Top posting users this month
No user |
Similar topics
மார்புள் கேக் - 2
Page 1 of 1
மார்புள் கேக் - 2
மைதா - 300 மில்லி
சர்க்கரை - 200 மில்லி
முட்டை - 4
கோகோ பவுடர் - 2 தேக்கரண்டி
வெண்ணெய் - 200 மில்லி (உருகியது)
பால் - அரை கப்
திராட்சை - சிறிது
வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி
பேக்கிங் பவுடர்
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். மைதா மாவை சலித்து பேக்கிங் பவுடரை அதில் நன்கு கலக்கிக் கொள்ளவும்.
பின் முட்டை, வெண்ணெய், எசன்ஸ் மற்றும் சர்க்கரையை ஒன்றாக சேர்த்து மிக்சர் அல்லது மிக்சியில் நைசாக அடித்துக் கொள்ளவும்.
பின் அந்த கலவையில் பாலை சேர்த்து கலக்கி, பின் மைதா மாவு கலவையை கொஞ்சம் கொஞ்சம் சேர்த்து பேஸ்ட் பதத்தில் நன்கு நைசாக கலக்கவும். திராட்சையை சேர்க்கவும்.
அதில் கால் பங்கு கலவையை தனியே எடுத்து கோகோ பவுடரை சேர்த்து நன்கு கட்டிப்படாமல் கலக்கவும்.
பேக்கிங் ட்ரேவில் வெண்ணெய் தடவி, கொஞ்சம் லூசான மாவினை தூவிக் கொள்ளவும்.
முதலில் கோகோ பவுடர் சேர்க்காத கலவையை ட்ரேவில் ஊற்றி அதன் மேல் கோகோ பவுடர் சேர்த்த மாவினை ஊற்றி கரண்டியில் ஒன்றுக்கு இரண்டாக கலந்து விடவும்..
அவனை 350 டிகிரியில் சூடாக்கி சுமார் 45 நிமிடம் பேக் செய்யவும்.
கேக் நன்கு சிவந்து வெந்ததும் அவனை அணைத்து, திறந்து வைத்து 10 நிமிடம் வைக்கவும்.
சுவையான யம்மி கேக் ரெடி. துண்டுகளாக்கி பரிமாறவும்.
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum