Top posting users this month
No user |
Similar topics
மருந்துப் பூண்டுகள்
Page 1 of 1
மருந்துப் பூண்டுகள்
அகத்தி:
இதன் இலையைக் கீரையாகச் சமைத்துச் சாப்பிட்டால், மலமந்தம் குறையும். இதன் பூவைச் சாப்பிட்டால் நீர்க்கடுப்பு, எரிவு முதலியவைகள் குறையும். சீமை அகத்தி இலை எச்சிற்றழும்பு முதலிய சரும நோய்களை குறையச் செய்யும்.
அத்தி:
இம்மரத்தின் பால், பட்டை, பிஞ்சு முதலியன வாதரோகம், சீதபேதி, ஆசனக்கடுப்பு ஆகிய நோய்களைக் குறையச் செய்யும்.
அவுரி:
இதன் வேர் விஷத்தையும் சில நஞ்சு மருந்துக்களுக்கு மாற்று மருந்து ஆகவும் செயல்படுகிறது. இலையானது வாதம், மந்தம், சன்னி முதலிய நோய்களை குறையச் செய்கிறது.
ஆடாதோடை:
நெஞ்சுச்சளி, இருமல் முதலியவற்றைக் குறையச் செய்கிறது.
ஆடுத்தின்னாபாளை:
கிருமிகள், கரப்பான் முதலியவற்றைக் குறையச் செய்கிறது.
ஆவிரை:
பட்டையின் கஷாயத்தை வாய் கொப்பளித்து வந்தால் வாய்புண் குறையும். பூவைக் கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் சூட்டைத் தணித்து, பல நோய்களை குறையச் செய்யும்.
இஞ்சி:
வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, வாதரோகம், தலைவலி, அசீரணம் முதலிய பல நோய்களைக் குறையச் செய்கிறது.
இலைக்கள்ளி:
இதன் பால் கரப்பானைக் குறையச் செய்யும். இலையின் சாறும், வேப்பெண்ணெயும் வாதரோகத்தைக் குறைக்கும்.
ஊமத்தை:
உலர்ந்த இலையை உபயோகித்தால் சுவாச காச நோய் குறையும். இலைகள் மேல் சிற்றாமணக்கு எண்ணெயை தடவி நெருப்பில் வாட்டி, கட்டிகள் மேல் அடுக்கடுக்காய் போட்டால் கட்டிகள் உடைந்து குணமாகும்.
எருக்கஞ்செடி:
இதன் பால், வேர், இலை, பூ முதலியன வாதரோகங்களை குறையச் செய்கிறது.
கரிசலாங்கண்ணி (கையாந்தகரை):
பாண்டு, வீக்கம், காமாலை முதலிய நோய்களுக்கு உள் மருந்தாகவும், சொறி, சிரங்கு முதலிய நோய்களுக்கு வெளிமருந்தாகவும் உபயோகப்படுகிறது. கரிசலாங்கண்ணித் தைலத்தை தேய்த்துக் குளித்து வந்தால் கண்கள் தெளிவாகும். சரீரத்திற்கு அமைதி உண்டாகும்.
கருவேலன்:
இதன் பட்டையால் செய்த கஷாயத்தைப் பல்வலி, ஈறு வீக்கம், வாய் புண் முதலியவற்றைக் குறையச் செய்கிறது.
கற்பூரவள்ளி:
இருமல், நெஞ்சுச்சளி, காசம், வாதக் கடுப்பு முதலிய நோய்களைக் குறையச் செய்கிறது.
கறிவேப்பிலை:
சகலவிதமான உணவுப் பொருட்களுக்குப் பயன்படுகிறது. இதன் கஷாயம் வாந்தி, பித்தம், சீதபேதி, சீதபேதியால் வரும் வயிறைவு ஆகியவற்றைக் குறையச் செய்கிறது.
கற்றாழை:
இதைக் குமரி என்றும் கூறுவார்கள். பெரு நோய், மூலம், கப கோபம், வாத மேகம் முதலியவற்றைக் குறைக்கும். இதன் சோற்றைப் பால் போக நன்றாய் கழுவிச் சாப்பிட்டு வந்தால் மூலரோகம், உட்காங்கை முதலியவைகளை குறையச் செய்யும். இதனோடு சீனிக்காரத் தூளைச் சேர்த்துக் கண் நோய்களுக்கு மேல் பற்றாகப் போட்டால், வீக்கத்தைத் தணித்து, கண் சிவப்பை குறையச் செய்யும்.
கீழக்காய் நெல்லி (கீழா நெல்லி):
மஞ்சள் காமாலை, நீர்க்கோவை முதலிய நோய்களைக் குறையச் செய்கிறது.
குப்பை மேனி:
இதற்குப் பூனை வணங்கி என் பெயரும் உண்டு. வயிற்றுவலி, வாத நோய், ரத்த மூலம், நமைச்சல், குத்தல், இறைப்பு, பீனிசம் ஆகியவைகளை குறைக்கும். இதன் இலையைக் கீரையாக அவித்து பெண்களுக்கு மருந்தாகக் கொடுப்பதுண்டு. இலையை அரைத்து பூச்சிக் கடிகளுக்கு மேற் பூச்சாகப் பூசுவார்கள். பூனைக்கடி விஷத்திற்கு இதன் வேர் மாற்று மருந்தாக பயன்படுகிறது.
சீந்திக்கொடி:
முறைக்காய்ச்சல், அஜீரணம், வாத ரோகம் ஆகியவற்றை குறையச் செய்கிறது.
துத்தி:
கருந்துத்தி, சிறுதுத்தி, நிலத்துத்தி என மூன்று வகை உண்டு. என்றாலும் குணத்தில் அதிக மாறுதல் இல்லை. இலையை ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி மூலம், ஆசனக்கடுப்பு முதலியவைகளுக்கு ஒற்றடமிடலாம். கீரையாக அவித்து அல்லது கஷாயமாகச் செய்து சாப்பிட்டு வந்தால் உட்சூடு குறையும். மலம் தாரளமாக வெளியாகும்.
துளசி:
கருந்துளசி, செந்துளசி, நிலத் துளசி, கல் துளசி, முள் துளசி, நாய் துளசி என பல வகைகள் உண்டு. இருமல், நெஞ்சுச் சளி முதலியவைகளுக்கு ஏற்ற மருந்து. இதன் வித்து நீர் எரிச்சல், சீதபேதி, உட்காங்கை ஆகிய நோய்களை குறையச் செய்கிறது.
தூதுவளை:
இருமல், நெஞ்சுச் சளி, சுவாச காசம் ஆகியவற்றைக் குறையச் செய்கிறது.
நன்னாரி:
நன்னாரி வேர்க் கஷாயம் அசீரணம், உட்சூடு, சருமரோகம் முதலிய பல நோய்களுக்குச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
நாவல்:
இம்மரத்தின் பட்டையும், கொட்டையும் தித்திப்பு நீர் ரோகத்தை குறையச் செய்கிறது. கொட்டையின் தூளைக் காபிபோல் பயன்படுத்தலாம். நாவல் கொட்டையும், நன்னாரி வேரும் சம எடை எடுத்து கஷாயம் செய்து இரண்டு மாதங்கள் சாப்பிட்டு வந்தால் தித்திப்பு நீர் ரோகம் குறையச் செய்கிறது.
நாப்பாலை:
நஞ்சறுப்பான் பூண்டு என்ற பெயரும் உண்டு. இது வாந்தியை உண்டு பண்ணும் மருந்து. வேர் சீதபேதியைக் குறையச் செய்யும். உலர்ந்த இலையின் பொடி சீதபேதி, அஜீரண பேதி, சுரம், நெஞ்சுச் சளி, இருமல், கக்கிருமல் முதலிய நோய்களை குறையச் செய்யும். விஷத்திற்கு இடு மருந்து, பாஷானங்களால் பரவிய விஷம் முதலியவற்றைக் குறையச் செய்யும்.
நாய்வேளை (நாய்க்கடுகு):
வாதக் கடுப்பு, குன்மம், தேகக் குத்தல், சிலேஷ்ம பீநசம், பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் முதலியவற்றை குறையச் செய்யும். இந்த இலையின் சாறு காதுவலியைக் குறையச் செய்கிறது. இலையைக் கீரையாக உபயோகிக்கலாம். விதையை வறுத்துத் துவையல் செய்து சாப்பிடலாம்.
நிலவேம்பு:
அசீரணம், சுரம் முதலியவற்றைக் குறையச் செய்கிறது. இதன் கஷாயம் ஊட்டம் தரும் மருந்தாகவும், சீரண சக்தியை உண்டு பண்ணும் மருந்தாகவும் பயன்படுகிறது.
நிலவாரை:
இது பல மருந்துகளுடன் சேர்க்கப்படுகிறது. இதன் கஷாயத்தைச் சிற்றாமணக்கு எண்ணெயுடன் சோ்த்துப் பெரியவர்களுக்குப் பேதியுண்டாகக் கொடுக்கலாம்.
நீர்முள்ளி:
பாண்டு ரோகம், நீர்க்கோவை முதலியவைகளுக்கு ஏற்ற மருந்தாகும்.
நெல்லி:
இதன் தளிர் சீதபேதிக்கு மருந்தாகிறது. விதை அல்லது இலையை கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் பித்த மயக்கம், அதிதாகம், அரோசிகம் ஆகிய நோய்களை குறையச் செய்கிறது. காயை ஊறுகாய் செய்து சாப்பிடுவது வழக்கம்.
பப்பாளி:
இதன் பால் கிருமிகளை குறையச் செய்யும். பழத்தை எச்சில், தேமல் மேல் தேய்த்து வந்தால் குறையும். கருவை அழிக்கும். பாலும் காயும் சுரக் கட்டிகளைக் கரைய செய்யும்.
பிரண்டை:
இதற்குப் பசி உண்டு பண்ணும் சக்கியிருப்பதால் துவையல் செய்து சாப்பிடுவது வழக்கம். அக்கினி மந்தம், குன்மம் முதலியவைகளை குறையச் செய்யும்.
பொன்னாவரை:
தித்திப்பு நீர் நோய்க்கு இதன் விதையைப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் குறையும். பட்டையைக் கஷாயமிட்டும் சாப்பிடலாம்.
மருதோன்றி:
இலையை எலுமிச்சைச் சாறு அல்லது காடி விட்டரைத்து வாத நோய் முதலியவற்றுக்கு பூச்சாக பயன்படுத்தலாம். இதை அரைத்து பெண்கள் நகங்களில் பூசிக் கொள்ளுவார்கள்.
மாதுளை:
மாதுளை பிஞ்சும், பழத்தின் தோலும் சீதபேதிக்கு மருந்தாகப் பன்படுகிறது. வேர் கிருமிகளைப் போக்கும் மருந்தாக பயன்படுகிறது. இதன் கஷாயத்துடன் சீனிக்காரம் சேர்த்து வாய்கொப்பளித்து வந்தால் தொண்டைக்கம்மல், வாய்புண் ஆகிய நோய்கள் குறையும். இலையை தேயிலையைப் போல் பானமாக உபயோகிக்கலாம்.
முசுமுசுக்கை:
ஜலதோஷம், நெஞ்சுச்சளி முதலியவற்றை குறையச் செய்யும்.
மூக்கிரட்டை:
இதன் வேரும், ஓற்றைப்பல் வெள்ளைப்பூண்டும் சேர்த்து கஷாயமாகக் காய்ச்சிச் சாப்பிட்டால் வயிற்றில் வாயு அதிகப்பட்டிருத்தல், நெஞ்சில் உண்டாகும் வாயுக்குத்து ஆகியவற்றை குறையச் செய்யும்.
வல்லாரை:
இதன் இலை புண்களுக்குப் பற்று செய்யப் பயன்படுகிறது. வல்லாரை சூரணமானது சருமரோகம், கண்டமாலை முதலிவற்றை குறையச் செய்யும். லேகியமாகச் செய்து சாப்பிட்டால் உடலுக்கு ஊட்டத்தை அளிக்கும்.
வில்வப்பழம்:
சீதபேதி, அசீரண பேதி ஆகியவற்றை குறையச் செய்யும்.
விளாம்பழம்:
பழம் பித்தத்தைத் தணிக்கும், பசியை உண்டு பண்ணும். மரத்தின் கொழுந்தைக் கஷாயம் செய்து சாப்பிடலாம். பிசினும் மருந்தாகப் பயன்படுகிறது.
விஷமூங்கில்:
இதன் இலையை சிற்றாமணக்கு எண்ணெய் தடவி நெருப்பில் வாட்டி, நகச் சுற்று, கட்டி முதலியவைகளுக்கு மேல போட்டால் அவை உடைந்து குணமாகும்.
வெண்டைக்காய்:
சீதபேதி, நீர்க்கடுப்பு முதலிய நோய்களை குறையச் செய்யும்.
வெற்றிலை:
வெற்றிலையைச் சிற்றாமணக்கு எண்ணெயில் தோய்த்து, நெருப்பில் வாட்டி நெஞ்சின் மேல் போட்டால் இருமல், கஷ்ட சுவாசமும் குறையும். வெற்றிலைச் சாற்றை மற்ற மருந்துகளுடன் சேர்த்ததுக் கொடு்ப்பதும் உண்டு.
வேம்பு:
இலைக் கொழுந்தை அரைத்து கரப்பான், சிரங்கு, அம்மைப்புண் முதலியவைகளுக்கு போடலாம். உள்ளுக்குள் கொடுப்பதும் உண்டு. முதிய மரத்துப் பட்டையிலிருந்து செய்யப்படும் கஷாயம் முறைக் காய்ச்சல் முதலிய நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. வேப்பெண்ணெய் குளிர்ச்சியை நீக்கி, சன்னியைக் குறையச் செய்யும். வேப்பம் பூவைத் துவையல் செய்து சாப்பிடுவது நல்லது. வேப்பிலையைப் பற்றாகவும் பயன்படுத்தலாம்.
வேலிப்பருத்தி:
ஜலதோஷம, நெஞ்சுச்சளி, வாத நோய், தேகத்தில் உண்டாகும் குடைச்சல் ஆகியவற்றைக் குறையச் செய்யும்.
வேழை:
ஜலதோஷம், வாத நோய், தேகக் குடைச்சல் ஆகிய நோய்களுக்கு பூசும் தைலமாகப் பயன்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum