Top posting users this month
No user |
Similar topics
முகவரியற்ற பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமைப் பத்திரங்கள் வழங்கத் திட்டம்
Page 1 of 1

முகவரியற்ற பெருந்தோட்ட மக்களுக்கான காணி உரிமைப் பத்திரங்கள் எதிர்வரும் 6 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படவுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே. வேலாயுதம் தெரிவித்தார்.
மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகளை நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று மக்கள் தெனிய பகுதியில் நடைபெற்ற போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,
இவ்வாறு வழங்கப்படும் 7 பேச்சஸ் காணிகளுக்கான காணி உறுதிப் பத்திரங்கள் கணவன் மற்றும் மனைவி ஆகியோரின் பெயரில் வழங்கப்படவுள்ளதுடன், அந்த உறுதிப்பத்திரங்களை வங்கியில் அடகு வைத்து பணத்தினை பெறமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் மக்கள் தெனிய பகுதியில் அமைக்கப்பெறவுள்ள மாதிரிக் கிராமத்தில் அனைத்து மதஸ்தலங்கள், சிறுவர் பூங்காக்கள், சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பல அத்தியாவசிய திட்டங்கள் உள்ளடக்கப்படவுள்ளதாகவும், அத்துடன் தமது அமைச்சின் மூலமாக மலையக மக்களுக்கான வீடுகள் நிர்மாணிக்கப்பட்ட பின்னர் லயம் வீட்டு திட்டங்களை ஒழித்து லயன் வாழ்க்கையிலிருந்து விடுதலைபெற்று மலையக மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தினை ஏற்படுத்தப் போவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வும் வழங்கப்படுமாயின் அதற்கு தாம் ஆதரவு வழங்க தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பி. திகாம்பரம், கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன், ஊவா மாகாண அமைச்சர் வடிவேல் சுரேஷ், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வளலாய் மற்றும் வசாவிளான் மக்களுக்கு ஜனாதிபதியால் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைப்பு
» பெருந்தோட்ட மக்களுக்கு உதவ முன்வருமாறு வேலாயுதம் பிரிட்டனுக்கு அழைப்பு
» காணி, வாகனங்களின் விலைகளை காட்சிப்படுத்த திட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum