Top posting users this month
No user |
Similar topics
தனிநபர் ஒருவரின் வருமானம் 6000 அமெரிக்க டொலர்களாக உயர்த்தப்படும்! மைத்திரி
Page 1 of 1

இந்நாட்டின் தனிநபர் வருமானத்தை எதிர்வரும் 5 ஆண்டுகளில் 6000 அமெரிக்க டொலர்களாக உயர்த்துவதற்கு அரசு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அதற்குரிய முதலீடுகள் கைத்தொழில்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் விரிவான அபிவிருத்தி மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
சீதாவகை ஆற்றில் இரத்தினக் கற்கள் அகழும் ஒருங்கிணைந்த முன்னோடிக் கருத்திட்டத்தின் பயன்களை அப்பிரதேச மக்களிடம் ஒப்படைக்கும் வைபவம் நேற்று தெகியோவிட்ட பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன்போது அங்கு கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,
இரத்தினக்கல் கைத்தொழில் இருந்து வியாபாரிகளும் அரசும் பெறுகின்ற இலாபத்தில் ஒரு பகுதியை அவ் வளங்களை பெற்றுக் கொடுக்கின்ற பிரதேசங்களில் உள்ள குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களிடையே பகிர்ந்தளிப்பதை கொள்கை ரீதியான விடயமாக எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும்.
இதற்கான மிகத்தகுதியானவர்களை தெரிவு செய்யும் பொறுப்பு பிரதேச செயலாளர் கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், உள்ளிட்ட பிரதான வெளிக்கள உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றது.
இதில் ஏதேனும் முறைகேடுகள் நிகழுமானால் அதுதொடர்பில் குறித்த அதிகாரிகள் பொறுப்புக் கூறவேண்டும்.
சூழல் அமைச்சுக்கு கிடைக்கும் அனைத்து முறைப்பாடுகள் தொடர்பாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் ஆராய்ந்து பார்ப்பதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும் இரத்தினக்கல் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் சட்டபூர்வமாக சுதந்திரமாக தமது நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான வாய்ப்பை ஆகக்கூடிய அளவில் உறுதிப்படுத்துவதாகவும், அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டிய அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளாக இரத்தினக்கல் கூட்டுத்தாபனத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக எந்தவிதத்திலும் திருப்திப்பட முடியாது.
இரத்தினக்கல் கைத்தொழிலை மேற்கொள்ள வேண்டியவர்கள் அக் கைத்தொழில் ஈடுபட்டிருக்கின்றவர்களேயொழிய அரசியல்வாதிகள் அல்ல.
அரசியல் தலையீடுகள் இன்றி தூய்மையான நிறுவனமாக இரத்தினக்கல் கூட்டுத்தாபனத்தின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, அத்தாவுத செனவிரத்ன, சப்ரகமுக மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவி டாக்டர் துஷித்தா விஜயமான, இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண அதிகாரசபையின் தலைவர் அனுர குணவர்தன ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பல்கலைக்கழகங்களுக்கு இணைந்து கொள்ளப்படுவோரின் எண்ணிக்கை 40,000 உயர்த்தப்படும்!
» 2030ம் ஆண்டளவில் இலங்கை அதிக வருமானம் பெறும் நாடாக மாறிவிடும்: ரணில்
» சுங்கத் திணைக்களத்தின் வருமானம் அதிகரிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum