Top posting users this month
No user |
Similar topics
ஸ்பைசி மீன் மசாலா
Page 1 of 1
ஸ்பைசி மீன் மசாலா
முள் அதிகம் இல்லாத பெரிய வகை மீன் - 8 துண்டுகள்(black pomfret,king fish)
பட்டை - ஒரு சிறிய துண்டு
நறுக்கிய வெங்காயம் - 3
பொடியாக நறுக்கிய இஞ்சி,பூண்டு - 2 தேக்கரண்டி
நறுக்கிய தக்காளி - ஒன்று
கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை - 10 இலை
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
குருமிளகுத் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு
மீன் துண்டுகளில் 2 துண்டு மீனை மட்டும் முள்ளை நீக்கி வைக்கவும்.
மீதமுள்ள 6 மீன் துண்டுகளில் கொஞ்சம் மிளகாய் தூள், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு, உப்பு சேர்த்து பிரட்டி 2 மணி நேரம் வைக்கவும்.
பின் எண்ணெயில் மசாலா பிரட்டிய 6 துண்டுகளை பொரித்து எடுக்கவும். பொரிக்க அதிகம் எண்ணெய் உபயோகிக்க வேண்டாம். 4 ஸ்பூன் எண்ணெய் போதும்.
மீனை பொரித்து பாத்திரத்தில் மாற்றி விட்டு அதே எண்ணெயில் பட்டை, வெங்காயம், கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும்.
வதங்கி பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். பின் தக்காளி, கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கி தக்காளி நன்கு உடைந்து வேகட்டும்.
அதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், குருமிளகுத்தூள் சேர்த்து மீதமுள்ள பொரிக்காத 2 துண்டு முள் களைந்த மீனை போட்டு நன்கு வதக்கி மசாலாவுடன் பொடித்து வேக விடுங்கள்.
இந்த மீன் 5 நிமிடத்தில் வெந்து விடும். பின் மீனும் வெந்து மசாலா சுண்டி நல்ல கெட்டியாக க்ரேவி பருவத்தில் வந்ததும் பொரித்த மீன்களை சேர்த்து இனி அதிகம் கிளற வேண்டாம்.
லேசாக மசாலா எல்லா இடத்திலும் பரவும் விதம் மட்டும் கிளறி 2 நிமிடம் குறைந்த தீயில் மூடி விடவும். சுவையான மீன் மசாலா ரெடி

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum