூறி மக்களை சிலர் தவறாக வழிநடத்துகின்றனர்: சுகிர்தன் சாடல்
» ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்கு மாணவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டு தாக்குதல்
» பொலிஸார் மீது குடி போதையில் வந்த இருவர் தாக்குதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum