Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மகிந்தவின் தோல்வி இனவாதத்தை கையிலெடுத்ததால் உண்டாகியது: திகாம்பரம்

Go down

மகிந்தவின் தோல்வி இனவாதத்தை கையிலெடுத்ததால் உண்டாகியது: திகாம்பரம் Empty மகிந்தவின் தோல்வி இனவாதத்தை கையிலெடுத்ததால் உண்டாகியது: திகாம்பரம்

Post by oviya Wed Jul 29, 2015 3:02 pm

ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் மலையக மக்களுக்கு எந்த அபிவிருத்தி திட்டங்களும் இல்லை என தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
இன்று ஹற்றன் காசல்ரீ பகுதியில் இடம்பெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது உரையாற்றிய அவர்,

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மலையக மக்களுக்கு பல அபிவிருத்தி திட்டங்களை செய்து தருவதாக கூறியதோடு தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தையும் பெற்று தருவதாக கூறினார்.

தற்போது ஜனாதிபதியாக இருக்கின்ற மைத்திரிபால சிறிசேனவை வெற்றிபெறச் செய்தது நாங்கள். ஆனால் இன்று அவருடைய புகைப்படத்திற்கு பக்கத்தில் ஏனைய மலையக அரசியல்வாதிகள் தங்களுடைய படங்களையும் பிரசுரித்து கொண்டு இருக்கின்றார்கள். இது மக்களுடைய வாக்குகளை பெறுவதற்கான ஒரு சூழ்ச்சி ஆகும்.

முன்னாள் ஜனாதிபதி கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இனவாதத்தை ஏற்படுத்தியதன் காரணமாக தோல்வியடைந்தார்.

அத்தோடு தேர்தலின் பின்னரும் தான் தோல்வியடைந்ததுக்கு தமிழ் மக்களே காரணம் என வெளிப்படையாக கூறியது அனைவருக்கும் ஞாபகம் இருக்கும்.

இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் வருவதாக இருந்தால் நாட்டில் மீண்டும் இன துவேசம் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு பாரிய பிரச்சினைகள் ஏற்படும்.

நடைபெறவுள்ள தேர்தலில் மலையக மக்கள் மட்டும் இல்லாமல் நாட்டில் அனைவரும் ஜக்கிய தேசியக் கட்சி மேல் முழு நம்பிக்கையை கொண்டுள்ளதோடு வாக்குகளை அளிப்பதற்கு தயாராகவுள்ளனர்.

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஜக்கிய தேசிய கட்சி 117 ஆசனங்களை பெற்று ஆட்சி அமைப்பதோடு நல்லாட்சிக்கு வழிவகுக்கும். நிச்சயமாக ஜக்கிய தேசிய கட்சி வெற்றிபெறும்.

மேலும் கடந்த மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் போது பெருந்தோட்ட மக்களுக்கு கணிசமான அபவிருத்திகள் எதுவும் நடைபெறவில்லை.

தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் 100 நாள் வேலைதிட்டத்தின் கீழ் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனி வீடு கட்டும் திட்டத்தினை ஏற்படுத்தினார்கள்.

இதேவேளை எதிர்காலத்திலும் லயன் வீடுகளை உடைத்தெறிந்து மலையக மக்கள் சகல வசதிகளும் கொண்ட தனி வீட்டில் வாழ்வதற்கு ஜக்கிய தேசிய கட்சியினால் மாத்திரமே உருவாக்க முடியும் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum