Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user

Similar topics

    பிசுபிசுத்துப் போன ராஜபக்சவினரின் புலிப்பூச்சாண்டி

    Go down

    பிசுபிசுத்துப் போன ராஜபக்சவினரின் புலிப்பூச்சாண்டி Empty பிசுபிசுத்துப் போன ராஜபக்சவினரின் புலிப்பூச்சாண்டி

    Post by oviya Sun Jul 26, 2015 3:08 pm

    ராஜபக்சவினர் இல்லாத பூச்சாண்டியை இருப்பதாக காட்ட பிறப்பிலேயே திறமைப்படைத்தவர்கள். கடந்த ஜனாதிபதித் தேர்தல் இன்னும் எங்கு இருக்கின்றது என்பதை கண்டறிய முடியாது மின்சார நாற்காலி என்ற பூச்சாண்டியை காட்டினர்.
    இலங்கைக்கு எதிரான போர் குற்றம் சம்பந்தமாக அதன் முதல் பிரதிவாதி என்ற வகையில், தாய் நாட்டுக்காக மின்சார நாற்காலியில் அமர தான் தயாராக இருப்பதாக மகிந்த ராஜபக்ச மக்கள் மத்தியில் கூறினார்.

    அதிகாரத்தில் இருந்த ஜனாதிபதி ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் முதல் முறையாக தோற்கடித்து, அவரை ஓய்வு சுகத்தை அனுபவிக்குமாறு மக்கள் வழங்கிய தீர்ப்பை மறந்து விட்டு, மீண்டும் அரசியல் அதிகாரத்திற்கு வரும் நோக்கில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் மகிந்த ராஜபக்ச, தனது வெற்றிக்காக பல பூச்சாண்டிகளை சமூகத்திற்குள் கொண்டு வருவார் என்பதில் அது பற்றி அறிந்தவர்களுக்கு சந்தேகம் இருக்கவில்லை.

    மகிந்த ராஜபக்ச குருணாகல் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்த போது ஒரு பூச்சாண்டி ஆச்சரியமான வகையில் குருணாகலில் வேட்புமனு தாக்கல் செய்தது. அந்த பூச்சாண்டி வேறு யாருமல்ல. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மைத்துனர் எனக் கூறப்படும் எம்.கே சிவாஜிலிங்கமே அந்த பூச்சாண்டி.

    சிவாஜிலிங்கம் தமிழ் மக்கள் பிரதிநிதித்துவம் செய்கிறார். ஆனால், தமிழ் மக்களின் போதுமான வாக்கு வங்கி இல்லாத மற்றும் படையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தார் அதிகளவில் வசிக்கும் குருணாகல் மாவட்டத்தில் சிவாஜிலிங்கம் வேட்புமனுவை தாக்கல் செய்தமை தற்போதும் ஆச்சரியத்திற்குரியது.

    பிரபாகரனின் மைத்துனர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக குருணாகலுக்கு வந்திருப்பதாக சிவாஜிலிங்கத்தின் குருணாகல் வருகையை காண்பித்து, மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசார யந்திரம் ஏற்கனவே பிரசாரங்களை முடக்கி விட்டுள்ளது.

    மகிந்த ராஜபக்ச முதல் முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 2005 ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கில் தேர்தலை புறக்கணிப்பது தொடர்பில் விடுதலைப் புலிகளுடன் இணக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார்.

    இதனடிப்படையில், அமைச்சரவையின் அனுமதியுடன் ராடா என்ற நிறுவனத்தை ஏற்படுத்தி அதன் ஊடாக மகிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதியை வழங்கினார். இந்த அனுபவத்துடன் நோக்கும் போது சிவாஜிலிங்கத்தின் குருணாகல் வரவும் அதுபோன்ற சரளமாக ஒன்று என்பதை நாம் உணர்ந்து கொள்வது சிரமமானதல்ல.

    இந்த நிலையில், பூச்சாண்டிகளை உருவாக்கும் மகிந்த ராஜபக்சவினருக்கு புதிய பூச்சாண்டி கடந்த 20 ஆம் திகதி நுகோகொட மிரிஹான பிரதேசத்தில் சிக்கியது.

    சந்தேகத்திற்கு இடமான வெள்ளை வான் ஒன்றை மிரிஹான காவற்துறையினர் கைது செய்ததன் பின்னணியை கொண்டு இந்த பூச்சாண்டியை ராஜபக்சவினர் கண்டுப்பிடித்தனர்.

    முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் வசித்து வரும் மிரிஹான பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான வெள்ளை வான் சுற்றி திரிவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடக மத்திய நிலையத்தின் சார்பில் அதன் பிரதான இணைப்பாளர் விஜயானந்த ஹேரத் கடந்த 21 ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தார்.

    போலி இலக்கதட்டுடன் கூடிய வெள்ளை வான் ஒன்று மிரிஹான பிரதேசத்தில் கைப்பற்றப்பட்டுள்ளதாக தனக்கு தகவல்கள் கிடைத்துள்ளன என முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறியிருந்தார்.

    சந்தேகத்திற்குரிய ஆயுததாரிகள் இந்த வானில் இருந்துள்ளனர் என தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என இதனை கருத முடியும் எனவும் பீரிஸ் கூறியிருந்தார்.

    அத்துடன் கைது செய்யப்பட்ட ஆயுததாரிகளின் நோக்கம் என்ன என்பதை உடனடியாக விசேட விசாரணை மூலம் கண்டறிந்து வெளிப்படுத்த வேண்டும் எனவும் பீரிஸ் வலியுறுத்தியிருந்தார்.

    இதனடிப்படையில், உடனடியாக இந்த விடயம் குறித்து விசாரணை நடத்துமாறு காவற்துறை மா அதிபர் மற்றும் பாதுகாப்புச் செயலாளரிடம் கோருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் முன்னாள் அமைச்சரான ஜீ.எல்.பீரிஸ் மேலும் கோரிக்கை விடுத்திருந்தார்.

    இந்த இரண்டு அறிக்கைகளின் படியே முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, கடந்த 21 ஆம் திகதி துப்பாக்கியுடன் வெள்ளை வானில் இருந்தவர்கள் குறித்து நியாயமான விசாரணைகளை நடத்தி உண்மையை நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கூறியிருந்தார்.

    பத்தரமுல்லையில் உதயகம்மன்பிலவின் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பேசும் போதே கோத்தபாய இதனை குறிப்பிட்டிருந்தார்.

    இது சம்பந்தமாக காவற்துறை மா அதிபரிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளதாகவும் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், பிடிப்பட்ட வான் விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்டது எனவும் வெள்ளை வான் கலாசாரம் தொடர்பில் தம் மீது குற்றம் சுமத்தி சோபித தேரர் ஏன் இது பற்றி பேசுவதில்லை எனவும் கோத்தபாய தெரிவித்திருந்தார்.

    இதனை தவிர தமிழகத்தில் 20 ஆம் திகதி நான்கு விடுதலைப் புலி உறுப்பினர்கள் துப்பாக்கிகள் மற்றும் சயனைட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியிருந்தார்.

    வெள்ளை வான் கைது செய்யப்பட்ட விடயத்தை பொதுத் தேர்தலில் ராஜபக்சவினர் தமக்கு சாதமாக பயன்படுத்தும் வகையில் விடுதலைப் புலிப் பூச்சாண்டியை உருவாக்கினர் என்பது இதன் மூலம் தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது.

    எனினும் இந்த வெள்ளை வான், அதில் இருந்த மூன்று அதிகாரிகள் மற்றும் துப்பாக்கி என்பன பாதுகாப்பு அமைச்சின் இராணுவத்திற்கு பொறுப்பான அதிகாரி மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் பாதுகாப்புக்கு பயன்படுத்தப்பட்டது என்பது விசாரணைகளில் தெரியவந்தது. அத்துடன் வெள்ளை வான் இராணுவத்திற்கு சொந்தமானது எனவும் கண்டறியப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா, ராஜபக்சவினருக்கு ஆதரவான இராணுவ அதிகாரி எனவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசாரணை முடிவுகள் ராஜபக்சவினர் பக்கம் திரும்பலாம் என கூறப்படுகிறது.

    இதனால், ராஜபக்சவினரின் புலிப் பூச்சாண்டி கதை, கையில் வெடித்த பட்டாசாக மாறி போனதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
    oviya
    oviya

    Posts : 50968
    மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum