Top posting users this month
No user |
Similar topics
14 வயது சிறுவனை கூரிய ஆயுதத்தால் குத்தி மரணத்தை ஏற்படுத்தியவருக்கு 20 வருட கடூழிய சிறை
Page 1 of 1

14 வயது சிறுவன் ஒருவனை கூரிய ஆயுதத்தால் கழுத்தில் குத்தி மரணத்தை ஏற்படுத்திய நபர் ஒருவருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் இருபதுவருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சம்பவ தினமான 05.05.1991 அன்று மட்டக்களப்பு, கொக்குவிலை சேர்ந்த சிவலிங்கம் பாலச்சந்திரன் எனும் சீவல் தொழிலாளியான நபர், மதுபோதையில் தனது மனைவியைத் தேடி இருதயபுரம் பகுதிக்கு சென்றுள்ளார்.
இதன்போது, எதிரில் வந்த 14 வயதுச் சிறுவன் கனகராஜா விக்னராஜாவை தான் வைத்திருந்த கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்தாரெனக் குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
குறித்த வழக்குக்கு சமூகமளிக்காமல் தலைமறைவாகியிருந்த எதிரி சிவலிங்கம் பாலச்சந்திரன் மூன்று வருடங்களின் பின்னர் சமூகமளித்து விசாரணையில் எதிர்வாதத்திற்கு விண்ணப்பித்தபோதும், மன்று அதனை நிராகரித்தது.
பின்னர் இந்த வழக்கில் எதிரியை கொலைக் குற்றச்சாட்டுக்கு குற்றவாளியாகக் கண்ட மேல்நீதிமன்றம் அவருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதனையடுத்து குறித்த தீர்ப்பை எதிர்த்து எதிரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து தீர்ப்பைப் புறத்தொதுக்கி எதிரியை வைத்து புதிதாக விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டது.
இதன்படி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில், மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.
விசாரணைகளின்போது சாட்சியங்களும், எதிரியின் கைவிரல் அடையாள அறிக்கையும் பெறப்பட்டன.
இந்த நிலையில், மதுபோதையில் சம்பவம் நிகழ்ந்ததால், கொலையாகாத மரணத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் விசாரணை நடைபெற்றது.
இதன்போது கொலையல்லாத மரணத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டை எதிரி சிவலிங்கம் பாலச்சந்திரன் மன்றில் ஏற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து மேல்நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் எதிரிக்கு இருபது வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 16 வயது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சிறிய தந்தைக்கு 45 வருட சிறை
» மஹிந்த அபேகோனுக்கு இரண்டரை வருட சிறை
» லிந்துலையில் 17 வயது சிறுவனை காணவில்லை
» மஹிந்த அபேகோனுக்கு இரண்டரை வருட சிறை
» லிந்துலையில் 17 வயது சிறுவனை காணவில்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum