Top posting users this month
No user |
Similar topics
ஜெல்லி ஜவ்வரிசி சர்பத்
Page 1 of 1
ஜெல்லி ஜவ்வரிசி சர்பத்
இன்ஸ்டண்ட் ஆக்கரக்கா - 1 பாக்கெட் (12 கிராம்)
ஜவ்வரிசி - 200 கிராம்
பால் - 1 லிட்டர்
சீனி - 400 கிராம்
பாண்டான் இலை - 4
ரோஸ் எஸன்ஸ் (பாண்டான் இலை போடாவிட்டால்) - 5 துளிகள்
தண்ணீர் - 3 லிட்டர்
உப்பு - தேவையானஅளவு
பகுதி:1
இன்ஸ்டண்ட் ஆக்கரக்கா, தண்ணீர் 1 லிட்டர், சீனி 150 கிராம், உப்பு 1 தே.கரண்டி, பச்சை நிறம்- 1 தேக்கரண்டி இவை அனைத்தையும் ஒன்றாக காய்ச்சி உறைய விடவும். உறைந்த பின் ஆக்கரக்காவை துருவிக்கொள்ளவும்.
பகுதி:2
ஜவ்வரிசியை 10 நிமிடம் ஊறவைக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் 1 தே.கரண்டி உப்பு, ஜவ்வரிசி போட்டு வேகவிடவும். (ஜவ்வரிசி நிறம் மாறிவிட்டால் வெந்துவிட்டதை அறியலாம்). வெந்ததும் அதை தண்ணீரில் கழுவி வடிகட்டியால் வடித்துக்கொள்ளவும்.
பகுதி:3
சீனி-250 கிராம்,தண்ணீர்- 1/2 லிட்டர்,பாண்டான்இலை 4,உப்பு 1 தே.கரண்டி இவை அனைத்தையும் சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும்.(சீனி பாகு)
ஒரு பாத்திரத்தில் துருவிய ஆக்கரக்கா,பால்,ஜவ்வரிசி, தண்ணீர், தேவையான அளவு சீனி பாகு இவற்றை எல்லாம் ஒன்றாக கலந்து குளிர் பதனப்பெட்டியில் வைத்து சில்லென்று பரிமாறவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum