Top posting users this month
No user |
Similar topics
வாக்கு பலமே மலையக மக்களுடைய சக்தி: ஆர்.இராஜாராம்- இ.தொ.காவுடன் இணைந்து செயற்படுமாறு தொண்டமான் கோரிக்கை
Page 1 of 1

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அரசாங்கத்தினை தெரிவு செய்யும் சக்தி மலையக மக்களுடைய வாக்கு பலத்திலேயே தங்கியிருப்பதாக மலையக மக்கள் முன்னணியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.இராஜாராம் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது நல்லாட்சியை கொண்டு வருவதற்கு மலையக மக்களுடைய வாக்கு பலம் ஒரு தீர்மானிக்க கூடிய சக்தியாக இருந்துள்ளது.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலின் போது கூட புதிய நாடாளுமன்றில் எந்த தரப்பு செயற்படபோகும் என்பதை மலையக மக்களுடைய சக்தியிலேயே தங்கியுள்ளது.
மலையக மக்கள் முன்னணியின் தலைவர் அமரர்.சந்திரசேகரன் இருந்த கால கட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அவர்கள் ஜனாதிபதியாக வருவதற்கு மலையகத்தில் தலைவர்.சந்திரசேகரனின் முழு பங்களிப்பே இருந்தது.
அதேபோன்று கடந்த தேர்தலின் போது கூட மலையக மக்கள் முன்னணி ஜக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்கிய போது மலையக மக்கள் எந்த மாற்று கருத்து இல்லாமல் சிந்தித்து வாக்களித்ததை சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.
இன்று இந்த நாட்டில் வாழுகின்ற சிறுபான்மை மக்கள் நிம்மதியாக வாழுவதற்கு நல்லாட்சி வழிசமைத்துள்ளது. இந்த நல்லாட்சியை ஏற்படுத்துவதில் தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர்கள் அரும்பாடுபட்டுள்ளனர்.
ஆகவே எதிர்வரும் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து இலங்கையில் வாழுகின்ற மலையகத் தமிழ் மக்களின் சக்திமிக்க அமைப்பாக தமிழ் முற்போக்குக் கூட்டணி திகழப்போகின்றது. அத்தோடு ஜக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதியின் தேர்தல் காலத்தில் நாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை ஏற்றுக்கொண்டது மட்டுமன்றி அதை செயல்வடிவத்திலேயே காட்டி வருகின்றது.
200 வருடம் மலையகத்தில் நாட்டின் வருமானத்திற்கு முதுகெலும்பாக உழைத்த மலையக மக்களுக்கு வீட்டுப்பிரச்சினையை தீர்ப்பதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உன்னதமாக செயல்பட்டு வருகின்றார்.
அது மட்டுமில்லாமல் மலையக கல்வியில் மாற்றத்தை கொண்டு வருவதற்காக பல்வேறுப்பட்ட திட்டங்களை ஜக்கிய தேசிய கட்சியின் தற்போது ஆட்சியின் போது செய்து வருகின்றார்கள்.
இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயமாக ஜக்கிய தேசிய கட்சி அதிகபடியான ஆசனங்களை பெற்று நாடாளுமன்றத்தை அமைக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மலையக சமூகத்தினர் இ.தொ.காவுடன் இணைந்து செயற்பட வேண்டும்: ஆறுமுகன் தொண்டமான்
மலையக சமூகத்தினர் எதிர்வரும் காலங்களிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் இணைந்து செயற்பட வேண்டுமென காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த காலப்பகுதிகளில் மக்களின் உட்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம், விளையாட்டு, அரசதுறை சார்ந்த வேலைவாய்ப்புகள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் மலையக மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டதாகவும், தொழிலாளர்களின் சம்பள உயர்வு உட்பட அனைத்துத் துறைகளிலும் தமது கட்சியினால் பெருமளவு சேவையாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்சியின் அமைப்பாளர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடன் கொட்டகலை, காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.
மேலும் மலையக சமூகத்தினர் எதிர்கால நலன் கருதி பொதுத் தேர்தலின் போது ஒன்றுபட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பொது தேர்தலில் பிரதான கட்சிகளுடன் இணைந்து செயற்படுமாறு ஹெல உறுமயவிற்கு அழைப்பு
» தமிழ் மக்களுடைய நிலங்களிலிருந்து படையினர் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும்: இரா.சம்மந்தன்
» மக்களுடைய நலன்களுக்காகவே நிதியை பெற்றோம்! விளம்பரம் செய்யவேண்டிய தேவையில்லை! மாவை சேனாதிராசா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum