Top posting users this month
No user |
Similar topics
க்ரிஸ்பி நூடில்ஸ் & டோபு
Page 1 of 1
க்ரிஸ்பி நூடில்ஸ் & டோபு
அரிசி நூடில்ஸ் - ஒரு கைப்பிடி
டோபு - 1/2 பாக்கட் (200)
வெட்டிய கரட் - 1/4 கப்
வெட்டிய கபேஜ் - 1/2 கப்
வெட்டிய வெங்காயம் - 1/4 கப்
சீனி - 5 மேசைக்கரண்டி
ஒலிவ் எண்ணெய் - பொரிக்க, வதக்க
உப்பு
சோயா ஸோஸ்- 1/4 தேக்கரண்டி
சீனியை ஒரு மேசைக்கரண்டி தண்ணீர் விட்டு பானில் போட்டு உருக்கவும். (காரமெல்)
சீனி கரைந்து பிரவுண் நிறமானவுடன் அதனுள் சோயா ஸோஸ் சேர்த்து கலக்கவும்.
மேலும் 2 மேசைகரண்டி தண்ணீர் சேர்த்து 2 நிமிடங்களுக்கு காய்ச்சி இறக்கி ஆறவிடவும்.
டோபுவை மெல்லிய கீலங்களாக வெட்டி உப்பு, மிளகாய் தூள் பிரட்டி டீப் பிரை செய்து எடுக்கவும்.
ஒரு பானில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு அதில் வெங்காயம், கரட், கபேஜ் போட்டு உப்பு சேர்த்து வதக்கி எடுக்கவும்.
அரிசி நூடுல்ஸை டீப் பிரை பண்ணி எடுக்கவும்.
பின்னர் பரிமாறும் தட்டில் காரமெல் ஸோஸ் சிறிது ஊற்றி அதன் மேல் பொரித்த நூடில்ஸை போட்டு அதன் மேலும் ஸோசை சிறிது தெளிக்கவும்.
பின்னர் நூடில்ஸ் மேல் வதக்கிய கலவை சிறிதை பரப்பி அதன் மேல் பொரித்த டோபுவை போடவும்.
மேலே சிறிது ஸோசை தெளித்து பரிமாறவும்.
சுவையான நூடில்ஸ் உணவு தயார்.
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum