Top posting users this month
No user |
Similar topics
ஆசியாவின் அதிசயமாக கிழக்கை மாற்றுவேன் -சம்மந்துறையில் முதலமைச்சர்
Page 1 of 1

இன்று நாட்டில் நாம் தொழில் பெறுநர்களாக இருப்பதனை விட அதிகப்பேருக்கு தொழில் வழங்குநர்களாக மாறவேண்டும். எங்களால் எல்லாம் முடியும் என்ற தைரியமும், உற்சாகமும் ஒவ்வொரு இளைஞர்களின் மனதிலும் ஏற்பட வேண்டும்.
உதாரணமாக இந்த சம்மாந்துறை மண்ணில் இருந்து செய்யப்படும் நெற்களை பொலன்னறுவை போன்ற ஊர்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏன் அதனை சம்மாந்துறையில் இருந்து அரிசியாக்கி ஏற்றுமதி செய்யமுடியாது? ஏன் எங்களால் முடியாது என்ற கேள்வி எங்கள் அனைவர் மனங்களிலும் எழவேண்டும் அதனை நாம் செய்யக்கூடியவர்களாகவும், தொழில் வழங்குனர்களாகவும் நாம் மாறமுடியாது என்று கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இளைஞர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் மாநாடு பல வருடங்களின் பின்னர் நேற்று சம்மந்துறை விழினியடியில் தேசிய இளைஞர் அமைப்பாளரும் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கிழக்கிலுள்ள ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் பல தொழிற்பேட்டைகளை உருவாக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். அதன் மூலம் வேலையற்ற இளஞர்கள், யுவதிகளுக்கு பல வேலை வாய்ப்புக்களை வழங்குவதன் மூலமும், நமது ஊர்களில் இருந்து வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்லும் நமது குடும்ப பெண்கள், நம்சகோதரிகள், நமது உறவுக்காறப் பெண்களை பணிப்பெண்களாக அனுப்புவதை விட்டு அவர்களை தங்கள் வீடுகளிலேயே இருந்து சிறந்த முறையில் கைத்தொழில்களை அல்லது அவர்களால் முடிந்த தொழில்களைச் செய்வதற்கு ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கும் நடவடிக்கையினை மாகாண சபை மூலம் செய்ய தீர்மாணித்துள்ளோம்.
இலங்கை நாட்டின் நாளைய வழிகாட்டியாக வரவிருக்கும் இளைஞர்கள் பல்லாயிரக்கணக்கானோர் இங்கே கூடியிருக்கிறீர்கள். நல்லதொரு சமூகம் உருவாக வேண்டும் என்றால் இன்றைய இளைஞர்களின் வகிபாகம் கட்டாயத் தேவையாக இருக்கிறது. இளைஞர்களின் ஆக்கம், ஊக்கம், இந்த நாட்டின் அபிவிருத்திக்கு கட்டாயத்தேவையாக இருக்கிறது. நாட்டையும் நம்மூரையும், நமது குடும்பத்தையும் நல்ல நிலைக்கு கொண்டு வர இன்றைய இளைஞர்கள் நல்ல சிந்தனையுடன் தங்களின் வேலைப்பாடுகள், நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஒழுக்கமுள்ள அறிவுள்ள ஒரு சமுதாயம் உருவாக வேண்டுமென்றால் அங்கே முக்கால் வாசிப்பங்கு இளைஞர்களின் தலையிலேயே சுமத்தப்படுகிறது. எனவே இளைஞர்களாகிய உங்களிடம் ஒரு அன்பான கட்டளையை இடுகின்றேன். நாட்டில் நல்லதொரு சமுதாயமாக நம்மை நாம் வளர்த்துக்கொள்ளவும், எம்மைச் சூழவுள்ள அனைவருக்கும், சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் முன்மாதிரியாக நமது நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.
கிழக்கு மாகாணத்தை ஆசியாவின் அதிசயமான ஒரு மாகாணமாக மாற்றிக்காட்டுவேன் அதற்காக என்னுடன் இளைஞர்களாகிய நீங்கள் அனைவரும் கைகோர்க்க முன்வாருங்கள் அது கிழக்கின் விடியலை நோக்கிய பயணமாகவும் இலங்கை நாட்டின் அபிவிருத்திக்கு ஒளிர்வூட்டும் திட்டமாகவும் அமையும் என்றும் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கேட்டுக்கொண்டார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஆசியாவின் ஆச்சரியம் மிக்க நாடாக இப்படித்தான் மகிந்த காட்டினார்!
» மத்திய கிழக்கை நோக்கி போராடச் செல்லும் இளையவர்கள்: தவிக்கும் மேற்குலகு.
» வடக்கு கிழக்கை பிரித்து தீர்வுபெறும் நோக்கம் கூட்டமைப்பிற்கு துளிகூட இல்லை: பா.அரியநேத்திரன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum