Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மகிந்தவுக்கு பிரதமர் பதவி வழங்காது போனால் செங்கோலை தூக்கிச் செல்வோம்!– சாலிந்த திஸாநாயக்க

Go down

மகிந்தவுக்கு பிரதமர் பதவி வழங்காது போனால் செங்கோலை தூக்கிச் செல்வோம்!– சாலிந்த திஸாநாயக்க Empty மகிந்தவுக்கு பிரதமர் பதவி வழங்காது போனால் செங்கோலை தூக்கிச் செல்வோம்!– சாலிந்த திஸாநாயக்க

Post by oviya Mon Jul 20, 2015 2:47 pm

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பின்னர் மகிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவியை வழங்காது போனால், தமது அணியினர் செங்கோலை எடுத்து கொண்டு நாடாளுமன்றத்தை சுற்றி ஓடப் போவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொல்பித்திகம பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் கலந்து கொண்டார்.

முன்னாள் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றாலும் அவருக்கு பிரதமர் பதவியை வழங்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்க அறிவித்து விட்டார்.

எனினும் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் நாடாளுமன்றத்தில் அதிகமான உறுப்பினர்களின் ஆதரவு பெற்றவரையே ஜனாதிபதி பிரதமராக நியமிக்க வேண்டும் என மகிந்த தரப்பினர் சட்ட வாதங்களை முன்வைத்து வருகின்றனர்.

எனினும் ஐக்கிய தேசியக் கட்சியினர் இதற்கு மாறான சட்டவாதங்களை முன்வைத்து வருகின்றனர்.

எது எப்படி இருந்த போதிலும் கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகள் அனைவருமே தாம் விரும்பிய நபரையே பிரதமராக நியமித்திருந்தனர்.

மகிந்த ராஜபக்சவும் இதற்கு விதிவிலக்கல்ல. அவரும் தாம் விரும்பிய நபருக்கே பிரதமர் பதவியை வழங்கியிருந்தார்.

மைத்திரிபால சிறிசேன போன்றவர்களுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த போது மகிந்த ராஜபக்ச அதனை கண்டுக்கொள்ளவில்லை.

அவர். டிஎம். ஜயரத்னவையே பிரதமராக நியமித்தார் எனபது குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum