Top posting users this month
No user |
Similar topics
வடக்கு கிழக்கை பிரித்து தீர்வுபெறும் நோக்கம் கூட்டமைப்பிற்கு துளிகூட இல்லை: பா.அரியநேத்திரன்
Page 1 of 1

கறுப்புக் கண்ணாடி அணிந்துகொண்டு கூட்டமைப்பை விமர்சிப்பதற்கு எவரும் அருகதையில்லை. தங்களது கறுப்புக்கண்ணாடியை கழட்டிவிட்டு வெள்ளைக்கண்ணாடியை அணிந்து கொண்டு தங்களைப் பார்க்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற சர்வதேச மகளிர் தின மற்றும் கௌரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், இலங்கையில் தமிழ் தேசியத்துக்காக தந்தை செல்வாவின் மென்சக்தி போராட்டத்தில் பெண்களின் பங்கு அதிகளவில் இருந்தது. அதேபோன்று வடக்கு கிழக்கில் நடைபெற்ற மென் சக்தி போராட்டத்திலும் பெண்களின் பங்களிப்பானது ஒரு அழியாத வரலாறாகவே உள்ளது.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடந்த காலங்களில் நடைபெற்ற போராட்டமாக இருக்கலாம், தமிழ் தேசிய கூட்டமைப்பாக இருக்கலாம் இவைகள் அனைத்தும் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளை தகர்த்து பெண்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டி நடத்தப்பட்டவையே.
2009ஆண்டு மே மாதத்துக்கு பிறகு இலங்கையில் நடைபெற்ற அசாதாரண சம்பவங்களை சனல்4 என்னும் தொலைக்காட்சி சேவை ஆவணப்படமாக திரையிட்டு காட்டியது. அதில் பெண்கள் மிகவும் கொடூரமாக சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுதை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளனர்.
இசைப்பிரியா என்ற ஊடகப்பெண், விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தார் என்பதற்காக மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வரலாறு கடந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு உள்ளது.
ஆனால் தற்பொழுது நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக எல்லாம் மாறிவிட்டது என்று நினைக்கின்றோம். அது உண்மையல்ல. ஆள்பவர் மாத்திரமே மாறியிருக்கின்றார். அதனால் எமக்கு எந்தவித நன்மையும் கிடைக்கப்போவதில்லை.
ஹம்பாந்தோட்டை முள்ளை பொலநறுவை முள்ளால் எடுத்துள்ளோம். அவ்வளவுதான் மாற்றம். முள்ளு முள்ளாகத்தான் உள்ளது. தமிழ் தேசிய அரசியலை வென்றெடுப்பதற்காக மே மாதம் 19ஆம் திகதிக்கு பின்னர் நாங்கள் எட்டுப்பரீட்சை எழுதியிருக்கின்றோம்.
எட்டுப்பரீட்சை என்பது எட்டு தேர்தலை நாங்கள் சந்தித்திருக்கின்றோம். விடுதலைப்போராட்டத்திற்கு பின்னர் நாம் எதிர்கொண்ட முதலாவது தேர்தல் 2010ஆம் ஆண்டு நடைபெற்றது. இதன்போது 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டோம். நாங்கள் 14பேரும் அன்று தெரிவு செய்யப்படாவிட்டிருந்தால் இந்த வெல்லாவெளி பிரதேசமும் சிங்கள குடியேற்றமாக மாறியிருக்கும்.
நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினை ஆதரித்ததன் காரணமாகவே இன்று நாங்கள் சர்வதேசத்தில் நின்று நீதி கேட்டு கொண்டிருக்கின்றோம். அவ்வாறு வாக்களிக்காவிட்டிருந்தால் எமது மக்களை சோரம் போகச் செய்திருப்பார்கள்.
சிங்கள குடியேற்றங்களை செய்யும் போது வாயை பொத்துக்கொண்டு இருந்திருப்பார்கள். அதனை தடுப்பதற்கே தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் செய்து கொண்டுள்ளது. ஆனால் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் தயாராகவுள்ளோம். அரசியல் பணி என்பது நீண்ட பயணம். கிழக்கு மாகாணசபையில் நாங்கள் சில விட்டுக்கொடுப்புகளை செய்ததன் காரணமாக அதுதான் எங்கள் அரசியல் பயணம் என சிலர் நினைக்கின்றனர்.
மாகாணசபை என்பது எங்கள் அரசியல் பணியின் ஒரு அங்கம். எங்கள் இலட்சியம் என்பது நீண்டபயணம். இந்த பயணத்தில் எட்டுப்பரீட்சையில் நாங்கள் வெற்றிபெற்றுள்ளோம். தற்போது ஒன்பதாவது பரீட்சையை எதிர்கொண்டுள்ளோம்.
இந்த ஒன்பதாவது பரீட்சையான பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினை பலப்படுத்துவதன் மூலம் தற்போது ஐ.நா.வின் வாசல்படியை தட்டிக்கொண்டிருக்கும் நாங்கள் உள்ளே செல்வதற்கான நிலையேற்படும்.
மாகாணசபை என்பது எமது மக்களின் அன்றாட தேவையினை பூர்த்தி செய்யக்கூடிய தற்காலிக ஏற்பாடு வடக்கு கிழக்கை பிரித்து தீர்வுத்திட்டத்தினைப் பெறும் நோக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு துளிகூட இல்லை. கிழக்கு மாகாணசபையினை பொறுத்தவரையில் முஸ்லிம் உறுப்பினர்கள் அதிகளவில் உள்ளனர். தமிழ் உறுப்பினர்கள் குறைந்தளவிலேயே உள்ளனர்.
இதன் காரணமாகவே முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைத்தது. இந்த விடயங்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு கறுப்புக்கண்ணாடி அணிந்துகொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பினை விமர்சிப்பதற்கு எவருக்கும் அருகதையில்லை. கறுப்புக்கண்ணாடியை கழட்டிவைத்துவிட்டு வெள்ளைக்கண்ணாடியை அணிந்துபார்த்தால் எங்கள் பணி எதுவென்று புரியும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வடக்கு கிழக்கு மக்களின் தொழில் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை: அரியநேத்திரன்
» அமைச்சு பதவி வேண்டாம், இணைந்த வடக்கு கிழக்கில் சுகந்திரமாக வாழவேண்டும்: பா.அரியநேத்திரன்- ஆட்சி மாற்றத்திற்கான காரணம் சிறுபான்மையினமே: பொன்.செல்வராசா
» வடக்கு - கிழக்கில் இரகசிய முகாம்கள் இல்லை: பிரதமர் ரணில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum