Top posting users this month
No user |
Similar topics
குமார் குணரட்னம் யாழ் வந்தாரா?
Page 1 of 1
குமார் குணரட்னம் யாழ் வந்தாரா?
முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான பிரேம்குமார் குணரட்னம் அந்த கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குமார் குணரட்னம் இலங்கையில் தங்கியிருக்க இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் தடைவிதித்துள்ளது.
இலங்கையில் அனுமதியின்றி தங்கியிருப்பதன் காரணமாக அவரை கைது செய்ய புலனாய்வுப் பிரிவு காவற்துறையினர் தமது குழுவொன்றை தேடுதலில் ஈடுபடுத்தியுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.
முன்னிலை சோசலிக் கட்சியின் அரசியல் செயற்பாடுகளை வடக்கில் விஸ்தரிப்பதற்காக யாழ்ப்பாணத்தில் அண்மையில் அந்த கட்சியின் அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் தமிழர்களை தமது கட்சியில் இணைப்பது தொடர்பில் குமார் குணரட்னம் தலைமையில் வேலைத்திட்டம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
1988 ஆம் 89 ஆம் ஆண்டுகளில் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) திருகோணமலை மாவட்ட இராணுவ பொறுப்பாளராக செயற்பட்ட குமார் குணரட்னம், அன்றைய அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
பொறியியல் பட்டதாரியான அவர், சிங்கள பெயரில் அவுஸ்திரேலியாவுக்கு சென்று அங்கு புகலிடம் பெற்றதுடன் அந்நாட்டு குடியுரிமையையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
1990 ஆண்டுகளில் மக்கள் விடுதலை முன்னணிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்ட பின்னர், அந்த கட்சியை அரசியல் நீரோட்டத்தில் இணைக்கும் செயற்பாடுகளை மேற்கொண்ட நபர்களில் முக்கிய நபராக குமார் குணரட்னம் செயற்பட்டதாக கூறப்படுகிறது.
மக்கள் விடுதலை முன்னணியின் பலமிக்க பின்புல தலைவராக இயங்கிய அவர், அந்த கட்சியில் ஏற்பட்ட அரசியல் முரண்பாடுகள் காரணமாக அதில் இருந்து வெளியேறினார். அவருடன் வெளியேறி முக்கிய தலைவர்களின் தலைமையில் முன்னிலை சோசலிசக் கட்சி உருவாக்கப்பட்டது.
இந்த நிலையில், மகிந்த ராஜபக்ச அரசாங்க காலத்தில் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்ட குணரட்னம், அவுஸ்திரேலிய அரசின் அழுத்தங்கள் காரணமாக விடுதலை செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.
புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், நாடு திரும்பிய அவர் வீசா அனுமதி காலம் முடிந்தும் இலங்கையில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
மக்கள் விடுதலை முன்னணிக்கு சவாலை ஏற்படுத்தக் கூடியவர் எனக் கருதப்படும் அவரை நாட்டில் இருந்து வெளியேற்ற, அந்த கட்சி மறைமுக அழுத்தங்களை அரசாங்கத்திற்கு கொடுத்து வந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» குமார் குணரட்னம் தலைமறைவு
» ஆஸியில் புவியதிர்வு ஏற்பட்டால் குமார் குணரட்னம் இலங்கையில் வசிக்க முடியும்?: முன்னிலை சோசலிஸக்கட்சி கேள்வி
» குமார் குணரத்தினத்திற்காக பிரான்சில் எதிர்ப்பு போராட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum