Top posting users this month
No user |
Similar topics
மூலிகை மருந்துப் பொருட்கள்
Page 1 of 1
மூலிகை மருந்துப் பொருட்கள்
அதிமதுரம்:
இருமல், ஜலதோஷம், நீர்சுருக்கு முதலிய நோய்களுக்கு ஏற்ற மருந்து. இதை வாயிலிட்டு போட்டு அதக்கிக் கொள்ளலாம்.
இலவங்கப் பூ அல்லது கிராம்பு:
அசீரணத்தைப் போக்கும், வாந்தியை ஆகியவைகளை குறைய செய்யும்.
வெங்காயம்:
சிரங்கு, உஷ்ண பேதி முதலியவைகளை குறைய செய்யும்.
ஓமம்:
அசீரணம், அசீரணபேதி, வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி, வாந்தி முதலியவற்றைக் குறையச் செய்யும்.
கடுகு:
வாந்தி உண்டு பண்ண நல்ல மருந்து. கடுகுப் பற்று, விஷபேதி, வயிற்றுவலி, சன்னி முதலியவைகளை குறையச் செய்யும்.
கடுக்காய்:
இதன் பெருமைகளையும், பயன்களையும் அளவிட்டுக் கூற முடியாது. 50க்கு மேற்பட்ட நோய்களுக்கு உதவும்.
கந்தகம்:
சிரங்கு, மூலரோகம், சீதபேதி முதலியவற்றைக் குறையச் செய்யும்.
கரியபோளம்:
சோபை, குன்மம், கைகால் குத்தல், இருதய வாதம் முதலியவைகளை குறையச் செய்யும். வேறு சில மருந்துகளுடன் மாத்திரை செய்தும் உபயோகிக்கலாம்.
கருவாப்பட்டை:
இதுவே இலவங்கப்பட்டை. சுக்கில நஷ்டம், அதிசாரம், பற்பல விஷங்கள் சுவாகாசம் முதலிய நோய்களை குறையச் செய்யும்.
கற்பூரம் (சூடம்):
சிறந்த தைலம் செய்து உபயோகிக்கலாம்.
கஸ்தூரி:
மானிலிருந்து எடுப்பது, பலவகைச் சன்னிகளுக்கு பயன்படுகிறது.
காசுக்கட்டி:
அசீரண பேதி, பல்வலி, தொண்டைப்புண் ஆகிய நோய்களை குறையச் செய்கிறது.
கோரோசனை:
மாடு, மான இவைகளின் பித்தப் பையிலிருந்து எடுக்கிற மஞ்சள் நிறமான பொருள். பிள்ளைகளுக்கு உண்டாகும் ஜலதோஷம், மாந்தம் முதலியவைகளை குறைக்கும். இதற்கு வேனற்கட்டிகள் வராமல் தடுக்கும் குணம் உண்டு.
சதகுப்பை:
குழந்தைகளுக்கு உண்டாகும் வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல் ஆகியவைகளை குறையச் செய்யும்.
சாதிக்காய்:
அசீரணத்தைப் போக்கக்கூடியது. அதிம் சாப்பிட்டால் மயக்கத்தை உண்டு பண்ணும்.
சிற்றரத்தை:
இதன் வேர் ஜலதோஷம், நெஞ்சுச் சளி, இருமல் ஆகியவற்றை குறையச் செய்யும்.
சீரகம்:
அசீரணம், வயிற்றுவலி, பித்த மயக்கம் ஆகியவற்றை குறையச் செய்யும்.
சீனாக்காரம்:
கண் நோய், தொண்டைப்புண், பல்லீறுவிரணம் முதலியவற்றைக் குறையச் செய்யும்.
சுக்கு:
வயிற்றுவலி, வாதரோகம், ஜலதோஷம், தலைவலி, தொண்டைப்புண், பல்வலி, நெஞ்சுச் சளி முதலிய அநேக நோய்களை குறையச் செய்யும்.
சோம்பு (பெருஞ்சீரகம்):
அசீரணத்தைப் போக்கி பசியை உண்டாக்கும்.
திப்பிலி:
வயிற்றுப் பொருமல், சளி, காசம், வாய்வு முதலியவைகளை குறையச் செய்யும்.
துத்தம் (துருசு):
இந்த நீலநிறப் பொருள் ஆறாத புண்களுக்கும், கண்ணோய்களுக்கும் மருந்தாகவும், அபின், ஊமத்தை முதலிய விஷத்தைச் சாப்பிட்டவர்களுக்கு மாற்று மருந்தாக பயன்படுகிறது.
நீரடிமுத்து:
நீர்வெடிமுத்து என்றும் சொல்லப்படும். சிரங்கு முதலிய சரும நோய்களை குறையச் செய்யும்.
பெருங்காயம்:
வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி முதலியவற்றை குறையச் செய்யும். சாம்பார் ரசம் முதலிய உணவுப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சாதாரணமாய் இதை கொடுப்பது உண்டு.
மாசிக்காய்:
அசீரணபேதி, சீதபேதி, மூலரோகம், வாய் புண் முதலிய நோய்களை குறைய செய்யும். விஷம் சாப்பிட்டவர்களுக்குத் துத்தத்தைப் போல் இதுவும் மாற்று மருந்தாக பயன்படுத்துகிறது.
மிளகு:
திரிகடுகத்தில் ஒன்றாகிய மிளகு சிறந்த மருந்துச் சரக்கு. வயிற்றுக் கோளாறுகளைச் சீர்படுத்திப் பசியை அதிகரிக்கச் செய்யும். மூலரோகங்களையும், தொண்டை கமறலையும் குறையச் செய்யும்.
வசம்பு:
குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம், இருமல், மார்புச் சளி முதலியவைகளையும், அசீரணபேதி, சீதபேதி ஆகியவைகளையும் குறையச் செய்யும்.
வால்மிளகு:
திரிதோஷகோபம், குன்மம், வெட்டை முதலிவைகளை குறையச் செய்யும். வயதானவர்களுக்கு உண்டாகும் இருமலுக்கும் சில கெட்ட நோய்களையும் குறையச் செய்யும்.
வெண்காரம்:
புண்கள், மூலரோகங்கள் ஆகியவைகளை குறையச் செய்யும்.
வெள்ளைப் பூண்டு:
வாய்வு, ஜலதோஷம், இருமல், கிருமி ரோகம், சீதபேதி முதலியவைகளை குறையச் செய்யும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum