Top posting users this month
No user |
Similar topics
பொதுத்தேர்தலில் இணைந்து போட்டியிட சரத் பொன்சேகாவுடன் ஐ.தே.க பேச்சு
Page 1 of 1

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சரத் பொன்சேகாவின் கட்சியுடன் இணைந்து போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றது.
இதன்படி ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்கிரம,சரத் பொன்சேகாவை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
ஏற்கனவே தேர்தலில் தனித்து போட்டியிடுவதென்று சரத் பொன்சேகாவின் கட்சி தீர்மானித்துள்ளது.
எனினும் ஊழல் மிக்க மஹிந்த ராஜபக்சவினால் ஆட்சிக்கு வரமுடியும் என்ற நிலை ஏற்பட்டால், ஏனைய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடப்போவதாக சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்.
சரத் பொன்சேகா – ஜாதிக ஹெல உறுமய இணையும் புதிய கூட்டணி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலேயோ அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலேயோ தேர்தலில் போட்டியிட வேட்புமனுவை வழங்கினால், அதற்கு எதிராக விரிவான முன்னணி ஒன்றை கட்டியெழுப்ப ஜாதிக ஹெல உறுமய தீர்மானித்துள்ளது.
கடந்த ஜனவரி 8 ஆம் திகதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக தெரிவு செய்த 62 லட்சம் மக்கள் எதிர்ப்பார்த்த நீதி, நியாயத்தை நிறைவேற்றுவதற்காக படித்தவர்கள், தொழில்சார் நிபுணர்களை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரும் புதிய அரசியல் முன்னணியை மிக விரைவில் ஆரம்பிக்க போவதாக ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தீர்மானகரமான பணியை நிறைவேற்றிய வெகுஜன அமைப்புகள்,தொழில்சார் நிபுணர்கள் தலைமைத்துவத்தை வழங்கும் முன்னணியில் ஜாதிக ஹெல உறுமய இணையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்படும் கூட்டணியில் ஜாதிக ஹெல உறுமய இணையாது.
ஜாதிக ஹெல உறுமய உருவாக்க உள்ள இந்த கூட்டணிக்கு ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் இணக்கம் வெளியிட்டுள்ளதாக அந்த பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிட இடதுசாரிகள் தீர்மானம்
» ஜனாதிபதி பதவியின் மீதே எனக்கு ஆசை!- சோமவன்ச அமரசிங்க - ஜனாதிபதியுடன் இணைந்து போட்டியிட தீர்மானம்
» எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தயாசிரி, ஹரின் அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum