Top posting users this month
No user |
Similar topics
முடக்கத்தான் தோசை
Page 1 of 1
முடக்கத்தான் தோசை
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 1/2 கப்
புழுங்கல் அரிசி - 1 கப்
வெந்தயம் - 1\2 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 150 கி
முடக்கத்தான் கீரை - 1 கட்டு
உப்பு - தேவையான அளவு
செய்முறை;
பச்சரிசி , புழுங்கல் அரிசி, வெந்தயம் உளுந்தம் பருப்பு இவைகளை ஒன்றாக ஊற வைக்கவும்
குறைந்தது 2 மணி நேரம் ஊற வைக்கவும்
பிறகு முதலில் முடக்கத்தான் கீரையை கிரைண்டரில் மை போல அரைத்து அதனுடன் ஊறவைத்த அரிசியையும் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்
பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்து வைத்து குறைந்தது 6 மணி நேரம் புளிக்க விடவும்
பிறகு தொசை வார்த்து தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் சூடாக பறிமாறவும்
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum