Top posting users this month
No user |
Similar topics
ஆலு பாலக் தால்
Page 1 of 1
ஆலு பாலக் தால்
உருளைக்கிழங்கு -- 1என்னம்
பாலாக் கீரை -- 1கட்டு
துவரம்பருப்பு -- 1கப்
சீரகம் -- 1 டீஸ்பூன்
நெய் -- 1ஸ்பூன்
இஞ்சி,பூண்டு விழுது -- 1 1/2 டீஸ்பூன்
வெங்காயம் -- 1கப் (நறுக்கியது)
பச்சைமிளகாய் -- 3 என்னம் (நீளமாக வெட்டியது)
தக்காளி -- 1என்னம் ( நறுக்கியது)
மிளகாய்தூள் -- 1ஸ்பூன்
கரம்மசாலா தூள் -- 1/2டீஸ்பூன்
மஞ்சள்தூள் -- 1/2 டீஸ்பூன்
தனியா தூள் -- 1 டீஸ்பூன்
உப்பு -- தே.அ
உருளைக்கிழங்கை தோலை சீவி சிறு,சிறு துண்டங்களாக நறுக்கி உப்பு கலந்த தண்ணீரில் 2 நிமிடம் ஊறவைக்கவும். அதன்பின் 4 நிமிடம் தனியாக வேக வைக்கவும்.
பாலாக்கீரையை தண்ணீரில் நன்றாக அலசி பொடிதாக நறுக்கிக்கொள்ளவும்.
துவரம் பருப்பை வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.
வாணலியில் நெய் விட்டு சீரகத்தை தாளிக்கவும்.
இதனுடன் இஞ்சி,பூண்டு விழுது,பச்சை மிளகாய்,வெங்காயத்தை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியபின் பாலக்கீரை,தக்காளியையும் போட்டு வதக்கவும்.
பின் மிளகாய் தூள்,கரம் மசாலா தூள்,மஞ்சள் தூள்,தனியாதூள்,உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
3 நிமிடத்திற்குப் பிறகு வேகவைத்த பருப்பையும் ,உருளைக்கிழங்கையும் சேர்த்து ஒரு கொதிவந்ததும் இறக்கி பறிமாறலாம்.
ரெடி
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum