Top posting users this month
No user |
Similar topics
அமைச்சு பதவி வேண்டாம், இணைந்த வடக்கு கிழக்கில் சுகந்திரமாக வாழவேண்டும்: பா.அரியநேத்திரன்- ஆட்சி மாற்றத்திற்கான காரணம் சிறுபான்மையினமே: பொன்.செல்வராசா
Page 1 of 1

புதிய ஜனாதிபதியின் வெற்றிக்குப்பின்னர் இந்த நாட்டிலே தேசிய அரசாங்கம் அமையவிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன அந்த அரசாங்கத்தில் த.தே.கூட்டமைப்பு எவ்விதமான அமைச்சுப்பதவிகளையும் எடுக்கக்கூடாது என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும் என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார்.
தேசிய அரசாங்கம் அமைவது தொடர்பாகவும் அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சுப்பதவிகளை எடுக்கவிருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளமை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், இந்த நாட்டு ஜனாதிபதியினை தெரிவு செய்யும் ஒரு வல்லமை இந்த நாட்டில் உள்ள சிறுபான்மை இனத்தினைச் சேர்ந்த தமிழ்மக்களுக்கும் இருக்கின்றது என்பதனை வடகிழக்கில் உள்ள மக்கள் மீண்டும் ஒரு முறை நிருபித்து இருக்கின்றார்கள்.
இதே நிலைதான் முன்னர் இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்சவிற்கு நிகழ்ந்தது வடகிழக்கு மக்கள் பெரும்பான்மையாக வாக்கு அளிக்காததன் காரணமாக முதன்முதலாக மகிந்த வெற்றிபெற்றார்.
ஆனால் இந்தமுறை அதே வடகிழக்கு மக்கள் தேர்தலில் வாக்களித்து மகிந்த ராஜபக்சவை தோல்வியடையச் செய்திருக்கின்றார்கள்.
இந்த நாட்டிலே அமையவிருக்கும் தேசிய அரசாங்கத்திற்கு எமது கட்சி முழு ஆதரவினையும் வழங்கும் அதே நேரம் இந்தநாட்டின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவும், 18வது அரசியலமைப்பினை மாற்றியமைக்கவும், பாராளுமன்ற ஜநனாயகமுறையை கொண்டு வருதல் போன்ற விடயங்களுக்கு த.தே.கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை.
தற்போது தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஜனாதிபதி தென்பகுதி மக்களுக்கு ஆற்றவேண்டிய சேவையை விட வடகிழக்கு மக்களுக்கு ஆற்றவேண்டிய சேவை அதிகமாகவுள்ளது அதற்காகவேதான் வடகிழக்கு மக்கள் புதிய ஜனாதிபதிக்கு தகுந்த நேரத்தில் ஆணையை வழங்கியிருக்கின்றார்கள் என்பதனை அவர் அறிந்து செயற்படவேண்டும்.
அவ்வாறு செயற்படத்தவறும் பட்சத்தில் எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை சந்திக்கவேண்டிய நிலைக்கு இந்த ஜனாதிபதியும் உள்ளாவார் என்பதில் ஐயமில்லை.
65 வருடகாலமாக இந்த நாட்டிலே புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கு நிரந்தரத்தீர்வு கிடைக்கவேண்டும் என்பதுதான் எமது மக்களின் அவாவாகும். அதற்காகவேண்டித்தான் இம்முறை ஒட்டுமொத்த வடகிழக்கு மக்களும் எதிரணி வேட்பாளருக்கு வாக்களித்து ஜனாதிபதியாக தெரிவு செய்திருக்கின்றார்கள்.
இந்த நாட்டிலே போர் முடிவிற்கு கொண்டு வரப்பட்டதன் பிற்பாடு மகிந்த ராஜபக்ச உட்பட பெரும்பான்மையின மக்கள் அனைவரும் அந்த போர் வெற்றியினை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள். அதேபோன்று எமது சகோதர இனமும் தங்களது உறவுகளுக்காகவேண்டி அஞ்சலி தெரிவித்து அவர்களை நினைவு கூறுகின்றார்கள்.
ஆனால் தமிழ் மக்களை பொறுத்தவரையில் துரதிஸ்டவசமான விடயம் என்னவென்றால் இலட்சக்கணக்கில் இந்த நாட்டிலே உயிர்நீத்த எமது உறவுகளுக்காக அஞ்சலி செலுத்த முடியாதது மிகவும் மனவேதனை தரும் விடயமாகும்.
தற்போது சிறைவாசம் அனுபவிக்கும் எமது தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யவேண்டும். இதனை எமது கட்சியின் தலைவர் இரா.சம்மந்தன் ஐயாவிடம் சொல்லி இருக்கின்றேன்.
இதனை உடனடியாக தற்போதைய ஜனாதிபதியிடம் எடுத்துக்கூறி அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்றும் அப்போதுதான் தமிழ் மக்களின் மனதினை புதிய ஜனாதிபதி வெல்ல முடியும் என்றும் அத்தோடு வடகிழக்கு மாகாணங்களில் இருக்கும் இராணுவ முகாங்கள் அகற்றப்படவேண்டும் அல்லது குறைக்கப்படவேண்டும், திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் தடுத்து நிறுத்தப்படவேண்டும், வடகிழக்கில் உள்ள ஆளுனர்கள் உடனடியாக மாற்றப்பட்டு நல்லாட்சிக்கு வழியேற்படுத்திக்கொடுக்க வழிவகைகளை மேற்கொள்வேண்டும் என்றும் எமது தலமையிடம் கூறியிருக்கின்றேன்.
எமது இறுதி இலக்கு அமைச்சுப்பதவி அல்ல மாறாக இணைந்த வடகிழக்கில் எமது மக்கள் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழக்கூடிய வழிவகைளை ஏற்படுத்திக்கொடுக்கக்கூடியது தற்போதைய ஜனாதிபதியின் கடமையும் பொறுப்புமாகும் எனவும் அது தவறும் பட்சத்தில் எமது கட்சி த.தே.கூட்டமைப்பில் உள்ள அனைத்து தரப்பினருடனும், புலம் பெயர் சமுகத்துடனும், புத்திஜீவிகளுடனும் கூடி எதிர்கால திட்டம் தொடர்பாக முடிவெடுப்போம் எனவும் கூறினார்.
ஆட்சி மாற்றத்திற்கான காரணம் இந்த நாட்டில் வாழும் சிறுபான்மையினம்: பொன்.செல்வராசா
30 ஆண்டு காலமாகவும் 2009ஆம் ஆண்டுக்குப் பின்பும் பல சோதனைகளும்,வேதனைகளும் நிறைந்த சமூகமாக எமது தமிழ் சமூகம் வாழ்ந்து வந்தது என்பதை நாங்கள் மறந்து விடமுடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.
மட்டக்களப்பு - பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை பெரியகல்லாறு கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் 'நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கிணங்க சிறுபான்மை இன மக்களின் வாக்குப்பலம் அரசியல் மாற்றத்தை செய்திருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலைப் பகிஷ்கரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தாலும் கூட அதனையும் எதிர்த்து எமது தமிழ் மக்கள் இம்முறை அரசியல் மாற்றத்துக்கு வாக்களித்திருப்பார்கள் என்பதுதான் உண்மை.
ஒரு சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அன்பர்கள் இத்தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் ஒதுக்கிவிட்டு இந்த தேர்தலில் தமிழ் சமூகம் ஆட்சிமாற்றத்துக்காக வாக்களித்திருக்கின்றார்கள் என்பது நல்ல சந்தர்ப்பமாகும்.
2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என ஒரு குழு எம்மைக் கேட்டிருந்தது. அதற்கிணங்க நாங்கள் அந்த தேர்தலைப் பகிஷ்கரித்தோம். அதன் பின்னர் கொடூர ஆட்சி வந்தது.
நாங்கள் இத் தேர்தலை பகிஷ்கரித்திருந்தால் மீண்டும் ஒருமுறை ராஜபக்ஷ இந்த நாட்டில் கொடூர ஆட்சியை மேற்கொண்டிருப்பார். எனினும் அது நடைபெறவில்லை. ஆட்சி மாற்றத்துக்கான காரணம் இந்நாட்டிலே வாழ்கின்ற சிறுபான்மை இனம் என்பதை ஒருபோதும் மறந்து விடமுடியாது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரது பதவிக்காலம் முடிந்து அம்பாந்தோட்டைக்குச் சென்றபோது அந்த மக்களிடம் அவர் கூறியிருப்பதானது சிங்கள மக்கள் என்னைத் தோற்கடிக்கவில்லை. வடக்கு கிழக்கில் வாழ்கின்ற சிறுபான்மை தமிழ் மக்களும் மலையகத்தில் வாழ்கின்ற சிறுபான்மைத் தமிழினமும் தான் என்னைத் தோற்கடித்துள்ளார்கள் என்ற இன முரண்பாட்டுக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
தற்போது புதிய அரசாங்கம் நாடாளுமன்றில் பெரும்பான்மையை பெறமுடியாத நிலை இருந்து கொண்டிருக்கின்றது. இன்னும் சில நாட்களில் என்ன மாற்றங்கள் நடைபெறப் போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வடக்கு கிழக்கு ஒன்றிணைந்த ஆட்சி வேண்டாம்! நல்லாட்சி போதும்: ஹக்கீம்
» இணைந்த வடகிழக்கில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க தொடர்ந்து போராடுவோம்: அரியநேத்திரன்
» ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மட்டுமே இனப்பிரச்சினையை தீர்க்கமுடியும்!- பொன்.செல்வராசா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum