Top posting users this month
No user |
Similar topics
ஆந்திராவில் பெய்த மீன் மழையால் பரபரப்பு: போட்டி போட்டு அள்ளிய மக்கள்
Page 1 of 1

ஆந்திராவில் நேற்று முந்தினம் பெய்த கனமழையின் போது வானில் இருந்து மீன்கள் மழையாக பொலிந்ததால் பொதுமக்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் நந்தி காமா மண்டலத்தில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு தொடங்கிய மழை நள்ளிரவு வரை நீடித்துள்ளது.
நேற்று காலை கொள்ளமுடி, பல்லகிரி ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகள் வழக்கம் போல் தங்கள் வயல்களுக்கு சென்றுள்ளனர்.
அப்போது இரவு பெய்த மழையில் வயல்களில் தேங்கியிருந்த தண்ணீரில் ஏராளமான மீன்கள் உயிருடன் நீந்தியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் சுமார் 50 ஏக்கர் பரப்பளவிற்கு மீன்கள் சிதறி கிடந்ததால் ஆச்சர்யமடைந்த விவசாயிகள், அவற்றை போட்டி போட்டு அள்ளியுள்ளனர்.
மாலை வரை நடந்த இந்த மீன் வேட்டையில், ஒவ்வொரு மீனும் சுமார் அரைக்கிலோ எடையுடன் காணப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கிராம மக்கள் இதுபற்றி கூறுகையில், இரவு பெய்த மழையில் வானத்தில் இருந்து மீன்கள் கொட்டியதாக தெரிவித்துள்ளனர்.
மீன் மழை பெய்த தகவல் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதால் ஏராளமான மக்கள் கொள்ளமுடி கிராமத்துக்கு படையெடுக்கின்றனர்.
விசாகப்பட்டினத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் நிபுணர் முரளி கிருஷ்ணா கூறுகையில், மீன் மழை பெய்வது அதிசயமான ஒன்றுதான்.
ஆகாயத்தில் அடர்த்தியான மேகங்கள் ஏற்பட்டு நகரும் போது சுழல் காற்று ஏற்படும்.
அந்த சூழல் காற்று கடல் மற்றும் நீர் நிலை மேல் ஏற்படும் போது யானையின் தும்பிக்கை போல கீழே இறங்கி நீரில் உள்ள மீன்கள், தவளைகள் போன்றவற்றை மேலே இழுத்துச்செல்லும்.
பின்னர் அதன் சீற்றம் குறையும் போது ஈர்க்கப்பட்ட மீன்கள் தரையில் விழும்.
மேலும், அமெரிக்காவில் இது போன்ற மீன் மழை அடிக்கடி நிகழ்வது உண்டு.
வட மாநிலத்தில் கூட மீன் மழை பெய்து உள்ளது என்றும் ஆனால் தென்னிந்தியாவில் பெய்தது ஆச்சரியமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» டாஸ்மாக்கில் போட்டி போட்டு மது அருந்தும் மூதாட்டிகள்: வைரலாக பரவும் வீடியோ
» தொகுதி மக்கள் முன்னிலையில் எம்.எல்.ஏ.வை அடித்த விஜயகாந்த்: வீடியோவால் பரபரப்பு
» பெண்களைக் குறி வைத்து ஊசிபோடும் மர்ம நபர்!.. எய்ட்ஸ் ஊசியா? ஆந்திராவில் பரபரப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum