Top posting users this month
No user |
Similar topics
பீட்ரூட் மிளகு மசாலா
Page 1 of 1
பீட்ரூட் மிளகு மசாலா
பீட்ரூட் - 250 g
வெங்காயம் - 1
மிளகு - 2 tsp
தேங்காய் - 2 tbsp
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 tsp
எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பில்லை - தாளிக்க
உப்பு - தேவையான அளவு
பீட்ரூட பொடியாக நறுக்கி ஆவியில் வேகவைத்து எடுக்கவும். ரொம்பவும் குழைய வேகவைக்கவேண்டாம்.
தாளிக்க சிறிதளவு வெங்காயம் வைத்துவிட்டு மிளகு மற்றும் தேங்காய் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
எண்ணெய் காய்ந்ததும் தாளிக்க கூறியுள்ளதை தாளித்து வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு பச்சை வாசம் அடங்கியது அரைத்த மசாலா சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
கடைசியாக வேகவைத்த பீட்ரூட் சேர்த்து மசாலாவில் நன்கு பிரட்டி இறக்கவும்.
கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum