Top posting users this month
No user |
Similar topics
தருணம் தவறிய ஜி.கே.வாசன்: தேர்தலில் தாக்குப்பிடிப்பாரா?
Page 1 of 1

ஜி.கே.வாசன் தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸிலிருந்து பிரிந்து தாமாகவை மீண்டும துவக்கியுள்ளது தமிழக மக்களால் ஆக்கப்பூர்வமானதாக பார்க்கப்படுகிறதா என்றால், அவ்வளவு ஆர்வம் இல்லை என்றே சொல்லலாம்.
அதுக்கு காரணம் காங்கிரஸிலிருந்து பிரிந்தது அல்ல. சரியான நோக்கத்துடனும், சரியான தருணத்திலும் பிரியாததுதான்.
ஒரு தேசிய கட்சியில் பாதிக்கு மேற்பட்டவர்களோடு பிரிந்துவரும் சக்தி ஜி.கே.வாசனுக்கு இருக்கிறது. அந்த பலம் தமிழக மக்களிடம் அந்த அளவுக்கு செல்வாக்கும் இருப்பதால்தான் கிடைத்தது.
இது அவருடைய தந்தை மூப்பனாருக்கு இருந்த செல்வாக்குதான், என்றாலும், மக்களிடம் திராவிட கட்சிகள் மீது ஒரு கசப்பு வந்திருக்கும் சூழலிலும், தமாகா மீது ஒரு எதிர்பார்ப்பு அலை அவ்வளவில் பரவவில்லை.
சமீபத்தில் ஒரு பத்திரிகை எடுத்த, அடுத்த தேர்தலின் முதல்வருக்கான கருத்துக்கணிப்பில் ஜெயலலிதா முதலிடம், மு.க.ஸ்டாலின் இரண்டாம் இடம், கருணாநிதி மூன்றாம் இடம், அடுத்து விஜயகாந்த், அன்புமணி, தமிழிசை என்ற நீண்ட வரிசையிலும் ஜி.கே.வாசன் இடம்பெறவில்லை.
1996 சட்டமன்ற தேர்தலில் மக்கள் மனநிலையை கணித்து, கங்கிரஸிலிருந்து பிரிந்து, தமாகாவை தொடங்கி, திமுகவுடன் கூட்டணி வைத்தார். அந்த கூட்டணிக்கு மக்களிடம் அமோக ஆதரவும் இருந்ததால் 221 தொகுதிகளில் வெற்றியும் கிடைத்தது.
அதுபோன்ற மக்கள் ஆதரவு வாசன் தமாகாவுக்கு இப்போது இல்லை என்றே சொல்லலாம்.
ஒருவேளை, இலங்கையில் உச்சகட்ட போர் நடந்து லட்சக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுக்காகவோ, காவிரி பிரச்சனைக்காகவோ, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து தொழில்செய்ய விடாமல் தாக்கப்படுவதுக்காகவோ காங்கிரஸ் மேலிடம் மீது அதிருப்தியடைந்து வெளியேறியிருந்தால், தமிழகத்தில் இன்னும் நல்ல வரவேற்பு இருந்திருக்க வாய்ப்பு உண்டு.
காமராஜர், மூப்பனார் போன்ற காங்கிரஸ் தலைவர்களுக்கு காங்கிரஸ் மேலிடம் உரிய மரியாதை அளிக்கவில்லை, அவர்கள் படங்கள் இடம்பெறுவதை விரும்பவில்லை என்பது கட்சி சார்ந்த பிரச்சனைதான் அது மக்கள் பிரச்சனைக்காக ஏற்பட்ட கருத்து வேறுபாடாகாது.
அன்றைய அதிமுக ஆட்சியில் (1996), மக்கள் அதிருப்தி அடைந்திருந்ததை மூப்பனாரும் பிரதிபலிக்கவே, கூட்டணியை எதிர்த்து காங்கிரஸிலிருந்து பிரிந்தார்.
கணக்கு கேட்டுதான் எம்ஜிஆர் திமுகவிலிருந்து வெளியேறினார். அது ஒரு சரியான நோக்கமாக பார்க்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நல்ல ஆரம்பமே பாதி வெற்றிக்கு சமம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இலங்கைத் தமிழர்கள் நாடு திரும்புவது இது உகந்த தருணம் அல்ல!
» பரீட்சையில் கணிதத்தை தவறவிட்ட மாணவியின் வாழ்க்கையும் தவறிய கொடுமை
» இலங்கையினை இந்தியா கடுமையாக தண்டிக்க வேண்டும்: ஜி.கே வாசன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum