Top posting users this month
No user |
Similar topics
கோவா சிக்கன் கறி
Page 1 of 1
கோவா சிக்கன் கறி
கோழி - ஒன்று
தேங்காய் - ஒன்று
மஞ்சள் - ஒரு அங்குலத் துண்டு
உலர்ந்த மிளகாய் - 10
மிளகு - 6
பட்டை - 2 அங்குலத் துண்டு
ஏலக்காய் - 4
இஞ்சி - ஒரு அங்குலத்துண்டு
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 10 பல்
கிராம்பு - 4
புளி - சிறு எலுமிச்சை அளவு
வினிகர் - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2
உப்பு - தேவையான அளவு
சீனி - ஒரு தேக்கரண்டி
கோழிக்கறியை நன்கு கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக்கி, ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு பிரட்டி வைக்கவும். அரை கப் நீரில் புளியைக் கரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கி வைக்கவும். தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும். மஞ்சளுடன் உலர்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, பட்டை, ஏலக்காய் சேர்த்து விழுதாக அரைத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் கோழித் துண்டுகளைச் சேர்த்து நன்கு வதக்கி, சிறிது தண்ணீர் சேர்த்து, மூடி வைத்து கறி மிருதுவாகும் வரை நன்றாக வேகவிடவும்.
கறி வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள மசாலா, தேங்காய் பால், புளிக் கரைசல், வினிகர், ஒரு தேக்கரண்டி சீனி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து மேலும் சில நிமிடங்கள் வேகவிடவும்.
குழம்பு நன்கு கொதித்து கிரேவி போல் வந்தவுடன் இறக்கிவிடவும்.
சுவையான கோவா சிக்கன் கறி ரெடி.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum