Top posting users this month
No user |
Similar topics
மீன் கட்லெட் - 2
Page 1 of 1
மீன் கட்லெட் - 2
முள்ளில்லாத மீன் - கால் கிலோ
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
சீரக தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தக்காளி - அரை பாகம்
பச்சை மிளகாய் - இரண்டு
எலுமிச்சை சாறு - அரை தேக்கரண்டி
வெங்காயம் - இரண்டு (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி தழை - கால் கப் (பொடியாக நறுக்கியது)
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு தேக்கரண்டி
முட்டை வெள்ளை கரு - மூன்று
க்ரெம்ஸ் பவுடர் - கட்லெட் பிரட்ட தேவையான அளவு
உருளைக்கிழங்கு - கால் கிலோ (வேகவைத்து மசித்தது)
கேரட்- ஒன்று சிறியது (வேகவைத்து மசித்தது)
மீனை சுத்தமாக கழுவி முள்ளில்லாமல் எடுத்து வேகவைத்து உதிர்த்து கொள்ளவும்.
உதிர்த்து வைத்துள்ள மீனில், மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரக தூள், கரம் மசாலா தூள், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு அதில் தக்காளி, பச்சை மிளகாயை மிக்ஸியில் அடித்து அதையும் சேர்த்து லேசாக வதக்கவும்.
பிறகு வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, கேரட்டை உதிர்த்து சேர்க்கவும்.
பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கொத்தமல்லி தழை, எலுமிச்சைச்சாறு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
முட்டையை நன்கு அடித்து அதில் ஒரு எலுமிச்சை அளவு உருண்டையை உருட்டி வடை போல் தட்டி முட்டையில் தோய்த்து க்ரெம்ஸ் பவுடரிலும் இரு பக்கமும் தோய்த்து பத்து நிமிடம் கழித்து பொரித்தெடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum