Top posting users this month
No user |
Similar topics
பஃப் பேஸ்ட்ரி தயாரிக்கும் முறை
Page 1 of 1
பஃப் பேஸ்ட்ரி தயாரிக்கும் முறை
மைதா - கால் கிலோ + 100 கிராம்
பட்டர் - 125 கிராம்
பேக்கிங் ஈஸ்ட் - 10 கிராம்
சீனி - 3 மேசைக்கரண்டி(சுமார் 35 கிராம்)
தண்ணீர் - 120 மில்லி
உப்பு - ஒரு பின்ச்
மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கால் கிலோ மைதா மாவுடன், 2 ஸ்பூன் பேக்கிங் ஈஸ்ட்டை வெதுவெதுப்பான நீரில் (கட்டியின்றி)நன்கு கரைத்து ஊற்றி, சீனி, உப்பு, தண்ணீர் அனைத்தையும் சேர்த்து ஒன்றாக கலந்து பிசைந்து வைத்து, சுமார் கால் மணி நேரம் கழித்து நன்கு குழைவான பதம் வரும் வரை (சுமார் 10 நிமிடங்கள் தொடர்ந்து) நன்கு பிசைந்து, உருண்டையாக்கி ஒரு பாத்திரத்தில் வைத்து ஈரத்துணியால் மூடி 2 மணி நேரம் வைக்கவும்.
ஒரு பட்டர் பேப்பரில் பட்டரை வைத்து மூடி, சப்பாத்திக் கட்டையால் சதுர வடிவில் நசுக்கி, அப்படியே ஃபிரிஜ்ஜில் வைக்கவும்.
2 மணி நேரத்திற்கு பிறகு குழைத்த மாவு நன்கு உப்பியிருக்கும். பிறகு ஒரு மரவை மீது சிறிது மாவை தூவி உருட்டி வைத்த மாவை சதுரமாக (சப்பாத்தி கனத்திற்கு) தேய்த்து, அதன் மேல் ஃப்ரிஜ்ஜில் வைத்துள்ள (சதுரமாக நசுக்கிய) பட்டரை குறுக்காக வைக்கவும்.
இப்போது பட்டர் வெளியில் தெரியாதபடி, வளர்த்திய மாவால் மூடி, நான்கு மூலைகளையும் சற்று அழுத்தி சதுரமாக செட் செய்துக் கொள்ளவும்.
மீண்டும் மரவை மீது சிறிது மாவை தூவி, மடித்த பாகத்தை கவிழ்த்து வைத்து, (மெதுவாக அழுத்தி) நீளமாக தேய்க்கவும்.
நீள் செவ்வக வடிவில் வளர்த்திய மாவின் இரண்டு ஓரங்களையும் சம அளவில் (இரண்டு புறமும் கால் பகுதி அளவுக்கு எடுத்து) மடிக்கவும்.
மடக்கிய அந்த இரண்டு பாகங்களையும் ஒன்றோடொன்று படியும்படி மீண்டும் மடிக்கவும். இப்போது பார்க்க புத்தக வடிவில் இருக்கும்.
மீண்டும் மரவையில் சிறிது மாவு தூவி செவ்வக வடிவில் தேய்க்கவும்.
பிறகு அதை மூன்றாக மடிக்கவும். இத்தோடு ஒரு சுற்று முடிந்தது.
ஒவ்வொரு சுற்று முடிவிலும் சுற்றுகளின் நினைவிற்காக, மாவின் ஓரத்தில் விரலால் அழுத்தி ஒவ்வொரு பள்ளம் வைக்கவும். இப்படி 4 சுற்றுக்களை முடிக்கவும். ஒவ்வொரு சுற்றும் முடிந்தவுடன், மடித்து வைத்துள்ள மாவை பட்டர் பேப்பரால் காற்று படாமல் மூடி அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
பிறகு இரண்டாவது சுற்று ஆரம்பிக்க வேண்டும். அதாவது அரை மணி நேரத்திற்கு பிறகு சிறிது மாவை மரவை மீது தூவி, செவ்வக வடிவில் தேய்த்து, ஸ்டெப் 6, 7, 8, 9 ல் கூறியுள்ளபடி செய்து அரை மணி நேரம் ஃப்ரிஜ்ஜில் வைக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum