Top posting users this month
No user |
Similar topics
காளான் கறி
Page 1 of 1
காளான் கறி
காளான் - 500 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
கடுகு - கால் தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
குழம்பு பொடி - ஒரு மேசைக்கரண்டி
உள்ளி - 4 பல்
சிறிய தக்காளி - ஒன்று
தேங்காய் பால் - அரை கப்
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
காளானை சுத்தம் செய்து நான்கு துண்டங்களாக பிளந்து வைக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், உள்ளி என்பவற்றை சின்ன சின்னதாக வெட்டவும்.
பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை சூடாக விடவும்.
எண்ணெய் சூடானதும் கடுகு, சோம்பு, கறிவேப்பிலை போட்டு வெடித்ததும் வெங்காயம், உள்ளி என்பவற்றை 2 நிமிடங்கள் வதக்கவும்.
பின்பு தக்காளி, பச்சை மிளகாய் என்பவற்றையும் போட்டு தக்காளி நன்றாக வதங்கும் வரை வதக்கவும்.
அடுத்து காளானை போட்டு உப்பு, குழம்பு பொடி என்பவற்றையும் சேர்த்து நன்றாக காளானுடன் சேரும் வரை மெல்லிய தீயில் வைத்து கிளறவும்.
பிறகு அரை கப் தேங்காய் பால் சேர்த்து சிறிது நேரம் அவிய விடவும். காளான் அவிந்ததும் மூடியை திறந்து விடவும்.
கறி வற்றி வந்ததும் இறக்கி சாதம் அல்லது தோசை என்பவற்றுடன் பரிமாறலாம்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum