Top posting users this month
No user |
Similar topics
சீஸ் நாண்
Page 1 of 1
சீஸ் நாண்
மைதா மாவு - அரை கிலோ
சீனி - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
துருவிய சீஸ் - 250 கிராம்
ஈஸ்ட் - 8 கிராம்
பட்டர் - தேவைப்பட்டால்
முதலில் மைதாவை சலித்துக் கொள்ளவும். ஒரு கோப்பையில் ஈஸ்ட், ஒரு தேக்கரண்டி சீனி, மூன்று மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி கலந்து 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
ஈஸ்ட் நன்கு நுரைத்துவரும், பிறகு மாவில் தேவையான உப்பு சேர்த்து அதில் இந்த ஈஸ்ட் கலவையை ஊற்றவும்.
மேலும் சிறிது தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும். 20 நிமிட நன்கு பிசைந்து ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி போட்டு 20 நிமிடங்கள் வைக்கவும்.
இப்பொழுது மாவு நன்கு உப்பி இருக்கும். இதில் சுமார் 12 உருண்டைகள் செய்யவும். அதன் பின்பு மாவை வட்டமாக தட்டவும்.
அதன் நடுவில் துருவிய சீஸை வைத்து நன்கு மூடவும் அதன் பின்பு பூரி கட்டையால் நாம் விரும்பும் வடிவத்தில் தேய்க்கவும், இது சப்பாத்தியைவிட சற்று தடிமனாக இருப்பது அவசியம்.
இதற்கிடையில் ஒரு நாண் ஸ்டிக் தவாவை அடுப்பில் ஏற்றி சூடுப்படுத்தவும் அதில் இந்த நாணை போட்டு மிதமான தீயில் வேக விடவும். சிறிது வெந்தபின்பு திருப்பி போடவும்.
மேலும் அடிக்கடி திருப்பி போடவும் இதில் சிறிது பட்டர் விருப்பம் இருந்தால் போட்டு வேகவிடலாம், கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த நினைப்பவர்கள் பட்டரை தவிர்க்கலாம்.
சுவையான சீஸ் நாண் தயார். இதற்கு பனீர் பட்டர் மசாலா, பட்டர் சிக்கன் நல்ல பொருத்தமாக இருக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum