Top posting users this month
No user |
Similar topics
வெங்காய அரிசி அடை
Page 1 of 1
வெங்காய அரிசி அடை
பச்சரிசி - 3 கப்
சின்ன வெங்காயம் - 15
சோம்பு - ஒரு ஸ்பூன்
தேங்காய் துருவல் - ஒரு கப்
முட்டை - ஒன்று
பச்சைமிளகாய் - ஒன்று
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
சீனி - 2 ஸ்பூன்
எண்ணெய் மற்றும் நெய் - சுடுவதற்கு தேவையான அளவு
பச்சரிசி மற்றும் சோம்பு சேர்த்து தண்ணீரில் கழுவி பின் பத்து நிமிடம் ஊற வைக்கவும்.
அதன் பின் தண்ணீரை நன்கு வடிய செய்து சுத்தமான துணியில் பரப்பி காற்றோட்டமான நிழலில்(அரை மணி நேரம்) காய வைக்கவும்.
காய்ந்ததும் மிக்ஸியில் ரவை பதத்தில் பொடித்து கொள்ளவும்.
பிறகு தேங்காயை மிக்ஸியில் பட்டுப்போல் அரைக்காமல் திட்டமாக அரைத்து அதனுடன் பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த அரிசியுடன் இந்த விழுதை சேர்த்து முட்டை, சீனி, சோடா உப்பு, தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு பிசையவும். தண்ணீர் சேர்க்க கூடாது. பிசைந்த மாவை ஐந்து நிமிடம் விடவும்.
எண்ணெய் மற்றும் நெய்யை சம அளவில் ஒன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய், நெய் கலவையிலிருந்து எடுத்து ஊற்றி சூடு வந்ததும், ஒரு கை நிறைய மாவு எடுத்து உருட்டி அதை தோசைக்கல்லில் வைத்து அடையாக தட்டவும்.
அடையை சுற்றி கலந்துவைத்திருக்கும் எண்ணெயை ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து ஒரு குமிழான மூடியால் மூடவும்.
அடி சிவந்ததா என பார்த்து தோசை திருப்பியால் மெதுவாக திருப்பி போட்டு ஒரு ஸ்பூன் எண்ணெயை சுற்றி ஊற்றவும். நன்கு வெந்து இரு பக்கமும் சிவந்ததும் எடுத்து விடவும்.
இதேப்போல் எல்லாவற்றையும் சுட்டு எடுக்கவும். மொறுமொறுவென்று நன்றாக இருக்கும். நல்ல மாலை நேர சிற்றுண்டி இது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum