Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இந்தியப் பெருங்கடலுக்கான உரிமைப் போர் ஆரம்பம்!

Go down

இந்தியப் பெருங்கடலுக்கான உரிமைப் போர் ஆரம்பம்! Empty இந்தியப் பெருங்கடலுக்கான உரிமைப் போர் ஆரம்பம்!

Post by oviya Sun Jul 05, 2015 2:21 pm

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்வதற்காக இந்தியா,ஆசிய பசுபிக் நாடுகளுடன் இணைந்து கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில்,தான் ,இந்தியப் பெருங்கடல் ஒன்றும் இந்தியாவின் கொல்லைப்புறம் அல்ல என்ற இந்தியாவிற்கு சினமூட்டம் கருத்தை சீனா வெளியிட்டிருக்கிறது.
இந்திய ஊடகவியலாளர்களின் குழுவொன்று சீனாவுக்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் போதே சீனப் பாதுகாப்பு நிபுணர் ஒருவரால் இந்தக் கருத்து முன் வைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டில் ,மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் பதவியில் இருந்த போது ,சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று இரண்டு தடவைகள் கொழும்பு துறைமுகத்தில் தரித்துச் சென்றிருந்தது.

ஒரு வாரகாலம் கொழும்புத் துறைமுகத்தில் தரித்துச் சென்றிருந்த சொங் வகையைச் சேர்ந்த சீன நீர்மூழ்கி,விநியோகத் தேவைக்காகவே கொழும்பு வந்ததாக அரசாங்கம் கூறியிருந்தது.

ஏடன் வளைகுடாவில் கடற்கொள்ளையருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக செல்லும் போதும் திரும்பும் போதுமே.அந்த நீர்மூழ்கி,கொழும்பில் தரித்துச் சென்றதாக சீனா நியாயப்படுத்தியிருந்தது. அந்த விவகாரம் இந்தியாவைப் பெரும் கோபம் கொள்ளச் செய்தது.

இலங்கையில் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தக்கு எதிராக சர்வதேச நிலைப்பாடுகள் தீவிரம் பெறுவதற்கு இந்த சீன நீர்மூழ்கியின் பயணம் ஒரு காரணமாக அமைந்தது. கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் ,புதிய ஆட்சி அமைந்த பின்னர்,சீன நீர்மூழ்கிகளுக்கு கொழும்பில் தரித்துச் செல்ல அனுமதி வழங்கப்படாது என்று இலங்கை அரசாங்கம் அறிவித்தது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனா சென்றிருந்த போதும்,வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சீனா சென்றிருந்த போதும் இது வெளிப்படையாகவே கூறப்பட்டுவிட்டது.

இது சீனாவுக்கு சினமூட்டியதால் தான் அந்த நாட்டின் பாதுகாப்பு நிபுணர் ஒருவர்,கொழும்புத் துறைமுகம் இல்லாவிட்டால் பாகிஸ்தான் துறைமுகத்தையோ மாலைத்தீவு துறைமுகத்தையோ சீன நீர்மூழ்கிகள் நாடிச் செல்லும் என்று குறிப்பிட்டிருந்தார்.

அவர் குறிப்பிட்டது போலவே,கடந்த மே மாதம் 22 ஆம் திகதி ,பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்துக்கு சீனக் கடற்படையின் யுனான் வகை ( Yuan class 335 ) நீர்மூழ்கிக் கப்பல் ஓய்வெடுப்பதற்காகவும் விநியோகத் தேவைகளுக்காகவும் சென்றிருந்தது.

65 சீன மாலுமிகளுடன் அந்த நீர்மூழ்கி சுமார் ஒரு வாரகாலம் கராச்சித் துறைமுகத்தில் தரித்து நின்றதாகத் தகவல் ,முன்கூட்டியே வெளியாகவில்லை,கடந்த வாரம் தான் இது தெரியவந்தது.இது இந்தியாவுக்கு அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

அதாவது ,கொழும்புத் துறைமுகத்துக்கான வருகையைத் தடுப்பதன் மூலம் மட்டுமே ,இந்தியப் பெருங்கடலில் சீன நீர்மூழ்கிகளின் நடமாட்டத்தைத் தடுத்து விடமுடியாது என்பது இந்தியாவுக்கு உணர்த்தப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலை தனக்குச் சொந்தமானது என்பது போலவே இந்தியா கருதி வந்திருக்கிறது.

அதன் காவலன் தானே என்ற எண்ணமும் இந்தியாவுக்கு இருந்து வருகிறது.அதனைத் தான் இப்போது சீனா கேள்விக்குட்படுத்தியிருக்கிறது.பீஜிங் சென்றிருந்த இந்திய செய்தியாளர்கள்,இந்தியப் பெருங்கடலில் சீன நீர்மூழ்கிகளின் நடமாட்டம் குறித்து,எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள்ள,

பீஜிங் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சிறப்பு மூலோபாய நிறுவகத்தின் இணைப்பு பேராசிரியரான மூத்த கப்டன் ஷாவோ யி ( Zhao Yi ) ”சொந்தம் கொண்டாடுவதற்கு இந்தியப் பெருங்கடல் ஒன்றும் இந்தியாவின் கொல்லைப்புறம் அல்ல” என்று முகத்தில் அடித்தாற்போல் பதிலளித்திருக்கிறார்.

கப்டன் ஷாவுா யி,சீன கடற்படையின் ஒரு பெண் அதிகாரியாவார்,அவரது கருத்தை இந்திய ஊடகவியலாளர்களைத் திகைப்படையச் செய்திருந்தது.இந்தியப் பெருங்கடல் ஓர் சர்வதேச கடற்பரப்பு.அது ஒரு திறந்த கடல்,அதில் யாரும் பயணம் செய்யும் உரிமை உள்ளது என்று கப்டன் ஷாவோ யி விளக்கமளித்திருந்தார்.

புவியியல் ரீதியாக இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மையில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு இருப்பதை ஏற்றுக் கொண்டுள்ள அந்த சீன அதிகாரி,அதற்காக தனது கொல்லைப்புறம் போல ,யாரும் நுழைய முடியாது என்று கட்டுப்பாடு விதிக்க முடியாது என்பதையும் தெளிவுப்படுத்தியிருக்கிறார்.

அமெரிக்க நிபுணர் ஒருவர் குறிப்பிட்டதைப் போல ,இந்தியப் பெருங்கடலில் மோதல்கள் ஏற்படலாம் என்பதை நிராகரித்த அந்த அதிகாரி ,கொல்லைப்புறம் என்று சில நாடுகள் உரிமை கொண்டாட முனைந்தால் அத்தகைய மோதல்களுக்கு வாய்ப்பில்லை என்று கூறமுடியாது என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

சீனாவின் இந்தக் கருத்துக்கள் இந்தியாவைச் சினம் கொள்ள வைப்பதாக இருக்கும் என்பதுடன் ,ஆழமாகச் சிந்திக்க வைக்கும் என்பதிலும் சந்தேகமில்லை. அதாவது,இந்தியப் பெருங்கடல் வழியான கடற்பாதையின் பாதுகாப்பில் சீனா அக்கறை கொண்டிருக்கிறது அதற்காகத் தான் ,பட்டுப்பாதைத் திட்டத்தை செயற்படுத்தி வருகிறது.

இந்தநிலையில் ,இந்தியப் பெருங்கடலில் சீனாவின் நடமாட்டங்களை தடுக்க இந்தியா மேற்கொள்ளும் முனைப்புகளை அந்த நாடு விரும்பவில்லை.அதுமட்டுமன்றி,இந்தியாவின் தடைகளையும் ,கண்டனங்களையும் கண்டுக்கொள்ளாமல் இந்தியப் பெருங்கடலில் தனது நகர்வுகளை வழக்கம் போலவே ,மேற்கொண்டு வருகிறது சீனா.

அதற்கு ஒரு உதாரணம் தான்,கொழும்புத் துறைமுகத்தின் கதவுகள் அடைக்கப்பட்ட பின்னர்,கராச்சித் துறைமுகத்தில் சீன நீர்மூழ்கிகள் தரித்துச் சென்றமையாகும். தனது நீர்மூழ்கிகள் ஒன்றும்,இந்தியாவைக் குறிவைத்து நகர்த்தப்படவில்லை என்றும்,கடற்பாதையின் பாதுகாப்பையே கருத்தில் கொண்டு செயற்படுவதாகவும் சீனா கூறிவருகிறது.

ஆனால்,இந்தியா அதனை நம்பத் தயாராக இல்லை.தன்னைக் குறிவைத்தே செயற்படுவதாக இந்தியா கருதுகிறது.இந்தியா நீண்ட கடலோரத்தைக் கொண்ட ஒரு நாடு .ஆனால் அதன் நீண்ட கடலோரத்தைப் பாதுகாப்பதற்குப் போதிய வளங்களைக் கொண்டிராத நாடு அது,சீனா தனது கடற்பலத்தை பெருக்கி வருவது இந்தியாவுக்கு அச்சத்தைக் கொடுக்கிறது.

சீனாவிடம் உள்ள நீழ்மூழ்கிகள் போன்ற அதிநவீன போர்க்கப்பல்கள் இந்தியாவிடம் கிடையாது.எனவே ,இந்தியப் பெருங்கடலில் சீனாவின் கடற்படை,ஆதிக்கம் செலுத்துவதை இந்தியா விரும்பவில்லை. அது இந்தியப் பெருங்கடலின் மீதுள்ள தனது ஆதிக்கத்தை உடைத்து விடும் என்று இந்தியா கருதுகிறது.

அதனால் தான்,அமெரிக்கா,பிரான்ஸ்,பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து கூட்டுப் போர்ப்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமன்றி, இலங்கை, அவுஸ்திரேலியா ,ஜப்பான், இந்தோனேசியா, தாய்லாந்து, மியான்மார்,சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடனும்,கூட்டுக் கடற்படைப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இவற்றில் அமெரிக்க கடற்படையுடன் இணைந்து நடத்தப்படும் ,மலபார் என்ற கூட்டுப்பயிற்சி தான்,சீன ’ஆதிக்கத்தை எதிர்கொள்வதற்கான முக்கியமான சுட்டுச்செயற்பாடாகும். இலங்கையுடன் இணைந்தும் இந்தியா கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டாலும்,இந்த விடயத்தில் ,சீனாவுடன் அதிகம் முட்டிக்கொள்ள இலங்கை தயாராக இல்லை.

ஆளணியினருக்கான பயிற்சிகளுக்கு இந்தியாவை இலங்கை எந்தளவுக்கு அதிகம் நம்பியிருக்கிறதோ,அது போலவே, போர்க்கப்பல்கள் ,ஆயுத தளபாடங்களுக்கு சீனாவை,இலங்கை நம்பியிருக்கிறது. அண்மையில் சீனாவுக்குச் சென்றிருந்த கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேரா,சீனப் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோருடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.

அந்தப் பேச்சுக்களில்,இலங்கைக் கடற்படைக்கு பாரிய போர்க்கப்பல் ஒன்றைக் கொள்வனவு செய்வது குறித்தும் பேசப்பட்டுள்ளது. ஆனால்,அது எந்த வகையான போர்க்கப்பல் ,எவ்வளவு பெறுமதியானது, எப்போது இலங்கைக்கு வழங்கப்படும் என்பது போன்ற விபரங்கள் இன்னமும் இரகசியமாகவே இருக்கின்றது.

இவ்வாறாக சீனாவுடன் நெருக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்பைக் கொண்டிருக்கின்ற இலங்கையுடன் இந்தியா கூட்டுப்பயிற்சிகளை நடத்தினாலும்,இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை முற்றாக முறியடிக்கும் விடயத்தில் இலங்கையின் ஆதரவைப் பெறமுடியாது.

இலங்கை இரு நாடுகளுடனும் நெருக்கமான பாதுகாப்பு உறவுகளைக் கொண்டுள்ள நாடு. எனவே ,ஒரு வரையறைகளுக்கு மேல் இந்தியாவுடன் ஒத்துழைக்க அது இணங்காது. இது இந்தியாவுக்கு ஒரு சிக்கலான நிலையே.

அதேவேளை ,கொழும்புத் துறைமுகத்தின் கதவுகளை அடைத்து விட்ட இந்தியா,இப்போது பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்துக்குள் நுழைந்த சீன நீர்மூழ்கிகளைத் தடுக்க வழியின்றித் தவிக்கிறது. இந்த நிலையில் இந்தியப் பெருங்கடலின் உரிமை தொடர்பாக சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் முறுகல் தீவிரமடையும் போலத் தெரிகிறது.

இரு நாடுகளுடனும் நெருக்கமான உறவைக் கொண்டுள்ள இநிதியப் பெருங்கடலின் கேந்திர மையத்தில் அமைந்துள்ள இலங்கையைப் பொறுத்தவரையில் இது ஒன்றும் சாதகமான விடயமாக இருக்காது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum