Top posting users this month
No user |
Similar topics
ஆரோக்கியமான பாதங்கள்!
Page 1 of 1
ஆரோக்கியமான பாதங்கள்!
பாதங்களை பாதுகாப்பதும், பராமரிப்பதும் மிக முக்கியமானது. இதனை "பெடிக்யூர்" என்கிறார்கள். மனித உடலின் மொத்த பளுவையும் தாங்கும் கால்களையும் பாதங்களையும் பராமரிப்பது மிக அவசியம். சீனா மருத்துவ முறையான அக்குபங்சரில் கூட கால்களுக்குத் தான் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. பாதங்களில் ஆணி, உணரச்சியற்ற மரத்துப்போன உணர்வு கொண்டவர்கள் தொடர்ந்து அப்பகுதியை மசாஜ் செய்யவேண்டும். இதற்கு ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம்.
சேற்றுப்புண் மற்றும் நமைச்சல் காரணமாக புண் ஏற்பட்டால் அங்கு வெங்காயச் சாறு, எலுமிச்சைச் சாறு மற்றும் வினிகர் தடவுவது நல்லது.
கால்கள் மற்றும் பாதங்களில் அதிக வியர்வை சுரந்தால் ஏற்படும் அசௌகரியத்தைத் தடுக்க டால்கம் பவுடர், போரிக் ஆசிட் (இரண்டு ஸ்பூன்) மற்றும் சோள மாவு கலந்த பவுடரை உபயோகிக்கவும்.
கால் வீக்கம் அதிகம் இருந்தால் வெந்நீரில் மேக்னீசியம் சல்பேட் உப்பு கலந்து கால்களை அதில் நனைத்து எடுக்கவும். இதில் ஓரளவு பலன் கிடைக்கும்.
நகங்களைப் பராமரிக்கவும், கால்களைப் பாதுகாக்கவும் பல பிரத்தியேக கருவிகளை கிரிடோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. பாதங்களில் உள்ள அழுக்குகளை சுரண்டி எடுக்க, நக இடுக்குகளில் உள்ள தேவையற்ற தோல் மற்றும் அழுக்குகளைக் களைய புதிய கருவிகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
பாதங்களை வெதுவெதுப்பான நீரில் கழுவி நகம் மற்றும் அழுக்குகளை சுரண்டிய பிறகு மீண்டும் ஒரு முறை நீரில் கழுவவும். பின்பு நன்கு துடைத்துவிட்டு லோஷன் தடவவும். இதற்கெனவே ஒரு பிரத்தியேக லோஷனை கிரிடோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. உடல் உறுப்புகளில் நாம் மிகவும் பயன்படுத்துவது கைகளையும், கால்களையும்தான். இவற்றை அலட்சியப்படுத்துவது நமது உடலுக்கான நோய்களை நாமே வரவேற்பதற்குச் சமம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum