Top posting users this month
No user |
Similar topics
தாய்லாந்து சிக்கன் வெஜிடபுள் ஸ்டிர் ஃப்ரை
Page 1 of 1
தாய்லாந்து சிக்கன் வெஜிடபுள் ஸ்டிர் ஃப்ரை
எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் - கால் கிலோ
ப்ரோக்கலி (அ) காலிஃப்ளவர் - ஒரு கப் (இரண்டும் கிடைத்தால் கலந்து எடுத்துக் கொள்ளவும்)
முட்டைக்கோஸ் - கால் பாகம்
ஸ்ப்ரிங் ஆனியன் (வெங்காயத் தாள்) - 3 (துண்டுகளாக்கவும்)
உப்பு - கால் தேக்கரண்டி அல்லது ஃபிஷ் சாஸ் - ஒரு தேக்கரண்டி
சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
சன் ஃப்ளவர் (அ) வெஜிடபுள் எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
வினிகர் - ஒரு தேக்கரண்டி
துருவிய இஞ்சி - ஒரு தேக்கரண்டி
பொடி செய்த நிலக்கடலை (Pea Nut) - ஒரு தேக்கரண்டி
கார்ன் ஃப்ளார் - ஒரு தேக்கரண்டி
தண்ணீர் - 3 தேக்கரண்டி
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கனைப் போட்டு 2 நிமிடங்கள் வேகவிட்டு பொரித்தெடுக்கவும். (மொறுமொறுப்பாக இருக்கக்கூடாது).
கார்ன் ஃப்ளாரைத் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
சிக்கன் பொரித்த எண்ணெயில் ப்ரோக்கலியைப் போட்டு 2 நிமிடங்கள் வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
பிறகு அதே எண்ணெயில் முட்டைக்கோஸைப் போட்டு 2 நிமிடங்கள் நன்றாக வதக்கவும்.
கோஸுடன் சிக்கன், வதக்கிய ப்ரோக்கலி, சோயா சாஸ், துருவிய இஞ்சி, வினிகர், உப்பு, கார்ன் ஃப்ளார் கரைசல் அனைத்தையும் சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாகக் கிளறவும்.
கடைசியாக நல்லெண்ணெய், பொடி செய்த நிலக்கடலை, ஸ்பிரிங் ஆனியன் போட்டுக் கிளறி இறக்கவும்.
டேஸ்டி தாய்லாந்து சிக்கன் வெஜிடபுள் ஸ்டிர் ஃப்ரை ரெடி.
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Similar topics
» தாய்லாந்து சிக்கன் வெஜிடபுள் ஸ்டிர் ஃப்ரை
» தாய்லாந்து சிக்கன் வெஜிடபிள் ஸ்டிர் ஃபிரை
» ப்ரோகோலி ஸ்டிர் ஃப்ரை
» தாய்லாந்து சிக்கன் வெஜிடபிள் ஸ்டிர் ஃபிரை
» ப்ரோகோலி ஸ்டிர் ஃப்ரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum