Top posting users this month
No user |
Similar topics
பிரசவ லேகியம்
Page 1 of 1
பிரசவ லேகியம்
சுக்கு - 2 அங்குல துண்டு,
சித்தரத்தை - 2 அங்குல துண்டு,
கண்டந்திப்பிலி - 1 துண்டு,
அரிசி திப்பிலி - ஒரு ரூபாய் எடையளவு,
ஏல அரிசி - ஒரு ரூபாய் எடையளவு,
கசகசா - 2 தேக்கரண்டி,
சோம்பு - 2 தேக்கரண்டி,
ஓமம் - 2 தேக்கரண்டி,
கிராம்பு - 10,
பட்டை - 1/2 அங்குல துண்டு,
வசம்பு - 2 துண்டு,
மிளகு - 50 கிராம்,
சீரகம் - 2 தேக்கரண்டி,
இஞ்சி - 3 அங்குல துண்டு,
வெல்லம் - 250 கிராம்,
சாத்துக்குடி சாறு - ஒரு பழத்தின் சாறு,
நெய் - 3 மேசைக்கரண்டி,
நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி,
சுத்தமான தேன் - 3 மேசைக்கரண்டி.
சுக்கு, வசம்பு, சித்தரத்தை, கண்டந்திப்பிலி எல்லாவற்றையும் சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்.
அதனுடன் அரிசி திப்பிலி, ஏல அரிசி, கசகசா, சோம்பு, ஓமம், கிராம்பு, பட்டை, மிளகு, சீரகம் எல்லாவற்றையும் தனிதனியாக வெயிலில் ஒரு நாள் முழுதும் காய வைக்கவும்.
அடுப்பில் வெறும் வாணலியை வைத்து, தனித்தனியாக பொருட்களை பொன் வறுவலாக வறுத்துக் கொள்ளவும்.
ஆறியதும் மிக்ஸியில் போட்டு, நைசாக அரைக்கவும்.
அரைத்தை 2, 3 முறை சலித்து வைக்கவும்.
இஞ்சியை தோல் சீவி, அரைத்து சாறை வடிகட்டி வைக்கவும்.
கொஞ்ச நேரம் கழித்து தெளிந்ததும், மேலாக வடித்தெடுத்து கொள்ளவும்.
அத்துடன் சாத்துக்குடி சாறையும் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
வெல்லத்தை தூள் செய்து அதில் கொட்டவும்.
வெல்லம் கரைந்ததும் வடிக்கட்டி, திரும்ப அடுப்பில் வைத்து, 2 நிமிடம் கொதிக்க விடவும்.
பொடித்து வைத்துள்ள பொடியை அதில் தூவி கட்டியில்லாமல் கிளறவும்.
நெய், நல்லெண்ணெய் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கிளறவும்.
கையில் ஒட்டாமல் அல்வா போல் வந்ததும் இறக்கி, தேனை விட்டு கிளறி ஆற விடவும்.
நன்கு ஆறியதும் பாட்டிலிலோ, மூடி போட்ட பாத்திரத்தில் எடுத்து வைத்தால் மாதக்கணக்கில் கெடாமலிருக்கும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum