Top posting users this month
No user |
ராஜபக்சவினரின் பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கைகள் தோல்வி: மங்கள சமரவீர
Page 1 of 1

பயங்கரவாதம் மற்றும் உலகளாவிய பயங்கரவாதத்தின் மாதிரி வகைகள் பற்றிய தேசத்தின் அறிக்கைகள் என்ற தலைப்புடன் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவரால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சர் மங்கள சமரவீர பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் பயங்கரவாதத்திற்கு எதிரான அவர்களது அறிக்கையை 2015 யூன் மாதம் 15 ஆம் திகதி வெளியிட்டார்கள்.
இந்த அறிக்கையானது 2014 ஆம் ஆண்டு நிகழ்வுகளை உள்ளடக்கியதாகும்.
இக்காலப் பகுதியின்போது நிமல் சிறிபால டீ சில்வா அவர்களும் ராஜபக்ஷவின் நிர்வாகத்தில் ஒரு அமைச்சராகப் பதவி வகித்தார். 2014ஆம் ஆண்டில் மலேசியாவில் தமிழீழ விடுதலைப் புலி இயக்கத்தின் ஆதரவாளர்கள் மொத்தம் 13 பேர்கள் கைது செய்யப்பட்டதாக இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரான 2013 ஆம் ஆண்டினை உள்ளடக்கிய காலத்தின்போதும் எல்.ரீ.ரீ.ஈ.க்கு ஆதரவான வலையமைப்பு தொடர்ந்து செயற்பட்டதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது உண்மையில் அதிர்ச்சி தரக்கூடியதாகும். ஏனெனில் எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பைப் பூண்டோடு அழித்துவிட்டோம் என்று உரிமை கொண்டாடிய ஆட்சியின் கீழேயே இவ்வாறு நிகழ்ந்துள்ளமை தெளிவாகும்.
யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும், எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தவர்கள் தங்களது நிதி சார்ந்த மற்றும் ஆதரவு வலை அமைப்புகளை இன்னமும் பேணிவரும் குறிக்கோள்களைக் கொண்டிருப்பார்களெனின், ராஜபக்ஷ நிருவாகத்தின் யுத்தத்திற்குப் பின்னரான பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கைகள் தோல்வியடைந்து விட்டன என்பதையே தெளிவாக சுட்டிக் காட்டுகின்றன.
ஆகவே, கௌரவ எதிர்க்கட்சி தலைவர் அவர்கள் முன்வைத்துள்ள கேள்விக்கு நாம் அளிக்கக் கூடிய பதில் யாதெனில், ஆம், யூன் 19ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த அறிக்கையை இந்த அரசாங்கம் நன்கு அறிந்து வைத்துள்ளது என்பதேயாகும்.
இந்த அறிக்கையானது, பயங்கரவாத செயல்கள் இடம்பெறும் நாடுகளிலும், அரச பயங்கரவாத செயல்களை முன்னெடுக்கும் நாடுகளிலும் அத்துடன் பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய யுத்தத்தில் குறிப்பான அக்கறைக்கு உரியவை என ராஜாங்கத் திணைக்களத்தினால் தீர்மானிக்கப்படும் நாடுகளிலும் இடம்பெறும் நிகழ்வுகளை உள்ளடக்கிய ஒன்றேயாகுமென்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.
அத்துடன் இச்சட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளவாறாக, பயங்கரவாதத்துக்கு எதிரான பரஸ்பர மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பு முயற்சிகளின் பிரதானமான முன்னேற்றங்களையும் இவ்வறிக்கை மீளாய்வு செய்துள்ளது.
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள எல்லா அரசாங்கங்களுக்கும் மற்றும் கழகங்களுக்கும் முகவரமைப்புகளுக்கும் இந்த வருடாந்த அறிக்கைகள் மிகவும் பயனுள்ளவை என நாம் கருதுகிறோம்.
போர் முடிவுற்ற ஜந்தாண்டுகளுக்குப் பின்னரும் வன்செயல் அச்சுறுத்தல் இன்னமும் காணப்படக் கூடுமென நிமல் சிறிபால டீ சில்வா சரியாகவே சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே, 2004ஆம் ஆண்டு தொடக்கம் ஒவ்வொரு ஆண்டிலும் வெளியிடப்படும் இந்த அறிக்கை பற்றி அரசாங்கம் அறிந்துள்ளதா, இல்லையா என்று விவாதித்துக் கொண்டிராமல் ராஜபக்ஷ ஆட்சியினது யுத்தத்திற்குப் பின்னரான பயங்கரவாத எதிர்ப்பு மூலோபாய உத்திகள் ஏன் மிக மோசமாகத் தோல்வியடைந்தன என்பதை ஆராய்வது முக்கியமாகும்.
எல்லா இலங்கை மக்களினதும் எதிர்காலப் பாதுகாப்பை உறுதி செய்யும் புதிய மூலோபாய உத்திகளை நாம் இப்போது கையாள வேண்டும் என்பது மிகத்தெளிவாகும்.
இந்த அரசாங்கத்தின் அணுகல்முறை மிகவும் வேறுபட்டதாகும். எமது எல்லைகளை வலுப்படுத்தவும் எமது கடல்சார் பாதுகாப்பைப் பலப்படுத்தவும் நாம் நடவடிக்கை மேற்கொள்ளும் அதேசமயம்,
நாட்டுக்கு எதிரானவர்களை அவர்கள் எந்தவொரு இன, மத, வர்க்க அல்லது கலாச்சாரப் பிரிவைச் சார்ந்த-வர்களாக இருந்தாலும் - அவர்களினது உள்ளங்களையும் இதயங்களையும் வெல்லுவதற்கு மென்மையான சக்தியையும் ராஜதந்திர வழிமுறைகளையுமே நாம் கையாளுகிறோம்.
வன்முறையிலான தீவிரவாதப் போக்கு உடைய குழுக்களுக்கு மக்கள் மத்தியில் நிலவும் வெகுசன ஆதரவையும் நியாயத்தன்மையையும் மங்கச் செய்வதன் மூலம் இக்குழுக்களின் ஆதரவுத் தளத்தை அகற்குவதே அரசாங்கத்தின் எண்ணமாகும். இல்லாவிடின் இப்படியான குழுக்கள் மக்களின் பொருள் மற்றும் தார்மீக ஆதரவைப் பெறுவதற்கு வாய்ப்பாகி விடும்.
இது தொடர்பில், இந்த அரசாங்கமானது, பயங்கரவாதத்துக்கு எதிராக, அது எந்த வகையில் தோற்றம் பெற்றாலும் சரி உறுதியுடன் போராடுவதற்கு திடசங்கற்பம் கொண்டுள்ளது என்பதனை இச்சபையில் வலியுறுத்திக் கூறிவைக்க விரும்புகிறேன்.
இதுவே பயங்கரவாதம் தொடர்பில் நாம் இப்போதும் இனியும் கொண்டுள்ள நிலையான கொள்கையாகும். பயங்கரவாதம் காரணமாக எமது நாடு பல தசாப்தங்களாக சிதைந்து போயுள்ளது.
சந்தைகளிலும் நகர மத்திகளிலும் ரயில்களிலும் பஸ் வண்டிகளிலும் வணக்கத்-தலங்களிலும் மற்றும் வணிகக் கூடங்களிலும் வெடித்துச் சிதறிய குண்டுகள் பற்றிய துயரங்களை நாம் நன்கு அறிவோம்.
முரண்பட்ட ஒரு நாட்டின் கொடூரமான வன்செயல்களால் நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டவர்களாகவே உள்ளோம்.
இந்த நாடு மீண்டும் ஒரு போதும் அத்தகைய வன்செயல் பயங்கரவாத சகாப்தத்திற்கு திரும்பிச் செல்லாதவாறு காப்பாற்றும் பொறுப்பு எந்தவொரு தனி கட்சிக்கோ, எந்தவொரு தனி அரசாங்கத்திக்கோ அல்லது எந்தவொரு தனியான தலைவருக்கோ மட்டும் சார்ந்தது அல்ல. அதுவொருகூட்டான, எல்லாரும் பங்குபெற வேண்டிய பொறுப்பாகும்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது, மிகவும் விரிவான கலந்துரையாடல்களின் பின்னர் தனது அறிக்கையில் மிகவும் தெளிவாகக் கூறியுள்ளதை நான் இங்கு எடுத்துக் கூற விரும்புகிறேன்.
“தென்னிலங்கையின் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்களும், தேசிய நலனில் அக்கறை செலுத்தி, தமக்குள் இணக்கத்தை ஏற்படுத்தி, தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு தீர்வை முன்வைத்திருப்பார்களாயின், இந்தப் பிரச்சினையைத் தவிர்த்திருக்க முடியும்.
தமிழ் அரசியல் தலைவர்களும் இந்தப் பிரச்சினைக்கு சம அளவில் பொறுப்புடையவர்களாவர். பிரிவினைக்கு வழிவகுக்கும் ஆயுதப் போராட்டம் ஒன்றை ஊக்கப்படுத்தாமல் தவிர்த்திருக்கலாம்.
சிங்கள மற்றும் தமிழ் ஆகிய இரு பகுதியினர் மீதுமே எல்.ரீ.ரீ.ஈ. பயன்படுத்திய வன்செயல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உடன்பாடு காட்டாது இருந்திருக்கலாம். அத்துடன் எல்.ரீ.ரீ.ஈ. அமைப்புக்கு எதிராகவும் அவர்களின் அட்டூழியமான செயல்களுக்கும் எதிராக கண்டிப்பான முறையிலும் துணிச்சலுடனும் குரலெழுப்பத் தவறிவிட்டார்கள்.
செய்த தவறுக்காக வருந்துதல் என்னும் கூட்டு மனப்பாங்கு இரண்டு தரப்புக்கும் சுலபமாக வந்துவிடாது. மனித அவலம் நடந்ததென்பதை சம்பந்தப்பட்ட இரு கட்சிகளும் மிகவும் ஆழமாகத் தார்மீக அடிப்படையில் சுய ஆய்வு செய்தால் மட்டுமே அவ்வாறு அவர்களால் மனவருத்தப்பட முடியும்”
அமெரிக்க அரசாங்கத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட வெளிநாட்டுப் பயங்கரவாத இயக்கப் பட்டியலில் எல்.ரீ.ரீ.ஈ. தொடர்ந்தும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் பணவசூல் மற்றும் உதவி வலைப்பின்னல்களை மலினப்படுத்துவதற்கு எங்களுடன் சேர்ந்து வேலை செய்த நாடுகளுடன் தற்போது அரசாங்கம் ராஜதந்திர உதவிகளைப் பலப்படுத்துவதற்கு முயற்சி செய்கின்றது.
ஐக்கிய அமெரிக்காதான் எல்.ரீ.ரீ.ஈ. வெளிநாட்டுப் பயங்கரவாத இயக்கம் என்று 1997இல் பட்டியலிட்ட முதலாவதுநாடாகும்.
தமிழர் புனர்வாழ்வு இயக்கம் (ஜக்கிய அமெரிக்கக் கிளை தமிழர் புனர்வாழ்வு இயக்கம் ஆனது எல்.ரீ.ரீ.ஈ.இன் பின்புல இயக்கமாகவும் பட்டியல் படுத்தியது.
ஐக்கிய அமெரிக்காவில் இயங்கிய எல்.ரீ.ரீ.ஈ.இற்கு எதிரான முடிவுறாத வழக்குகளில் ஐக்கிய அமெரிக்கப் பாதுகாப்பு முகவர்களுக்கும் இலங்கைக்கும் இடையேயான இணைப்புத் தொடர்ந்தது.
ஐக்கிய அமெரிக்காவின் பங்கு எல்.ரீ.ரீ.ஈ. இணக்கத்தைத் தடைசெய்வதற்கு முன் நின்றது. 2009இல் இராணுவத் தோல்விக்கும் வழிவகுத்தது. ஐக்கிய அமெரிக்காவில் பட்டியலிடப்பட்டதுடன் உலகின் மற்றைய பாகங்களிலும் எல்.ரீ.ரீ.ஈ.இற்கு இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தேவையான பண வசூல் சென்றடைவதைத் தடுப்பதற்கு வழிவகுத்தது.
எல்.ரீ.ரீ.ஈ.உடனும் அதனுடன் தொடர்புபட்ட தொண்டு நிறுவனங்களுடனும் தொடர்புகளைப் பேணும் போது முன் எச்சரிக்கையாகவும் விழிப்புடனும் அரசாங்கங்கள் செயல்படுகின்றதா என்று தெரிந்து கொள்வதற்கு கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் விரும்புகிறார்.
அத்துடன் அரசாங்கம் சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவனங்களின் சொத்துக்களை பரிசீலனை செய்கின்றதா என்றும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப் படுகின்றதா என்றும் தெரிந்து கொள்ள விரும்புகிறார்.
நான் நிமல் சிறிபால டீ சில்வா அவர்களை நினைவுபடுத்த விரும்புகிறேன். எங்கள் அரசாங்க முகவர்கள் புலனாய்வு பகிர்தலைப் பங்குகொள்ளும் சகலருடனும் நெருக்கமாக இணைந்து நடப்பதுடன் முக்கியமாக பயங்கரவாதத்தை அழிப்பதற்காக கவனமெடுப்பவர்களுடன் பகிர்ந்து கொள்கிறது.
இது நிதிவலைப்பின்னலையும் உள்ளடக்குகிறது. அரசாங்கம் தொடர்ந்தும் ஐக்கிய அமெரிக்காவின் ராஜாங்கத்திணைக்களம் உள்நாட்டுப் பாதுகாப்பு, மற்றும் தேசத்தின் கடல் எல்லையைப் பாதுகாக்கும் சக்தி என்பவற்றுடன் பங்களிப்பைப் பேணுகின்றது.
ஐக்கிய அமெரிக்கக் கரையோரக் காவல், ராஜாங்கத்திணைக்களத்தின் ஏற்றுமதிக்கட்டுப்பாடு மற்றும் எல்லைப்பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இலங்கைக் கரையோரக்காவல் மற்றும் கடற்படை அதிகாரிகளுக்கு எல்லை மற்றும் ஏற்றுமதிக்கட்டுப்பாட்டு விடயங்களில் பயிற்சி அளிப்பது தொடர்வதுடன் அரசாங்கம் தொடர்ந்தும் ஐக்கிய அமெரிக்காவின் சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு, கொள்கலன் பாதுகாப்பை ஏற்படுத்தல் என்பவற்றுடன் இணைந்து செயற்படும்.
அதற்கு மேலதிகமாக எங்கள் அரசாங்கம் ஐரோப்பிய சங்கத்தின் குடிவரவுத் திணைக்களத்துடன் முன்னேற்றகரமான பயணிகள் தகவல் திட்டத்தை தொடர்ந்தும் இணைந்து மேற்கொள்ளும் என்பதுடன் அது பயணிகள் போக்குவரத்துத் தகவல்களை வருகையின் போது இலங்கைக் குடிவரவு அதிகாரிகளுக்கு வழங்குகிறது.
அத்துடன் பயங்கரவாத மையக்கருவை ஒழிப்பதற்காக உலகளாவிய ரீதியில் ஆரம்பித்த 85 நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.
இலங்கை அரசாங்கம் தேசத்தின் சகலபிரஜைகளினதும் பாதுகாப்பைப் பேணுவதில் உறுதியாக உள்ளது.
சகல அரசாங்க முகவர்களும், என்னுடைய அமைச்சும் ஆண்டாண்டு காலமாக பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைக்கான ஒரு சீரான கொள்கை, பாதுகாப்பு மற்றும் புலனாய்வு நடவடிக்கைகளைப் பேணுவதற்குப் பொறுப்பாகும்.
நான் வெளிவிவகார அமைச்சராக இருந்த காலமான 2006ஆம் ஆண்டில் முதல்முறையாக ஐரோப்பா சங்கத்தினால் எல்.ரீ.ரீ.ஈ.யும் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
உங்களுக்குத் தெரிந்திருக்கும் 2014ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பட்டியல் இடுதல் இடைநிறுத்தப்பட்டது. எப்படியாகிய போதிலும் இந்த வருடம் 2015 மார்ச் 26ஆம் திகதி இடப்பட்ட ஐரோப்பிய நிறுவனத்தின் 2015/521ஆம் தீர்மானத்தின்படி திரும்பவும் நபர்களின் பட்டியல் திருத்தப்பட்டதுடன் புதிப்பிக்கப்பட்டு எல்.ரீ.ரீ.ஈ.யும் திரும்பவும் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கையில் இலங்கையும் இந்தியாவும் தான் எல்.ரீ.ரீ.ஈ.யின் செயலாற்றும் இடங்களாக் கண்டறியப்பட்டுள்ளது. உங்களுக்குத் தெரிந்திருக்கும் இந்த இரு நாடுகளிலும் எல்.ரீ.ரீ.ஈ.யின் தடை நடைமுறையிலுள்ளது.
கடந்த ஜனவரி 8ஆம் திகதியிலிருந்து, ஏற்கனவே தங்கள் நம்பிக்கையை இழந்தவர்கள் திரும்பவும் புதிய நம்பிக்கையுடன் உண்மையான சமரச முயற்சிகளான நீண்டகால சமாதானம், மதிப்பு மற்றும் வளம் என்பவற்றை அடையத் தொடங்கியுள்ளனர்.
இந்த நாட்டிலிருந்து நாட்டை விட்டு வெளியேறிய இலங்கையைத் தாயகமாகக் கொண்ட மக்கள் ஒன்றிணைந்த சமரச இலங்கையைக் கானக் கனவு கண்டவர்கள் இப்பொழுது பயப்படாமல் திரும்பவும் தேசத்திற்கான சமரசம்,சமாதானம் மற்றும் வெற்றிக்காகக் கனவு காண முடியும்.
ஏற்கனவே ஐக்கிய இலங்கைக்காக தங்களுடைய வாக்குறுதிகளை வெளிப்படுத்தப் பின்வாங்கியவர்கள் இப்போது தங்களின் நிலைப்பாட்டைத் திரும்ப மீள்பரிசீலனை செய்கின்றார்கள்.
நாங்கள், வன்முறை மூலம் பிரிவினையை ஆதரிக்கும் கொள்கைக்கு ஆதரவு வழங்குகின்றவர்களில் இருந்து தமிழ் மக்களின் நலனுக்காகத் தங்கள் ஆதரவுகளை வழங்குகின்றவர்களை எங்கள் தேசத்தின் மக்களுக்கு வேறுபடுத்திக் காட்டுவதற்குக் கடமைப்பட்டுள்ளோம்.
தங்கள் வன்முறைக் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக முறையற்ற நடவடிக்கைகள் மூலம் பணம் வசூலிப்பதற்காகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் அகதிகளுக்காகக் குரல் கொடுப்பவர்களைப் பற்றி நாம் குழப்பம் அடைதல் கூடாது. இத்தனித்தன்மை எங்களுக்கு முக்கியமானது.
ஏனெனில் எங்கள் தேசத்தை பழைய வன்முறைக் கலாச்சாரத்திலிருந்து ஒரு நல்ல நிலைக்குத் திரும்பக் கொண்டு வருவதற்கு கருத்துப் பரிமாறல் மற்றும் ஈடுபடுதல் என்பது மிக முக்கியமானது.
ஏனெனில் வன்முறையை நாடாமல் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டவர்களின் கருத்தைக் கேட்டறிந்தும் மற்றும் கஸ்டங்களை அனுபவித்தவர்கள் அவற்றைத் தீர்த்துக்கொள்வதற்கும் முடியும்.
மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் இவ்வருடம் மே மாதம் 19ஆம் திகதி கூறியிருந்தார், 2009 மே மாதம் முடிவுற்ற மோதலின் பின் இத்தேசத்தின் மக்களின் மனதையும் இதயத்தையும் சரிப்படுத்தத் தவறிவிட்டோம்.
இத்தேசத்தின் இரட்டை நிகழ்ச்சி நிரல் இதன் பின்னர் முதல் அபிவிருத்தி மற்றும் சமரசப்படுத்தலில் ஈடுபட வேண்டும். எங்கள் நோக்கம் எம் நாட்டுப் பிரஜைகளின் இதயத்தையும் மனதையும் சரிப்படுத்தல் மட்டும் அல்லாமல் அவர்களைத் தைரியம் ஊட்டிப் பிரிக்கப்படாத ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒன்று சேர்த்தல்.
தமிழ் அரசியலில் மிதமான குரலையும் உண்மையான தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் மற்றும் தமிழ்த் தேசிய முன்னணி இப்பொழுது பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கை என்பதை ஆழமாகப் பின்பற்றுகிறது.
இந்தத் தனி நபர்களை நாம் ஊக்கப்படுத்தி ஜனநாயக அமைப்புக்குள் முழுமையாக பங்குபற்ற வைத்தல் வேண்டும். அத்துடன் எங்களுடைய சமுதாயத்துக்குள் அடிப்படை வாதத்தை ஒழிப்பதற்கு யாருடன் சேர்ந்து வேலை செய்தல் வேண்டும்.
தற்போது ஜே. வி. பி. முதன்மை அரசியல் நீரோட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இப்பொழுது நாம் தமிழ் மக்களை ஊக்கப்படுத்தல் வேண்டும். அவர்களின் மனக்குறைகளை அவர்களின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மூலமும் வன்முறையற்ற வழி மூலமும் நம்பத்தகுந்த அரச பொறிமுறை மூலமும் வெளிப்படுத்தல் வேண்டும்.
நமது நாட்டில் பாதிக்கப்படும் சமூகங்களை நாம் ஒதுக்கி வைத்து அவர்களை மேலும் தீவிர போக்குடையவர்களாக ஆக்குவோமாயின் புதிய வடிவங்களில் பயங்கரவாதம் தலைதூக்கலாம் என்பதுடன் அவற்றின் தோற்றத்தை அறுதியுடன் கூற முடியாமல் போவதுடன் அவற்றைக் கட்டுப்படுத்துவதும் இயலாத காரியமாகி விடலாம்.
புதிதாகத் தோற்றம் பெறும் அமைப்புக்கள் சிறியனவாக அல்லது பூகோள ரீதியாகப் பரந்துபட்டும் செயற்படுமாயின், அத்தகைய அமைப்புக்கள் எந்தவொரு இராணுவத்திற்கும் மிகக் கடினமான இலக்குகளாக மாறிவிடும்.
ஒழுங்காகத் திட்டமிடப்படாத அல்லது உள்ளகம் அல்லாத மூலோபாயங்கள் மற்றும் தோல்வியுற்ற ராஜதந்திர உத்திகள் என்பவற்றை மேற்கொள்வதன் மூலம் எமது நாட்டின் பாதுகாப்பிற்கும் ஸ்திர தன்மைக்கும் மீண்டும் பாதிப்பு ஏற்படக்கூடிய அபாயத்தை நாம் செய்யலாகாது.
இப்போது நாம் செய்ய வேண்டியவை, வன்செயலுக்குக் காரணமான மூலவேர்களைக் கண்டறிவதுடன், உலகளாவிய சட்ட நிறைவேற்றலுக்கான ஒத்துழைப்பைப் பயன்படுத்துதலும், உள்நாட்டுக் குற்றவியல் நீதி முறையைச் சீர் செய்தலும் அத்துடன் பாதிக்கப்பட்ட சமூகங்களை அரவணைத்துச் செல்லும் பணிகளை இன்னும் அதிகரிப்பதுமேயாகும். பயங்கரவாத அமைப்புக்களின் உயிர் மூச்சாக விளங்கும் எண்ணக் கருத்துக்களை அவர்களின் இதயங்களிலும் மனதிலும் இருந்து நிரந்தரமாக நீக்குவதற்கு மேற்சொன்னவையே சரியான கருவிகளாகும்.
ஆகவே, கௌரவ எதிர்க்கட்சித் தலைவருக்கு நான் விடுக்கும் அழைப்பு யாதெனில் பரஸ்பர நம்பிக்கையைக் கட்டியெழுப்பவும், இணக்கப்பாட்டை உருவாக்கவும், அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்வதற்குமான இப்பயணத்தில் எம்முடன் இணைந்து கொள்ளுங்கள் என்பதேயாகும்.
எல்லா மக்களினதும் குறிப்பாக வடக்குக் கிழக்கில் வாழும் சிறுபான்மை சமூகங்களினதும் உண்மையான குறைபாடுகளையும், கவலைகளையும் நீக்கும் முயற்சியில் எம்முடன் இணைந்து கொள்ளுங்கள். இந்த நாட்டில் பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்காமல் உறுதி செய்வதற்கு இதுவே நிச்சயமான வழியாகும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum