Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஆஸியில் புவியதிர்வு ஏற்பட்டால் குமார் குணரட்னம் இலங்கையில் வசிக்க முடியும்?: முன்னிலை சோசலிஸக்கட்சி கேள்வி

Go down

ஆஸியில் புவியதிர்வு ஏற்பட்டால் குமார் குணரட்னம் இலங்கையில் வசிக்க முடியும்?: முன்னிலை சோசலிஸக்கட்சி கேள்வி           Empty ஆஸியில் புவியதிர்வு ஏற்பட்டால் குமார் குணரட்னம் இலங்கையில் வசிக்க முடியும்?: முன்னிலை சோசலிஸக்கட்சி கேள்வி

Post by oviya Fri May 08, 2015 12:47 pm

நேபாளத்தில் புவியதிர்வு ஏற்பட்டதன் பின்னர், அரசியல் அச்சம் காரணமாக இலங்கையில் இருந்து வெளியேறிய ஊடகவியலாளர்கள் உட்பட்டவர்கள் நாடு திரும்பலாம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளமையை முன்னிலை சோசலிஸக்கட்சி விவாதத்திற்கு உட்படுத்தியுள்ளது.
நல்லாட்சியின் கீழ் இந்த வாய்ப்பை வழங்கியுள்ள அரசாங்கம், ஏன் இன்னும் முன்னிலை சோசலிஸக்கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் குமார் குணரட்னத்துக்கு இலங்கையின் பிரஜாவுரிமையை தர மறுக்கிறது என்று கட்சியின் அரசியல்பீட உறுப்பினர் துமிந்த நாகமுவ கேள்வி எழுப்பியுள்ளார்.

செய்தியாளர்கள் மத்தியில் அவர் இந்த கேள்வியை முன்வைத்துள்ளார். இலங்கையில் குறிப்பாக இரட்டை பிரஜாவுரிமைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள தற்போதைய நிலையிலும் அரசியல் அச்சம் காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்ற குமார் குணரட்னத்திற்கு இலங்கை பிரஜாவுரிமையை வழங்க மறுப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை பிரஜாவுரிமையை பெற்று கொள்வதற்காக குமார் குணரட்னம் தாக்கல் செய்திருந்த விண்ணப்பத்திற்கு கூட இன்னும் அரசாங்கத்தினால் பதில் வழங்கப்படவில்லை எனவும் நாகமுவ சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் அரசாங்கத்தின் தர்க்கப்படி நேபாளத்தில் ஏற்பட்ட புவியதிர்வை போன்று அவுஸ்திரேலியாவிலும் ஏற்பட்டால் குமார் குணரட்னம், இலங்கைக்கு இலகுவாக வந்து அரசியலில் ஈடுபடமுடியும் என்றே தாம் நம்புவதாக நாகமுவ மேலும் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum