Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கல்முனை, சாய்ந்தமருதை புறக்கணித்து வரும் ஹக்கீம்

Go down

கல்முனை, சாய்ந்தமருதை புறக்கணித்து வரும் ஹக்கீம் Empty கல்முனை, சாய்ந்தமருதை புறக்கணித்து வரும் ஹக்கீம்

Post by oviya Mon Jun 15, 2015 2:14 pm

கடந்த 15 வருடங்களாக கல்முனை, சாய்ந்தமருது அரசியல் ரீதியாகவும் அபிவிருத்தி ரீதியாகவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமால் புறக்கணிக்கப்ட்டு வருகின்றது.
கடந்த மஹிந்த ஆட்சியில் இரண்டு முழு அமைச்சும் இரண்டு பிரதி அமைச்சும் வழங்கப்பட்ட போதும் தனக்கு மட்டும் ஒரு முழு அமைச்சர் பதவி போதும் என்று மஹிந்தவிடம் சொல்லிவிட்டு ஹக்கீம் மட்டும் ஒரேயொரு அமைச்சர் பதவி மட்டும் பெற்றுக் கொண்டு வலம் வந்தார்.

அப்போது கல்முனை ஹரீஸ் எம்பிக்கு பாதி அமைச்சு கிடைக்குமென்று கல்முனை மக்கள் பெரிதும் எதிர்பார்த்தார்கள். ஆனால் ஹக்கீம் காலை வாரிவிட்டார். அதன் பின்பு சாய்ந்தமருது மாகாண சபை உறுப்பினர் ஜெமீலுக்கு கிழக்கு முதலமைச்சர் வழுங்குவதாக சாய்ந்தமருது மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

அதிலும் தோல்விதான். அதன் பின்பு சாய்ந்தமருதுக்கு மாகாண அமைச்சு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்ட்டது.அதிலும் ஹக்கீம் ஜெமீலுக்கு காலை வாரிவிட்டார்.

இப்படியாக அரசியல் ரீதியாக கடந்த 15 வருடங்களாக கல்முனை, சாய்ந்தமருது முஸ்லிம் காங்கிரஸ் கட்சி என்னும் பெயரில் ஹக்கீம் என்னும் ஒரு தனி மனிதனால் ஓரங்கட்டப்பட்டு வருகின்றது.

ஆனால் இவைகள் பற்றி கல்முனை மக்களோ அல்லது சாய்ந்தமருது மக்களோ ஹக்கீமிடம் வாய்திறப்பதில்லை.காரணம் அம்பாரை மாவட்ட முஸ்லிம் அரசியலில் சக்களத்திச் சண்டை அதிகம். அதாவது கல்முனையில் ஹரீஸ் எம்பியை வீழ்த்த ஒரு கூட்டம். சாய்ந்தமருதில் ஜெமீலை வீழ்த்த ஒரு கூட்டம். அப்படியாக குழிபறிக்க ஓரங்கட்ட ஒவ்வொருவருக்கும் ஒரு கூட்டம்.

இந்த சக்களத்திக் கூத்தினால் நிந்தவூர் ஹசனலிக்கு அடித்தது அதிர்ஷ்டம் பாதி அமைச்சர் பதவி.ஆனால் இப்படியொரு பாதி அமைச்சுக்கு ஹஸனலி ஹக்கீமுடன் முட்டி மோதியது ஒரு பம்மாத்துக் காட்டியது வேறு கதை.

ஆனால் இந்த பாதி அமைச்சு கல்முனை ஹரீஸ் எம்பிக்கு அல்லது நிந்தவூர் பைசல் காசீம் எம்பிக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பது அம்பாறை மாவட்ட மு.கா காரர்களின் ஆதங்கம்.

மற்றும் அஷ்ரப்பின் மறைவுக்குப் பின்பு கல்முனை சாய்ந்தமருது ஏதாவது அபிவிருத்தி கண்டுள்ளதா என்றால் யாரும் வாய்திறக்க முடியுமா.? அல்லது சொல்லத்தான் முடியுமா?அப்போ எதற்காக ஹக்கீம் தரப்புக்கு தொடர்ந்து வாக்களித்து அழகு பார்க்கின்றீர்கள். ஹக்கீம் என்னும் அடிமைச் சங்கிலியில் இருந்து விடுபட முடியாதா.?

தற்போது சாய்ந்தமருது பிரதேச சபை கேட்டு சாய்ந்தமருது மக்கள் போராட்டம் நடத்துகின்றார்கள். நாம் ஹக்கீக்கு வாக்களித்து ஹக்கீமை அமைச்சராக அழகு பாhத்துக் கொண்டு இன்று சாய்ந்தமருது பிரதேச சபை கேட்டு கடையடைப்பு ஆர்ப்பாட்டம்,பேராட்டம் நடத்துகின்றோம்.

இதைவிடக் கேவலம் உள்ளதா? நமது வாக்குப் பலத்தில் எங்கிருந்தோ வந்த ஹக்கீமை வாழவைத்துக் கொண்டு தமிழ் மக்கள் போன்று இன்று கடையடைப்பு நடத்துகின்றோம். ஆனால் கல்முனை சாய்ந்தமருது என்ன அம்பாறை மாவட்டமே ஹக்கீமால் கடந்த 15 வருடங்களாக சகல வழிகளிலும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது என்பதை அறந்து விடுகின்றீர்கள்.என்று தீரும் இந்த அடிமைத் தனம்.

தென்கிழக்கு பல்கலைக்கழக வளாக உபவேந்தராக சபீனா இம்தியாஸ், றஸ்மிக்கு மு.கா தடையா?

அம்பாறை மாவட்டம் ஒலுவிலில் அமைந்துள்ள தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் தற்போதைய உபவேந்தரின் பதவிக்காலம் இம்மாதம் 22 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது.

புதிய உபவேந்தரை தெரிவு செய்வதற்கான தெரிவு நிகழ்ச்சி கடந்த மாதம் நடைபெற்று முடிந்துள்ளது. தெரிவில் இதே பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீட தலைவி கலாநிதி சபீனா இம்தியாஸ் (சாய்ந்தமருது), மற்றும் விரிவுரையாளர் றஸ்மி (மாளிகைக்காடு), களனி பல்கலை பேராசிரியர் நாஜீம் (காலி மாவட்டம்) ஆகியோர்கள் தெரிவு செய்யப்பட்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால் இவர்களில் அத்தனை தகுதிகளும் சபீனாவுக்கே உள்ளது. காரணம் இப்பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் பணியிலும் விஞ்ஞானபீட தலைவியாகவும் நீண்டகாலமாக பணியாற்றி வருகின்றார்.

அத்துடன் இப்பல்கலைக்கழகத்தின் புவியியல் சார்பான அனுபவம் மற்றும் இப்பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் மற்றும் நிர்வாகத் துறையினர் ஆகிய சகல வியடங்களிலும் அனுபவம் பெற்றுள்ளார்.

அதனால் அம்பாறை மாவட்ட கல்விசார் துறை கொண்டவர்கள் தொட்டு புத்திஜீவிகள் மட்டத்தில் கலாநிதி சபீனாவை இப்பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை மற்றும் அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றது.

இதன் நிமித்தம் மு.கா.தலைவர் ஹக்கீமிடம் கல்முனை, சாய்ந்தமருது கல்வியலாளர்கள் எடுத்துச் சொல்லியும் ஹக்கீம் பிடி கொடுக்காமல் வழங்கியுள்ளார்.

தற்போது ஜனாதிபதி செயலகத்தில் இருந்து இவ்வாரம் உப வேந்தர் நியமன உத்தரவு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவுக்கு அனுப்பும் நிலையில் உள்ளது. ஆனால் மு.கா.ஹக்கீம் அம்பாறை மாவட்டக்காரர்களை உப வேந்தராக நியமிக்கும் நோக்கமில்லாது வெளியூர்காரரை நியமிக்கும் நோக்கத்தில் உள்ளாராம்.

ஏற்கனவே இப்பல்கலைக்கழகத்தில் அம்பாறை தயா கமகேயின் கை ஓங்கியுள்ளது. சிங்கள ஆதிக்கம் அதிகரித்துள்ளது.

கல்முனைப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் உப வேந்தராக நியமிக்கப்படக் கூடிய அரிய வாய்ப்பு கலாநிதி சபீனாவில் தங்கியுள்ளது.இந்த அரிய வாய்ப்பையும் சந்தர்ப்பத்தையும் இழப்போமானால் இனிமேல் அது கிடைக்காது போய்விடும்.

ஆனால் மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் மட்டும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இந்த இருவரில் ஒருவரை உப வேந்தராக நியமிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

முஸ்லிம் அரசியல்வாதிகளில் முதன் முறையாக பகிரங்க கோரிக்கை கொடுத்துள்ளார். ஜெமீல் பாராட்டப்பட வேண்டியவர். ஆனால் ஏனைய எந்தவொரு அரசில்வாதிகளும் வாய்திறக்கில்லை.

மு.கா.ஸ்தாபகர் அஷ்ரப்பின் பெயரால் அவரது கட்சியின் பெயரால் அரசியல் நடத்தும் அரசியல் பிழைப்பு நடத்தும் இந்த மகான்கள் இந்த அஷ்ரப் கொண்டு வந்த இந்தப் பல்கலைக் கழகத்தை கண்டு கொள்ளாது அரசியல் வியாபாரம் செய்வது என்பது எதிர்வருகின்ற பொதுத் தேர்தலில் கல்முனைத் தொகுதியில் மு.கா.பாரிய வாக்குச் சரிவை ஏற்படுத்தும் என்பது தவிர்க்க முடியாத ஒன்றுதான்.

பாருங்கள் ஹக்கீம் என்ற தனி மனிதனால் கல்முனைக்கு 15 வருடங்களாக ஹரீஸ் எம்பிக்கு பிரதி அமைச்சர் வழங்காமல் புறக்கணிப்பு.

சாய்ந்தமருதவில் ஜெமீலுக்கு மாகாண அமைச்சர் வழங்காமல் புறக்கணிப்பு.

தென்கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு சாய்ந்தமருதைச் சேர்ந்த ஒருவர் உப வேந்தராக நியமிக்கப்படுவதற்கு எந்த ஒரு ஒத்துழைப்பும் இல்லை. அப்படியானால் அதற்கும் எதிர்ப்பு.

தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மேலவை கவுன்சில் உறுப்பினராக இருந்த சாய்ந்தமருது கல்விமான் ஜெமீல் மறைந்து 24 மணிநேரத்திற்குள் தயா கமகேயின் ஆடைத் தொழிற்சாலை ஊழியர் நியமிக்கப்டுகின்றார். ஜெமீல் ஏற்கனவே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவினால் நியமனம் செய்யப்பட்டார்.

ஜெமீலின் இடத்திற்கு கல்முனைப் பகுதியைச் சேர்ந்த கல்வித் தகைமை கொண்ட ஒருவர் நியமிக்கப்ட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த விடயத்தில் மு.கா.எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை கண்டு கொள்ளவே இல்லை.

அதே போன்று கிழக்கு ஆளுனராக பொத்துவில் பொலிஸ் அதிகாரி மஜீட் நியமிக்கப்படவிருந்த போது ஹக்கீம் தனது கடுமையான எதிர்ப்பைக் காட்டிதன் விளைவாக இன்று சிங்களவர் கிழக்கின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இப்படியாக அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களை வெளியூர்க்காரர்களின் அடிமைக்கு உள்ளாகக்கப்பட்டு வருகின்றோம் என்பதை நாம் இன்னும் உணரவில்லையா.

நாம் நம்மை ஆளும் காலம் வராதா? நாம் எதில் குறைந்துள்ளளோம். நாம் எதிலும் சளைத்தவர்கள் அல்ல. இன்று சகல் தகுதிகளும் இருந்தும் நமது பகுதியைச் சேர்ந்த ஒருவர் நமது பகுதி பல்கலைக்கழகத்திற்கு உப வேந்தராக நியமிக்க மு.காசின் தடை இருப்பதனால் நாம் வெளியூர்காரார்களின் ஆதிக்கத்திற்குள் அகப்பட்டு வருகின்றோம்.

ஏற்கனவே ஹக்கீம் என்ற தனிமனிதனின் பாதணியாக, மந்தைகளாக, அடிமைகளாக பதவி கேட்டும் தேர்தல் சீட் கேட்டும் ஹக்கீமின் ஹார்னிவேல் வீட்டில் தவமிருப்பதை காணும் போது வெட்கமாகவில்லையா?

இவைகளை கண்டு கொள்ளவில்லையென்றால் எதற்காக இந்தக் கட்சியும் ஹக்கீமும், ஹக்கீம் வகையறாக்களும், இப்படியான கட்சி ஒன்றும் அதன் வகையறாக்களும் முஸ்லிம் மக்ளுக்குத் தேவையா?

வடகிழக்கு என்ற சம்பந்தமே இல்லாத எங்கிருந்தோ வந்த ஒருவருக்காக நமது உரிமைகளையும் நமது வழங்களையும் பறித்து சிங்களவாதத்திற்கும் சிங்களவர்களுக்கும் காணிக்கையாகக் கொடுக்கும் ஹக்கீம் என்ற தனிமனிதனுக்கும் ஹக்கீம் என்ற தனிமனிதனின் தகிடுதத்தி வேலைகளுக்கும் தாளம் போட்டு இசை அமைக்கும் ஹசனலி மற்றும் வகையறாக்களுக்கு தொடர்ந்து வாக்களித்து அம்பாரை மாவட்ட மக்கள் என்ன நலனைப் பெறப் போகின்றார்கள்.

கவுன்சில் சிங்களவர் 5,முஸ்லிம் 3 ,தமிழர் 1

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கும் 9 வெளிவாரி உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள். 9 உறுப்பினர்கள் அரசியல்வாதிகளின் சிபார்சுக்கமையவாக அவர்கள் விரும்புகின்றவர்கள் வெளியில் இருந்து நியமனம் செய்யப்படுவார்கள்.

அந்த வகையில்தான் இந்த 9 பேரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதில் 5 சிங்களவர்களும் 3 முஸ்லிம்களும் ஒரு தமிழரும் அடங்குகின்றார்கள்.

கடந்த காலங்களில் 5 முஸ்லிம்களும் 4 சிங்களவர்களும் நியமிக்கப்பட்டு வந்தார்கள்.புதிய கவுன்சில் உறுப்பினராக நியமிக்கப்பட்ட கல்விமான் ஜெமீல் காலமானதையடுத்து அந்த இடத்திற்கு அன்னார் இறந்து 24 மணி நேரத்திற்குள் உடனடியாக சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதைக் கூட ஹக்கீம் செய்யவில்லை. கடந்த மஹிந்த ஆட்சியில் சிங்களப் பேரினவாதம் உச்ச கட்டத்தில் இருந்த நிலையிலும் தென்கிழக்குப் பல்கலைக்கழகக் கவுன்சில் உறுப்பினர்களில் 3 சிங்களவர்கள்தான் நியமிக்கப்பட வேண்டும்.

5 முஸ்லிம்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று மஹிந்தரே சொல்லியிருந்தார். அதனால்தான் மஹிந்தர் ஆட்சியில் 5 முஸ்லிம்கள் நியமிக்கப்பட்டு வந்தார்கள்.

காரணம் முஸ்லிம் சமூகம் அதிகளவு உள்ள ஒரு நிறுவனத்தில் முஸ்லிம் பிரதிநிதிகள் அதிகளவு நியமிக்கப்பட வேண்டும் என்று இனவாதியான மஹிந்தரே விரும்பியிருந்தார்..

அம்பாறை தயாகமகேயின் ஆதிக்கம்

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அம்பாறை தயாகமகே அம்பாறையில் இருந்து 4 சிங்கவர்களை நியமித்துள்ளார். ஐந்தாவது சிங்களவரான நவின் அதிகாரம் என்பவர் காணி மீட்பு அதிகாரி என்பவரை ஹக்கீம் நியமித்துள்ளார்.

அம்பாறை தயா கமகே தனியாக 4 சிங்களவரை நியமிக்க முடியுமானால் இந்த முஸ்லிம் அரசியல்வாதிகளின் நிலைதான் என்ன? இப்படியான ஒரு சிங்கள ஆதிக்கத்தை யாழ் வளாகம் மற்றும் வந்தாறுமூலை வளாகத்தில் காட்ட முடியுமா? நடந்து விடுமா?

வாக்கு வேட்டைக்காக முஸ்லிம் பகுதியில் பவனிவரும் தயாகமகே முஸ்லிம்களின் உரிமைகளைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றார். சில சொரணையற்ற முஸ்லிம்கள் தயாகமக்கு மாலை அணிவித்து வரவேற்று வருகின்றார்கள்.

கடந்த காலங்களில் இதே ஐ.தே.க. யில் அமைச்சராக இருந்து கொண்டு தயாரட்ன தீவவாபி மற்றும் ஒலுவில் பொன்னம்வெளி முஸ்லிம் மக்களின் வயல்காணிகளைச் சுவிகரித்து வந்தார். இப்போது தயாகமகே கிளம்பிட்டாரய்யா.இதைத் தட்டிக் கேட்க நாதியற்ற கூட்டங்களாக முஸ்லிம் சமூகம்.ஐயோ பாவம்.

கருணா நியமித்த உபவேந்தர்

தற்போதைய உபவேந்தரின் நியமனத்தில் முன்னாள் அமைச்சர் கருணா மிகவும் கவனம் செலுத்தி ஜனாதிபதி மஹிந்தரிடம் சிபார்சு பெற்று நியமித்துக் கொடுத்தார்.

பாருங்கள் அம்பாறையில் அப்போது அமைச்சர் அதாவுல்லா அமைச்சர் ஹக்கீம் மற்றும் இந்த முஸ்லிம் எம்பிக்கள் இருக்கும் போது கருணா ஒலுவில் பல்கலைக்கழகத்திற்கு உபவேந்தர் நியமனம் செய்கின்றார்.

இது குறித்து நான் கருணாவிடம் அப்போது ஒரு நேர்முகம் காணலில் கேட்ட போது என்னிடம் முஸ்லிம் ஒருவர் கேட்டார், நான் இனமதம் பாராது செய்து கொடுத்தேன் என்றார்.

பதிவு செய்யப்பட்ட செவ்வியில் உள்ளது..பாருங்கள் இந்த முஸ்லிம் அரசியல் வியாபாரிகள் இந்தப் பல்கலைக்கழகத்தை கண்டு கொள்ளாததால் கருணா உபவேந்தரை நியமனம் செய்கின்றார்.

கண்டு கொள்ளாத முஸ்லிம் அரசியல்வாதிகள்

முஸ்லிம் சமூகத்தை அதிகமாக் கொண்ட இந்தப் பல்கலைக்கழகத்தில் என்றுமில்லாதவாறு சிங்களவர்கள் அதிமாகக் கொண்ட கவுன்சில் நியமிக்கப்பட்டதானதை எந்வொரு முஸ்லிம் அரசில்வாதியாவது ஜனாதிபதியிடமோ அல்லது பிரதமரிடமோ இன்னும் இதுபற்றி முறையிடவில்லை என்பதுதான் இன்னும் பெருத்த வெட்கம்.

பொதுவாக மர்ஹ_ம் அஷ்ரப்பிற்குப் பின்பு முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒலுவில் பல்கலைக்கழகத்தை கண்டு கொள்வதேயில்லை. அங்கு என்ன நடக்கின்றது அங்கு என்ன குறைபாடு உள்ளது என்பது பற்றி எதுவுமே தெரியாது. காரணம் தற்போதயை முஸ்லிம் அரசியல்வாதிகளில் மாகாண சபை உறுப்பினர் ஜெமீலைத் தவிர மற்ற யாருக்கும் பல்கலைக்கழகத்தைப் பற்றித் தெரியாது.

மழைக்காவது அந்தப் பக்கம் ஒதுங்கியிருக்கலாம்.கழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசம்.பல முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு பல்கலைக் கழக அனுபவம் இல்லாத குறைபாடும் ஒரு காரணமாக அமைகின்றது.

இவ்வளவு பெரிய கல்வி நிறுவனத்தின் மீது இவர்கள் அக்கறை செலுத்தாத காரணத்தால்தான் சிங்கள ஆதிக்கம் மற்றும் அங்கு தடி எடுத்தவர்கள் எல்லாம் வேட்டைக் காரனாகி விட்டார்கள்.

அம்பாறையில் இருந்து இரண்டு சிங்கள டாக்டர்களும் அம்பாரையில் இருந்து பிரதேச செயலாளரும் மற்றும் தயாகமகேயின் ஆடைத் தொழிற்சாலை அதிகாரியும் கவுன்சில் உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றார்கள் என்றால் கல்முனை சம்மாந்துறைப் பகுதிகளில் டாக்டர்கள் பிரதேச செயலாளர்கள் இல்லையா?

இந்தச் சிங்கள ஆதிக்கத்தை நேர்மைமிக்க ஜனாதிபதியிடம் முறையிட வேண்டிய பாரிய பொறுப்பு இந்த முஸ்லிம் அரசியல்வாதிகளின் கடமையில் இல்லையா? அமைச்சர் பதவியும் பாதி அமைச்சும்தானா இவர்களின் பொறுப்பு.

அமைச்சர் ஹக்கீமைப் பொறுத்த மட்டில் அவர் இந்த கல்வி நிறுவனத்தை கண்டு கொள்ளவேண்டிய தேவையே இல்லை.அவர் ஒரு போதும் இந்த வளாகத்தின் நிர்வாகத்தை கண்டு கொண்டதேயில்லை.

காரணம் ஹக்கீம் கிழக்கைச் சேராதவர். அவருக்கத் தேவையான பதவிகளை நியமனம் செய்துவிட்டு தானும் தன்வேலையும் என்றிருப்பார்.

கல்முனை, சம்மாந்துறைப் பகுதிகளைக் கொண்ட பலர் உபவேந்தராக நியமனம் செய்யக் கூடிய அத்தனை தகுதிகள் இருந்தும் வெளியிடங்களைச் சேர்ந்தவர்கள் உபவேந்தராக பின்வழிக் கதவுகள் மூலமாக வருவதற்கு வரிந்து கட்டிக் கொண்டு அலைகின்றார்கள்.

தற்போது சுகபோகம் அனுபவித்துக் கொண்டு வளாகத்தை நாறடித்துக் கொண்டிருக்கின்ற ஒரு கூட்டம் மீண்டும் சுகபோகத்துக்காக தங்களுக்கு விரும்பியபடி கும்மியடிப்பதற்காக தங்களுக்கு விருப்பமான வெளியூர்காரரை உபவேந்தராக நியமிக்க காய்நகர்த்தி வருகின்றார்கள். அடுத்த வாரம் உப வேந்தர் நியமனம் நடந்து விடும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum